தொடர்
Published:Updated:

பாடி பியர்ஸிங் அழகா... ஆபத்தா?

பாடி பியர்ஸிங்  அழகா... ஆபத்தா?
பிரீமியம் ஸ்டோரி
News
பாடி பியர்ஸிங் அழகா... ஆபத்தா?

அழகு

பாடி பியர்ஸிங்  அழகா... ஆபத்தா?

டாட்டூ போடுவதுபோல `பாடி பியர்ஸிங்’ எனப்படும் உடல் பாகங்களில் ஆபரணங்கள் பொருத்திக்கொள்வது இப்போது ட்ரெண்ட். நம் ஊரில் பெண்கள் காதுகுத்தி, கம்மல் போடுவார்கள். சிலர் மூக்கு குத்திக்கொள்வது உண்டு. உலகின் பல்வேறு நாகரிகங்களில் இப்படி உடலில் துளைகள் இட்டு, அதில் நகைகள் போட்டு தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் பாரம்பரியம் உண்டு. எகிப்தியர்கள், ரோமானியர்கள், கிரேக்கர்கள் எனப் பலரும் பச்சை குத்தி, உடல் முழுக்க துளைகள் இட்டு நகைகள் அணிவர்.

நம் ஊரில் காது, மூக்குக்கு மட்டும் இருந்த பாடி பியர்ஸிங் இப்போது, உடலெங்கும் ஊர்வலம் போக ஆரம்பிச்சாச்சு.

“அவரவர் விருப்பத்தைப் பொருத்த விஷயம் இது. ஆனால், சுகாதாரமற்ற சூழலில் பாடி பியர்ஸிங் செய்வதன் மூலமும், முறையாகப் பராமரிக்காததன் மூலமும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்” என்கிறார் தோல்நோய் சிகிச்சை நிபுணர் ஆர்த்தி.

பாடி பியர்ஸிங்  அழகா... ஆபத்தா?

“பாடி பியர்ஸிங் செய்யும்போது, 100 சதவிகிதம் சுத்தமான முறையில் செய்யப்படுகிறதா என்பது முக்கியம். துளையிட்ட இடத்தில் தங்கம், ஸ்டீல் உள்ளிட்ட உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகையை அணிகின்றனர். உலோகத்தில் இருக்கக்கூடிய நச்சுக்களினால் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நாக்கில் துளையிடுவதனாலேயே அதிக அளவில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற சூழலில், துளையிடுவதனால், ஹெச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று போன்ற பாதிப்பு கள் ஏற்படலாம். நுரையீரலில் காசநோய் வருவதைப் போல், தோலிலும் வரக்கூடும். தொடர்ந்து உலோகம் நம் தோலில் படும்போது கட்டிகளும் ஏற்படலாம். முதலில் அவரவர் தோலின் தன்மையையும், உடலின் ஆரோக்கியத்தையும் பொறுத்து மருத்துவரிடம் பரிசோதித்து, கை தேர்ந்த நிபுணர் களிடம் சுத்தமான முறையில் செய்துகொண்டால் நோய்த் தொற்றில் இருந்து தப்பலாம்” என்கிறார்.

பாடி பியர்ஸிங் எப்படிச் செய்யப்படுகிறது என இந்தத் துறையில் 20 ஆண்டுகளாக இருக்கும் நவீனிடம் கேட்டோம்.

“உடலில் துளையிடுவதற்கு, முறையாக, சுத்தமான சுகாதாரமான கருவிகளைப் பயன்படுத்தும் கைதேர்ந்த நிபுணரை அணுக வேண்டும்.

பாடி பியர்ஸிங்  அழகா... ஆபத்தா?

கர்ப்பிணிகள், கருத்தரிக்க விரும்பு பவர்கள், சர்க்கரை நோயாளிகள், தோல் நோய், ஹீமோபிலியா எனப்படும் ரத்தக்கசிதல் பிரச்னை, இதய நோய்கள் உள்ளவர்கள் துளையிடுதலைத் தவிர்க்க வேண்டும்.

துளையிடுவதுதானே என அலட்சியமாக, சுகாதாரமற்ற இடங்களில் பாடி பியர்ஸிங் செய்தால், அலர்ஜி, ரத்தக்கசிவு, நரம்பு மற்றும் பற்களுக்குச் சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. பாக்டீரியா, ஹெச்.ஐ.வி வைரஸ் போன்ற தொற்றுக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

எல்லா இடங்களிலும் காயங்கள் ஆறும் காலம் ஒரே மாதிரியாக இருக்காது. சில இடங்களில் காயம் முற்றிலும் ஆற நான்கு மாதங்கள்கூட ஆகலாம். ஃபேஷன், அழகு என அதற்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை காட்டுவோமே!”

- பி.கமலா,

படங்கள்: அ.முத்துக்குமார்

துளையிட்ட பிறகு செய்யக்கூடாதவை!

துளையிட்ட இடத்தில் நேராக வெயில்படுவது, பாடி லோஷன், வியர்வை, எச்சில், முத்தமிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமான உடை அணிவது, கைகளால் அந்த அணிகலன்களைத் தீண்டிக்கொண்டே இருப்பது போன்றவை கூடாது. வாய்ப் பகுதியில் துளையிட்டிருப்பவர்கள் சிகரெட், புகையிலை, பீடா, ஆல்கஹால் போன்ற போதைப் பொருட்கள் மற்றும் டீ, காபி போன்ற வற்றையும் தவிர்க்க வேண்டும்.