Published:Updated:

சகலகலா சருமம்!

சகலகலா சருமம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்!

புதிய பகுதி

சகலகலா சருமம்!

ண்டுதோறும் ஒரு வயது அதிகரிக்கும் என்பது வாழ்வின் விதி. ஆனால், வயதின் அடையாளம் தோற்றத்தில் வெளிப்பட வேண்டியதில்லை. `இந்த வயதிலும் எப்படி இந்த இளமை’ என பிறரை வியக்க வைக்கும் மந்திரம் வேறொன்றுமில்லை. அது நம் சருமம்தான்!

அழகு என்பதே சருமத்தில்தான் தொடங்குகிறது. அழகான சருமம் என்பது ஓர் அதிசயம் அல்ல. அதற்குத் தேவை கொஞ்சம் அக்கறை மட்டுமே.

அழகு என்பதைத் தாண்டியும் சருமம் அளிக்கிற பலன்கள் பல உண்டு. முறையான சருமப் பராமரிப்பு என்பது ஒட்டுமொத்த உடல்நலத்துக்குமே வழி வகுக்கும். மூப்புத் தோற்றத்தைத் தடுத்து புது உற்சாகம் பெறச் செய்யும். இப்படி சகலகலா சருமத்தின் பின்னணியில் ஏராளமான விஷயங்கள் மறைந்திருக்கின்றன. சருமம் பற்றி  அறிவியல் முதல் அழகியல் வரை அனைத்தும் அலசுகிறார்கள் நிபுணர்கள். கூடவே அனுபவம் பகிர்கிறார்கள் பிரபலங்கள். 

இந்த இதழில் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்...

சகலகலா சருமம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“உடலின் மிகப்பெரிய உறுப்பு சருமம். இது 2 சதுர மீட்டர் பரப்புள்ளது. எபிடெர்மிஸ், டெர்மிஸ் மற்றும் கொழுப்பு என 3 அடுக்குகளைக் கொண்டது. மேலுள்ள எபிடெர்மிஸ் அடுக்கு   மிகவும் கடினமானது. அதிலுள்ள செல்களின் பெயர் கெரட்டினோசைட்ஸ். எபிடெர்மிஸுக்கும் டெர்மிஸுக்கும் இடையில் ஒரு ஜங்ஷன் இருக்கும். எபிடெர்மிஸ் அடுக்கின் ஒரு பகுதிக்குப் பெயர் பேஸல் லேயர். அங்கிருந்துதான் புதிய செல்கள் வளரும். அவை வளர்ந்து எபிடெர்மிஸ் பகுதியை அடையும்போது இறந்த செல்களாகி உதிர்ந்து பிறகு புதிய செல்கள் உருவாகும். இந்தச் செயல் 28 முதல் 40 நாட்களுக்கு ஒரு முறை நடக்கும்.

எபிடெர்மிஸ் அடுக்கு என்பது ஒருவித பாதுகாப்பு அரணாகவும் இருக்கிறது. வாட்டர் ப்ரூஃப் ஆகச் செயல்படுகிறது. பாக்டீரியா, வைரஸ் மற்றும் அந்நியப் பொருட்கள் எதுவும் உடலினுள் நுழைந்து விடாதபடி பாதுகாக்கிறது. தவிர ஏதேனும் அடிபட்டாலும் உள் உறுப்புகள் பாதிப்படையாதபடி இந்த அடுக்குதான் காக்கிறது.

பேஸல் அடுக்கில் மெலனோசைட்ஸ் என்பவை இருக்கும். இதுதான் மெலனின் என்கிற நிறமியை விடுவிக்கிறது. புற ஊதாக் கதிர்வீச்சை (அல்ட்ரா வயலட் ரேடியேஷன்) வடிகட்டுகிறது. அதுதான் சருமப் புற்றுநோய் வராமல் தடுக்கவும் காரணமாகிறது. டி.என்.ஏ பாதிக்கப்படாமலும் பாதுகாக்கிறது. வெயில் பட்டதும் சருமம் கருத்துப் போகக் காரணமும் இந்த மெலனின்தான்.

எபிடெர்மிஸில் உள்ள இன்னொரு செல் லேங்கர்ஹான் (Langerhans). இது நோய் எதிர்ப்புச் செயலுக்கு உதவுகிறது. பாக்டீரியா தொற்று ஏதேனும் ஏற்பட்டால் அங்கேயே அதை எதிர்த்துப் போராடி வெளியில் அனுப்பி விடும்.

சருமத்தின் அடுத்த அடுக்கு டெர்மிஸ். நிறைய இழைகளைக் கொண்டது. சருமத்துக்கு பலம் தருபவை இந்த இழைகள்தான். எலாஸ்டின், கொலாஜன் போன்ற திசுக்களும் இங்கேதான் இருக்கின்றன. இவைதான் சருமத்தை மீள்தன்மையுடன் வைத்திருக்கின்றன. டெர்மிஸ் அடுக்கில்தான் நரம்புமுனைகள் இருக்கின்றன. தொடுதல், வலி, வெப்பம் மற்றும் குளிர் மற்றும் அழுத்தம் போன்ற உணர்வுகளை இவற்றின் வழியேதான்  உணர்கிறோம்.

சகலகலா சருமம்!

வியர்வைச் சுரப்பிகளும் இங்கேதான் இருக்கின்றன. அவை உடலின் வெப்பநிலையை சீராக வைப்பவை. சூடு அதிகமாகிற போது நமக்கு வியர்க்கிறது. அந்த வியர்வை ஆவியாகும்போது உடல் குளிர்ச்சியடைகிறது.

சீபம் என்கிற எண்ணெயை சுரக்கும் செபேஷியஸ் சுரப்பியும் இந்த அடுக்கில்தான் இருக்கிறது. இந்தச் சுரப்பிகள் கூந்தலின் நுண்ணறைகளுடன் இணைக்கப் பட்டிருக்கின்றன. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பவை இவை. டெர்மிஸில் கூந்தல் நுண்ணறைகளும் இருக்கின்றன. அழகைத் தருவது, உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது, காயங்களில் இருந்து பாதுகாப்பது போன்றவை கூந்தல் நுண்ணறைகள்தான்.

அடுத்தது ரத்த நாளங்கள். சருமத்துக்கு ஊட்டங்களைக் கொடுப்பதும், உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதும் இதன் வேலை.

அடுத்தது கொழுப்பு அடுக்கு. இதுவும் உடலின் வெப்பம் மற்றும் குளிர்ச்சியைக் கட்டுப்படுத்திப் பாதுகாப்பாக வைக்கிறது. மெத்தை போன்ற ஓர் அமைப்பைத் தருகிறது. ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகிறது.

ஆகவே, சருமத்தை அழகின் வெளிப்பாடாக மட்டுமே பார்க்காமல், அதன் முக்கியத்துவம் உணர்ந்து, அதற்கு மதிப்பளிக்கப் பழகுவோம்!

- ஆர்.வைதேகி

சருமத்தின் செயல்பாடுகள்

புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பது, நீர்ச்சத்து இழப்பிலிருந்து பாதுகாப்பது, நுண்ணுயிர்களிடம் இருந்து பாதுகாப்பது.

வெப்பம், குளிர், வலி போன்ற உணர்வுகளை அறிய உதவுகிறது.

உடல் வெப்பநிலையை முறைப்படுத்துகிறது.

எதிர்ப்பு சக்தி அளிக்கிறது.

எலாஸ்டின் மூலம் உடலின் வளர்ச்சி மற்றும் அசைவுக்கு உதவுகிறது.

வியர்வை மூலம் யூரியா, அமோனியா, யூரிக் அமிலம் போன்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

வைட்டமின் டி உற்பத்திக்கு உதவுகிறது. புறஊதாக் கதிர்கள் சருமத்தின் வழியே ஊடுருவப்பட்டு `7 டீ ஹைட்ரோ கொலஸ்ட்ரால்’ என்கிற ரசாயனத்துடன் இணைந்து, `வைட்டமின் டி 3’ உருவாகிறது.

செலிப்ரிட்டி ஸ்கின்கேர்

அலுப்பு காட்டினா, அழகு டாட்டா காட்டிடும்!’ - நடிகை த்ரிஷா

“அழகா பிறக்கிறது இயற்கையோட வரம். அந்த அழகைத் தக்க வச்சுக்கிறதோ வாழ்க்கையோட பெரிய சவால். என்னை மாதிரி நடிகைகளுக்கு அது வாழ்நாள் சவால்...

காபி, குடிக்கிற பழக்கத்தை விட்டுப் பல வருஷங்கள் ஆச்சு. கிரீன் டீ மட்டும்தான் குடிக்கிறேன்.  தாகம் எடுக்காத போதும் தண்ணீர் குடிச்சிட்டே இருப்பேன். சாத்துக்குடி ஜூஸ், மாதுளை ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், தர்பூசணி ஜூஸ்... இதெல்லாம் சரும அழகுக்கு உதவும். சாப்பாட்டுல

ஆலிவ் ஆயில் உபயோகிக்கப் பழகிட்டோம். பார்ட்டி, ஃபங்ஷன் போகும்போது சூப், சாலட் மட்டும்தான் சாப்பிடுவேன்.

இதையெல்லாம் தாண்டி, பராமரிப்பும் ரொம்ப முக்கியம். ராத்திரி எவ்வளவு லேட்டா ஷூட்டிங் முடிச்சிட்டு வந்தாலும், மேக்கப் ரிமூவர் வச்சு சருமத்தை சுத்தம் செய்துட்டு, நைட் கிரீம் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவேன். அலுப்பு காட்டினா, அழகும் உங்களுக்கு டாட்டா காட்டிடும்!’’