Published:Updated:

வாய் திறந்து சிரிக்கலாம்... வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!

வாய் திறந்து சிரிக்கலாம்... வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வாய் திறந்து சிரிக்கலாம்... வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!

வாய் திறந்து சிரிக்கலாம்... வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!

வாய் திறந்து சிரிக்கலாம்... வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!

வாய் திறந்து சிரிக்கலாம்... வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!

Published:Updated:
வாய் திறந்து சிரிக்கலாம்... வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வாய் திறந்து சிரிக்கலாம்... வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!
வாய் திறந்து சிரிக்கலாம்... வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!

‘முதல் அபிப்பிராயமே, சிறந்த அபிப்பிராயம்’ (first impression is the best impression) என்று சொல்வார்கள். அந்த அபிப்பிராயத்தை உருவாக்குவது அல்லது உடைப்பது நம்முடைய புன்னகைதான். அழகான முகத்தின் அடையாளம் புன்னகை. அந்தப் புன்னகையை அழகாக்குவது சீரான பல் வரிசைதான். ஆனால் அழகான, சீரான பல் வரிசை அனைவருக்கும் இயற்கையாக அமைவது இல்லை. சிலருக்குத் தெற்றுப்பல், எத்துப்பல் இருக்கும். இளம் வயதில் தெற்றுப்பல் ஏற்படுத்தும் உளச்சிக்கல் சாதாரணமானது அல்ல. ஒருவரின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்து, தாழ்வு மனப்பான்மையில் தள்ளிவிடும். இவர்களுக்கு நவீன மருத்துவம் தரும் நம்பிக்கைதான் பிரேசஸ் (Braces) எனும் ‘க்ளிப்’ பொருத்தும் சிகிச்சை.

பற்கள் கோணலாகவோ, இடைவெளிவிட்டோ, தூக்கலாகவோ காணப்படுபவர்களுக்குப் பற்களைச் சீரமைக்க சிகிச்சை உள்ளது. பிரேசஸ் பொருத்துவதற்கு வயது வரம்பு கிடையாது. எந்த வயதிலும் இந்தச் சிகிச்சையைப் பெறலாம். முன்பு பற்களின்மீது பொருத்தும் வகையில் மெட்டல் பிரேசஸ் பயன்படுத்தப்பட்டது. இதை தினமும் கழற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். துருத்தலான பல் அமைப்பு கொண்டவர்கள், இடைவெளி உள்ள பற்கள் உள்ளவர்களுக்கு இந்த மெட்டல் பிரேசஸ்கள் பொருத்தினாலும், பற்களின் சீரமைப்பு சரியாகுமே தவிர பிரேசஸ் இருப்பது தெரியும்.

இந்தப்பிரச்னையைப் போக்கும் வகையில், பிரேசஸ் அணிந்திருப்பது வெளியில் தெரியக் கூடாது என்று விரும்புவர்களுக்காக செராமிக் பிரேசஸ் அறிமுகமாயின. ஆனால், இந்த முறையிலும் உணவுத்துகள்கள் மாட்டிக்கொள்வது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால், பற்களின் உள்பகுதியில் பிரேசஸ் அணிந்துகொள்ளும் முறை (Lingual treatment) அறிமுகம் ஆனது. இந்த முறையில், பற்களுக்கு இடையிலான இடைவெளி மட்டுமே குறைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாய் திறந்து சிரிக்கலாம்... வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!

இன்விசலைன் பிரேசஸ் (Invisalign braces)

பிரேசஸ் பொருத்தியிருப்பது கண்களுக்குப் புலப்படாமல் இருப்பதற்காக தற்போது இன்விசலைன் பிரேசஸ் எனும் புலப்படா பிரேசஸ் வந்துள்ளன. இந்த இன்விசலைன் பிரேசஸை நிரந்தரமாகப் பொருத்திக்கொள்ளலாம். இதனோடே நாம் பல் துலக்குவது, உறங்குவது, உண்பது என அனைத்தையும் செய்யலாம். இவை, ஒருவரின் பல் அமைப்புக்கு ஏற்றவாறு கேட்/கேம் என்னும் 3டி தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்படுகின்றன. பலவகையான தாடை அமைப்புகளுக்கும் ஏற்றவாறு எல்லா அளவுகளிலும் இவை கிடைக்கின்றன.

இந்த பிரேசஸைத் தயாரிக்க பிஸ்பினால் ஏ (BPA free - bisphenol A) என்னும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது இல்லை. இந்த பிரேசஸ், பல் வரிசையை ஒருங்கிணைப்பதோடு மட்டுமல்லாமல், சிரிக்கும்போது பிரேசஸ் அணிந்திருப்பது தெரியாது என்பதால், தயக்கமின்றி வாய்விட்டுச் சிரிக்கவும் உதவுகிறது. உணவுத் துணுக்குகள் ஏதும் இதற்குள் சிக்காது. ஒரே நாளில் இந்த பிரேசஸைப் பொருத்திக்கொண்டு வீடு திரும்பலாம்.

வாய் திறந்து சிரிக்கலாம்... வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!

ஒருவரின் தாடை மற்றும் பற்களின் அமைப்பை ஸ்கேன் செய்து ஆராய்ந்து, பிறகு அதற்கேற்ப பிரேசஸ்கள் பொருத்தப்படுகின்றன.  தரமான, பாதுகாப்பான, உத்தரவாதமான, நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்கக் கூடிய இந்த பிரேசஸ்களைப் பொருத்த குறைந்தது 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

*இந்த பிரேசஸ் பொருத்தினால், பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே ‘ஃப்ளாஸ்’ என்ற மெல்லிய மெழுகு நூலைப் பயன்படுத்திச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

*தேவை இல்லாதபோது இந்த பிரேசஸைக் கழற்றி வைத்துக்கொள்ளவும் முடியும்.

*தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேல் அணிந்திருந்தாலும் எந்த ஒரு பின்விளைவும் ஏற்படாது.

*குழந்தைகளுக்கு இந்த பிரேசஸ் பரிந்துரைக்கப்படுவது இல்லை. பெரியவர்கள் இந்த பிரேசஸைப் பயன்படுத்தலாம்.

இது புன்னகைக்க வைக்கும் விஷயம்தான், இல்லையா?

- ஆ.ஐஸ்வர்ய லட்சுமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism