Published:Updated:

சகலகலா சருமம்! - 11

சகலகலா சருமம்! - 11
பிரீமியம் ஸ்டோரி
சகலகலா சருமம்! - 11

கீதா அஷோக், அரோமாதெரபிஸ்ட் மற்றும் அழகுக் கலை ஆலோசகர்

சகலகலா சருமம்! - 11

கீதா அஷோக், அரோமாதெரபிஸ்ட் மற்றும் அழகுக் கலை ஆலோசகர்

Published:Updated:
சகலகலா சருமம்! - 11
பிரீமியம் ஸ்டோரி
சகலகலா சருமம்! - 11

‘எல்லோருக்கும் சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே விருப்பம். இறப்பதற்குத்தான் யாரும் தயாராக இல்லை’ என்றொரு பழமொழி உண்டு.

அனுபவங்களைச் சேகரித்துக் கொள்ள விரும்புகிற பலரும், அப்படித்தான்.... அனுபவங்கள் வேண்டும். ஆனால் வயதாகக்கூடாது என்றே ஆசைப்படுகிறார்கள். இளமைத்தோற்றத்தைத் தக்க வைத்துக்கொள்வதென்பது அதற்காக மெனக்கெடத் தயாராக உள்ள யாருக்கும் சாத்தியமே... அதற்கு முன் சரும அறிவியலையும் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சகலகலா சருமம்! - 11

நம்முடைய சருமத்தின் உள் அடுக்குகளில்  கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என இரண்டு படிமங்கள் உள்ளன. அவைதான் கொழுப்புச் சத்தை உள்வாங்கித் தன்னுள்ளே வைத்து, நம்முடைய சருமம் தளர்ச்சியடையாமலிருக்கச் செய்பவை. நம் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், ஸ்ட்ரெஸ், உடலின் வளர்சிதை மாற்றக் கோளாறுகள், கெமிக்கல்களின் பயன்பாடு போன்றவை நம்முடைய இந்த கொலாஜன் மற்றும் எலாஸ்டினின் புரதச் சேமிப்புகளை அழித்துவிடுகின்றன. அதனால் முகத்தில் சுருக்கங்களும் கோடுகளும், தளர்வும் ஏற்படுகின்றன.

முதுமைத்தோற்றம் ஏற்படுத்தும் உள்காரணிகள்

உடல் இளைப்பதற்காகக் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அறவே இல்லாத உணவுகளைச் சாப்பிடுவது, பரம்பரை ரீதியான ஹார்மோன் கோளாறுகள் மற்றும் சர்க்கரை நோய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சகலகலா சருமம்! - 11

வெளிப்புறக் காரணிகள்

சரியான பாதுகாப்பின்றி வெயிலில் அலைவதால், சூரிய ஒளியினால் ஏற்படக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்ஸ், ரசாயனங்கள் கலந்த அழகு சாதனங்கள், பொருந்தாத ஃபேஷியல்கள், சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை முற்றிலும் நீக்கக்கூடிய ஃபேஸ் பேக்குகள், சோப்புகள், மாசு நிறைந்த சூழல்.

சருமத்தொய்வைச் சரிசெய்ய முடியுமா?

சிறு அறுவை சிகிச்சைகள் மூலமாகவும், சிலிக்கான், போடாக்ஸ் மற்றும் ஃபில்லர்ஸ் எனப்படும் இன்ஜெக்ஷன் மூலமாகவும் தொய்வடைந்த சருமத்தை டைட் செய்ய முடியும். இதை ‘ஃபேஸ் லிஃப்டிங்’ என்கிறோம்.  இதன் மூலம் சருமம் மேலே இழுக்கப்பட்டு உப்பினாற்போல மாறும். அதனால் சருமத்தின் தளர்வு மறைந்து இளமையாகத் தெரியும் ஆனால் இது நிரந்தரமானதல்ல. அந்தத் தோற்றத்தைத் தக்க வைத்துக்கொள்ள மீண்டும் மீண்டும் அதே சிகிச்சையைத் தொடர வேண்டியிருக்கும்.

அடிக்கடி செய்வதால்  நரம்புத்தளர்ச்சி போன்ற பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் அதிகம். அறுவைசிகிச்சை வேண்டாம் என நினைப்போர்,  ‘நான்இன்வேஸிவ் ட்ரீட்மென்ட்’  சிகிச்சையை முயற்சி செய்யலாம். அதில்  சிலவகை மெஷின்களை வைத்து அப்லிஃப்டிங் (uplifting) முறையில் தளர்ந்த சருமம் உறுதியாக்கப்படும்.

வேறு என்ன தீர்வுகள்?

* அரோமா ஆயில்களுடன், முட்டையின் வெண் கரு மற்றும் ஆஸ்திரேலியக் களிமண் கலந்து தயாரிக்கப்படுகிற மம்மி மாஸ்க் சிகிச்சை செய்வதன் மூலம் சருமத்தின் சுருக்கங்களை நீக்கி இளமைத் தோற்றத்தைக் கொண்டுவர முடியும்.

வீட்டுச் சிகிச்சைகள்...

* ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும்   ஃபைட்டோ கெமிக்கல்ஸ் அதிகமாக உள்ள சிவப்பு திராட்சை, உலர் திராட்சை, புரூன்ஸ் எனப்படும் உலர் ப்ளம்ஸ், புளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, வால்நட் மற்றும் பாதாம் பருப்புகளை அதிகளவில் சாப்பிட வேண்டும்.

ஜவ்வரிசி மாவுடன், முட்டையின் வெள்ளைக் கருவும் தேனும் கலந்து முகத்தில் மேல்நோக்கித் தடவி, சிறிது நேரம் கழித்துத் தண்ணீரால் கழுவவும்.

*  வாய் நிறைய தண்ணீர் வைத்துக் கொண்டு, தலையைப் பின்னுக்குச் சாய்த்துச்  சிறிது நேரம் கழித்துத் தண்ணீரைத் துப்பிவிடவும். இது சுருங்கும் சருமப் பகுதியை விரிவடையச் செய்யும்.

* ஆல்கஹால் இல்லாத ரெட் ஒயினில் கரும்புச்சாறு (இஞ்சி சேர்க்காதது) கலந்து ஒருநாள் முழுவதும்  வைத்திருக்கவும். பிறகு அதில் பனைவெல்லம் கலந்து வைக்கவும். முட்டையின் வெள்ளைக்கருவும் தேனும் கலந்து, முகத்தில் பிரஷ் கொண்டு மேல்நோக்கித் தடவி அதன்மேல் காஸ் (gauze) எனப்படும் பேண்டேஜ் துணியைப் போட்டு, அதன் மேல் ஒயின் கலவையைப் பூசி, அரைமணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவவும்.

(சருமம்  காப்போம்...)

- ஆர்.வைதேகி

செலிப்ரிட்டி ஸ்கின்

இஞ்சியும் கற்றாழையும் பின்னே நிறைய  சந்தோஷமும்!

‘’காலையில் எழுந்ததும் இஞ்சிச் சாறு கலந்த தண்ணீர் குடிப்பேன். அது உடலின் உள்ளே இருக்கும் நச்சுகளை வெளியேற்றிவிடும். உள் உறுப்புகள் சுத்தமானால் சருமம் மின்னும். கற்றாழை ஜெல் சாப்பிடுவேன். அது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். அதில் இயற்கையான வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின்  உள்ளதால், சருமத்தை இளமையாக வைத்திருக்கும். சருமத்தை வறண்டு போகாமல் வைக்கும். செரிமானப் பிரச்னை இல்லாமல் வயிற்றைக் காக்கும். தலைக்கும், சருமத்துக்கும் எண்ணெய் வைத்து ஊறிக் குளிக்கும்படி என் அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் எனக்கு அதற்கெல்லாம் நேரமே இருக்காது. வெளிப்பூச்சுகளால் வரும் அழகு செயற்கை யானது. உள்ளுக்குச் சாப்பிடுகிற உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்தினாலே அது அழகு, ஆரோக்கியம் இரண்டையும் பெறலாம்.

இவை எல்லாவற்றையும்விட மிகப் பெரிய பியூட்டி சீக்ரெட் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் சந்தோஷம். எப்போதும் சந்தோஷமாக இருப்பவர்களுக்கு காஸ்ட்லியான அழகு சாதனங்களோ, பார்லர் சிகிச்சைகளோ தேவைப்படாது. இதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.’’

ரெஜினா கேஸண்ட்ரா

காஸ்மெட்டிக் அக்குபஞ்சர் தெரியுமா?

நடிகைகளும் மற்ற துறைப் பிரபலங்களும் இளமைத் தோற்றத்தையும் சரும அழகையும் தக்க வைத்துக் கொள்ள இப்போதெல்லாம் அறுவைசிகிச்சைகளை நாடுவதில்லை. அவர்களின் லேட்டஸ்ட் சாய்ஸ் காஸ்மெட்டிக் அக்குபஞ்சர் என்கிறார் அழகுக் கலை நிபுணர் கற்பகம்.

சகலகலா சருமம்! - 11

சீன மருத்துவத்தில் பிரபலமான அதே அக்குபஞ்சர் சிகிச்சைதான் இது. முகத்தின் அக்குபஞ்சர் புள்ளிகளில் மெல்லிய ஊசிகளைக் குத்திச் செய்யப்படுகிற அதே டெக்னிக்தான் இதிலும் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் சருமத்தின் இளமைக்குக் காரணமான கொலாஜன் உற்பத்தி தூண்டப்பட்டு, சருமச் சுருக்கங்களும் கோடுகளும் மறைக்கப்படுகின்றன.

வாயைச் சுற்றிலும் ‘லாஃப் லைன்’ எனப்படுகிற கோடுகள் தென்படுவதுதான் முதுமையின் முதல் அடையாளம். அடுத்து கண்களைச் சுற்றி ‘க்ரோஸ் ஃபீட்’ எனப்படுகிற சுருக்கங்கள் தென்படும். விரல்களில் சுருக்கங்கள் ஆரம்பிக்கும். மற்ற ஆன்டிஏஜிங் சிகிச்சைகளில் அந்தந்தப் பகுதிகளுக்கு மட்டும்தான் சிகிச்சை கொடுக்க முடியும். ஆனால் காஸ்மெட்டிக் அக்குபஞ்சரில் முகத்தில் கொடுக்கும் சிகிச்சை, ஒட்டுமொத்த உடலுக்குமே பலன் தரும். இயல்பிலேயே அழகான, இளமையான சருமம் வாய்க்கப் பெற்றவர்களும் இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்வதன் மூலம் அதைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்தச் சிகிச்சைக்கு வெறும் 30 நிமிடங்கள் போதும். ஃபேஷியலைவிடவும் குறைவான செலவில் செய்துகொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism