Published:Updated:

சகலகலா சருமம்! - 9

சகலகலா சருமம்! - 9
பிரீமியம் ஸ்டோரி
சகலகலா சருமம்! - 9

கீதா அஷோக், அரோமாதெரபிஸ்ட் மற்றும் அழகுக் கலை ஆலோசகர்

சகலகலா சருமம்! - 9

கீதா அஷோக், அரோமாதெரபிஸ்ட் மற்றும் அழகுக் கலை ஆலோசகர்

Published:Updated:
சகலகலா சருமம்! - 9
பிரீமியம் ஸ்டோரி
சகலகலா சருமம்! - 9

ளீரென வசீகரிக்கும் நிறத்துடன் இருப்பார்கள்....

பளிங்கு போல  சருமம் மின்னும்...

சகலகலா சருமம்! - 9இதற்கெல்லாம் திருஷ்டி வைத்தது போன்று கழுத்தைச் சுற்றியும் முகத்திலும் குட்டிக்குட்டி முடிச்சுகள் முகம் சுளிக்க வைக்கும்.

அவைதான் மருக்கள்.

மரு என்பது மச்சம் போன்று அழகானதல்ல... அருவருப்பானது. ஒன்று இரண்டாகும், இரண்டு நான்காகும். நாளுக்கு நாள் பல்கிப் பெருகும்.

மரு ஏன் ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் அதிகம் வரும்? தவிர்க்க வழிகள் உண்டா? வந்த பிறகான சிகிச்சைகள் என்ன? சகலத்தையும் பார்ப்போம்.

பரம்பரையாக வரக்கூடிய சரும பிரச்னைகளில் மருவும் ஒன்று

பாப்பிலோமா வைரஸால் ஏற்படும் மருக்களுக்கு முக்கியக் காரணம் சரியான சருமப் பராமரிப்பின்மையே. மருவை சருமத்தில் கூடுதலாக ஏற்படக்கூடிய திசுக்களின் கூட்டு என்றும் சொல்லலாம். எண்ணெய் பசையுள்ள, சரியாகச் சுத்தப்படுத்தப்படாத சருமத்தில், ஃபிரெக்கிள்  எனப்படும்  மச்சம் மாதிரியான சிறு சிறு புள்ளிகளாக முதலில் தோன்றும். இந்த நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருவாக உருவெடுப்பதற்கு முன்பே தடுக்கமுடியும். இயல்பிலேயே எண்ணெய் மற்றும் வியர்வைச்சுரப்பிகள் அதிகமாகச் சுரப்பவர்களுக்கு மருக்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

சருமத்தில் சன்ஸ்கிரீனோ கிரீமோ பவுடரோ எதுவுமே போடாமல் வெளியே போகும்போது சுற்றுப்புறச் சூழலால் வரும் தூசுகள் நம் சருமத் துவாரங்களை அடைக்கின்றன.

தூசுகள் எண்ணெய்பசையுடன் சேரும் போது சருமத்துவாரங்களை அடைப்பதால் தொற்று ஏற்பட்டு சருமத்தின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸிலிருந்து மருக்களாக வெளித் தள்ளப்படுகின்றன.  உடலில் எங்கு வேண்டுமானாலும்  மரு வரலாம். ஓர் இடத்தில் ஒரு மரு ஏற்பட்டாலும் அது சருமத்தின் பல இடங்களுக்கும் கட்டாயம் பரவும்.

சுத்தமின்மைதான் எல்லாவற்றிற்கும் மூலக்காரணம். சருமத்தை முறையாகச் சுத்தப்படுத்தாமல் இருப்பதும், தடிமனான அணிகலன்கள் கழுத்தில் அழுத்துவதன் காரணமாக ரத்த ஓட்டம் தடைப்படுவதும் முக்கிய காரணங்கள். இத்தகைய மருக்கள் முடிச்சுகள் போல் கொத்தாக வரலாம்.

மருவைச் சுற்றி நூலைக்கட்டுவது, குதிரை முடியைக் கட்டுவது போன்றவற்றை அந்தக் காலத்தில் செய்து வந்தார்கள். அப்படி இரண்டு மூன்று நாள்கள் இறுக்கிக் கட்டும்போது ரத்த ஓட்டமின்றி அந்த மரு விழலாம். ஆனால், டெர்மிஸ் என்ற உள் லேயரில் இருக்கக்கூடிய பாக்டீரியா அழியாது. அதனால் அதே இடத்தில் திரும்ப வரும்... மற்ற இடங்களுக்கும் பரவும்.

மருக்களை நீக்க சிறந்த வழி ‘வார்ட் கார்ட்டரிங்’ முறையில் மெல்லிய கம்பி மூலம் மின்சாரத்தைச் செலுத்தி அகற்றலாம். ஆனால்,  அதற்கு அனுபவமும் பொறுமையும் அவசியம்.  இவை இரண்டும் இல்லாமல் கையாளும் போது மருவை ஒட்டியுள்ள தோல் பகுதி தீய்க்கப்பட்டு விடும். அந்த வடு நிரந்தரமாகவும் இருக்கும். மருவை அகற்றியதும் அல்ட்ராசானிக் கொடுப்பதால் உள்ளே உள்ள தொற்றும் அழியும். அந்த இடத்தில் மரு மீண்டும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்தச் சிகிச்சை எடுக்குமுன் மருத்துவரை ஆலோசித்துக் கொள்வது நல்லது.

போடோஃபைலம் (podophyllum) என்ற ஆங்கில மருந்து உள்ளது. கள்ளிப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மருந்தைக் கொண்டும் மருவை அகற்றலாம். ஆனால் மிகமிக ஜாக்கிரதையாக உபயோகிக்கப்பட வேண்டும். சரியாக மருவின்மேல் வைக்கும்போது தொற்று நீங்கி மரு மறையும். ஆனால்,  தப்பித் தவறி கண்ணில் பட்டால் அது பார்வையையே பறித்து விடும்.

சாலிசிலிக் ஆசிட் கொண்டுகூட மருக்களை அகற்றலாம். தமிழ் மருத்துவத்தில் அம்மான்பச்சரிசி மூலிகையின் பாலைத் தடவி மரு நீக்கலாம் என்ற குறிப்பு உள்ளது. ஆளி விதையை அரைத்து அந்த விழுதையும் பூசலாம் என்ற குறிப்பும் உள்ளது.

(சருமம் காப்போம்...)

- ஆர்.வைதேகி

செலிப்ரிட்டி ஸ்கின்

வெண்ணெய்ச் சருமத்துக்கு நெய் உதவும்!

``என்னுடைய காலைப்பொழுது ஊற வைத்த பாதாம் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீருடன்தான் விடியும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, சருமம் சுத்தமாகும்.

சகலகலா சருமம்! - 9

கொழுப்புச் சேர்த்துக்கொண்டால் எடை அதிகரிக்கும் என்கிற பயத்தில் ஒரு காலத்தில் அதை முற்றிலும் தவிர்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய சரும வறட்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்போதுதான் என் டயட்டீஷியன் நெய் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்ததும் என் சரும வறட்சி காணாமல் போனது.

ஷூட்டிங் இல்லாத நாள்களில் தயிரும் கடலை மாவும் கலந்த கலவைதான் என் ஃபேவரைட் ஃபேஸ் பேக். ‘எவ்வளவு பெரிய நடிகை நீங்க... தயிரும் கடலை மாவும் பூசுவேன்னு சொல்றீங்களே... நம்பற மாதிரியா இருக்கு’ என நிறையப் பேர் என்னிடம் கேட்டதுண்டு. இது என் பாட்டி காலத்து பியூட்டி சீக்ரெட். வாரம் ஒருமுறையாவது செய்துவிடுவேன். சருமம் பளிச்சென மாறும்.

அவகேடோ பழம் உள்ளுக்குச் சாப்பிடவும் வெளிப் பூச்சுக்கும் மிகச் சிறந்தது. பட்டர் ஃப்ரூட் எனப்படுகிற இந்தப் பழத்தின் சதைப் பகுதியை சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவினால் சருமத்தில் சுருக்கங்கள் தள்ளிப்போகும்.

வெளியூரில் படப்பிடிப்பு நடக்கும்போது முன்கூட்டியே என் சரும மருத்துவரிடம் பேசி, அந்தச் சூழலுக்கு ஏற்ற அழகு சாதனங்களைத் தெரிந்துகொண்டு எடுத்துச் செல்வேன். அழகாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்காக நிறையவே மெனக்கெட வேண்டும். நான் மெனக்கெடுகிறேன்....’’

- நடிகை தமன்னா

அரோமா தெரபியும் உதவும்!

கிரேப் சீட் ஆயிலில் மிர் ஆயில், கேம்ஃபர் ஆயில், டீ ட்ரீ ஆயில், பெர்கமாட்  ஆயில் கலந்து சருமத்தில் கலந்து ஹை ஃபிரீக்வன்சியில் சிகிச்சை  தருவதால்  மரு மற்றும் தொற்று அழியும். 15 வயதுக்கு மேல் உள்ள யாவரும் இந்தச் சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.

சகலகலா சருமம்! - 9

நமக்கு வந்திருப்பது மருவா பாலுண்ணியா என்பதைத் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஸ்கின் டாக் (skin tag) எனப்படும் உபரியான  திசு வளர்ச்சியும்  கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மருதானா என்று தெரியாமல் சுயமருத்துவத்தில் இறங்கக்கூடாது. ஸ்கின் ஸ்கேனிங் மூலம் மருவின் தன்மையைக் கண்டறிந்து நீக்குவது பாதுகாப்பானது.

சருமத்தில் திடீரென்று கரும்புள்ளிகள் தோன்றினால் அதனை அதிர்ஷ்ட மச்சம் என்று நாமே முடிவெடுத்து விடாமல் முறையான மருத்துவச் சிகிச்சை எடுக்க வேண்டும். அது மரு வருவதற்கு முந்தைய கரும்புள்ளியாகவும் இருக்கலாம்.

அக்குள், கழுத்து மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் அதிக வியர்வை இருக்கும். அக்குள் பகுதியை ரோமங்களின்றிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். படுக்கச் செல்லும் முன் இந்தப் பகுதிகளை நன்கு துடைத்து ஆன்டி ஃபங்கல் பவுடர் போட்டு விட்டுப் படுப்பது நல்லது.

தனுராசனமும் சர்வாங்காசனமும் மரு வராமல் சருமத்தைக் காக்கும் என்று சொல்லப்படுகிறது. தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளையும் அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும்.