Published:Updated:

சகலகலா சருமம்! - 12

சகலகலா சருமம்! - 12
பிரீமியம் ஸ்டோரி
சகலகலா சருமம்! - 12

தலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்

சகலகலா சருமம்! - 12

தலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்

Published:Updated:
சகலகலா சருமம்! - 12
பிரீமியம் ஸ்டோரி
சகலகலா சருமம்! - 12

ரிப்பு...

இந்த வார்த்தையைப் படிக்கும்போதே உடலில் ஏதோ ஊர்வது போன்ற ஓர் உணர்வு தோன்றும். அரிப்பு

சகலகலா சருமம்! - 12

என்பதை, `அவதி’ என்று பெயர் மாற்றி அழைக்கலாம். அந்தளவுக்கு நம் அனைவரின் வாழ்க்கையிலும் அதை அனுபவித்திருப்போம். எப்போதாவது ஏற்படுவது, அடிக்கடி ஏற்படுவது, எப்போதுமே இருப்பது... என இந்த இம்சை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வந்து படுத்தியெடுக்கும்.

`உலகம் முழுவதும் 20 சதவிகித மக்கள் அரிப்புப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். அரிப்புக்கான காரணங்கள் உள்காரணங்கள், வெளிக்காரணங்கள் என இரண்டு வகைப்படும். சிலருக்கு உடல் முழுவதும் அரிப்பு இருக்கும். வேறு சிலருக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இருக்கும். அரிப்பு மட்டுமல்லாமல் சருமம் சிவந்துபோவது, செதில்செதிலாக வருவது, சரும வறட்சி, சருமத்திட்டுகள், கொப்புளங்கள் போன்றவையும் ஏற்படலாம். பெரும்பாலும் அரிப்பின் தீவிரம் இரவில் அதிகரித்துக் காணப்படும்.

அரிப்புக்கான காரணங்கள்

* அரிப்பு ஏற்படும் பகுதியின் மேல் சிவந்த கொப்புளங்களோ கட்டிகளோ தெரியாவிட்டால், அது சரும வறட்சியின் காரணமாக ஏற்பட்டதாகவே இருக்கும். இத்தகையப் பிரச்னை பெரும்பாலும் வயதானவர்களுக்கும் அதிக நேரம் ஏசி-யில் இருப்போருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

`எக்ஸிமா’ எனப்படும் தோல் அழற்சிப் பிரச்னை, டெர்மடைட்டிஸ் எனப்படும் வீக்கம், சோரியாசிஸ் போன்ற சருமப் பிரச்னைகளின் காரணமாகவும் அரிப்பு அதிகமாக இருக்கும். நரம்புகளைப் பாதிக்கும் மல்ட்டிபுள் ஸ்க்லெரோசிஸ், சர்க்கரைநோய், அக்கி போன்று நரம்புகளைப் பாதிக்கும் பிரச்னைகளாலும் அரிப்பு ஏற்படும்.

சிலவகை ஆன்டிபயாட்டிக் மருந்துகள், ஆன்டிஃபங்கல் மருந்துகள் மற்றும் வலி நீக்கும் மருந்துகளை உட்கொள்வதன் பக்க விளைவாகவும் சிலருக்கு அரிப்பு வரும்.

கர்ப்பக்காலத்தில் பெண் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவால் சிலருக்கு வயிற்றைச் சுற்றிலும் தொடைப் பகுதியிலும் கடுமையான அரிப்பு இருக்கும். தசைகள் விரிவடைவதே இதற்குக் காரணமாகும்.
இவை தவிர, சிலருக்கு உடல் முழுவதும் அரிப்பு இருக்கும். சருமத்தில் எந்த மாற்றமும் தெரியாது. இது, உடலுக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட சில நோய்களின் விளைவாக இருக்கலாம். கல்லீரல் நோய், ரத்தச்சோகை, லுகீமியா, தைராய்டு, லிம்ஃபோமா, சிறுநீரகச் செயலிழப்பு போன்றவை சில உதாரணங்கள்.

குடல் மற்றும் வயிற்றில் நாடாப்புழு, கொக்கிப் புழு மற்றும் நூற்புழுக்கள் இருந்தாலும் உடலெங்கும் அரிக்கும்.

ஒவ்வாமையை ஏற்படுத்தும் அழகுசாதனங்கள், க்ரீம்கள், வாசனைப்பொருள்களாலும்கூட அரிப்பு வரலாம்.

வானிலை மாற்றங்கள்.

முறையற்ற மாதவிலக்குச் சுழற்சி.

நோய் எதிர்ப்புச் சக்தியின்மை.

செரிமானக் கோளாறுகள்.

அதீத கவலை, அளவுகடந்த மகிழ்ச்சி, திடீர் பயம், கோபம், அயர்ச்சி.

பூச்சிக்கடி போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம்.

மருத்துவ ஆலோசனை எப்போது?

அரிப்பு என்பது அலட்சியப்படுத்தக் கூடிய தல்ல. அவசர மருத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டியது என்பதைக் கீழ்க்கண்ட அறிகுறிகள் உணர்த்தும்.

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக அரிப்பு தொடர்ந்தால்.

வீட்டுச் சிகிச்சைகள் எதுவும் உதவாதபோது.

உங்களின் அன்றாடப் பணிகளைச் செய்ய விடாத அளவுக்குத் தீவிரமானால்.

இரவில் தூக்கமிழக்கச் செய்தால்.

அரிப்புடன் அதீத களைப்பு, எடை இழப்பு, காய்ச்சல், சருமம் சிவந்துபோவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகள் சேர்ந்துகொண்டால்.

உடல் முழுவதும் பரவினால்.

துளசி

* கைப்பிடியளவு துளசியை எடுத்துக் கழுவி, அரிப்புள்ள இடத்தின் மீது தேய்க்கவும். துளசி இலைகளைக் கசக்கி சிறிது தேங்காய் எண்ணெயில் சேர்த்து வெதுவெதுப்பாக்கி, அரிப்புள்ள பகுதிகளில் தேய்த்து வருவதும் இதமளிக்கும்.

இவை அல்லாமல், சருமத்தை வறண்டு போகவிடாமல் மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

அதிகமாக அரிக்கும்போது கரடுமுரடாக எதையும் எடுத்துச் சொறிய வேண்டாம்.

அரிப்பு அதிகம் இருக்கும்போது செயற்கையான நிறம் மற்றும் மணம் சேர்த்த சோப், ஷாம்பூ, சென்ட் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

எளிதில் செரிமானமாகும் காய்கறிகள், பழங்களைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். புளிப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மீன், கருவாடு மற்றும் சிவப்பு மிளகாயைத் தவிர்க்க வேண்டும்.

எல்லா உணவுகளிலும் மஞ்சள் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட வேண்டியது அவசியம்.

உள்ளாடைகளை வெயிலில் உலரவைத்து, பிறகு இஸ்திரி செய்து அணிய வேண்டும்.

சிலருக்குச் சருமத் துவாரங்கள் திறந்து கொள்வதற்கான சிகிச்சைகள் தேவைப் படலாம். நீராவிக் குளியல், சூடான டவல் சிகிச்சை போன்றவை பரிந்துரைக்கப்படலாம். தேவையற்ற நச்சுக்கழிவுகளை வியர்வையின் மூலம் வெளியேற்றச் செய்யும் இந்தச் சிகிச்சைகளுக்குப் பிறகு அரிப்பு குறையும்.

(சருமம்  காப்போம்...)


- ஆர்.வைதேகி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செலிப்ரிட்டி ஸ்கின்

ஸ்விம் பண்ணுங்க... ஸ்கின் அழகாகும்!

``பாட்டியும் அம்மாவும் கொடுத்த அழகு இது. சிந்திப் பெண்களின் சரும அழகு பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. சரும நிறம்தான் சிந்திப் பெண்களின் அடையாளமே. இயல்பாக அமைந்த அந்த அழகைத் தக்கவைத்துக் கொள்வதை மட்டுமே நான் செய்கிறேன்.

சகலகலா சருமம்! - 12

வாரம் ஒருமுறை கடலை மாவில் பாலாடையும் கேரட் சாறும் சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவிவிடுவேன். இது சருமத் துவாரங்களை இறுகச்செய்து தொய்வின்றி வைக்கும்.

சரும அழகுக்கு என்னுடைய அதிகபட்ச மெனக்கெடல் இது மட்டுமே. நிறைய தண்ணீர் குடிப்பது, நாள்தவறாமல் உடற்பயிற்சி, நீச்சல்.... இந்த மூன்றும் என் உடலை ஃபிட்டாக வைத்திருக்க மட்டுமல்லாமல், சரும அழகுக்கும் மறைமுகமாக உதவுகிறது.’’

- நிக்கி கல்ரானி

வீட்டு சிகிச்சை

சருமத்தில் ஏற்படும் எந்தப் பிரச்னைக்கும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தச் சொல்லி பாட்டிகள் சொல்லக் கேட்டிருப்போம். இதற்கு பூச்சிக்கடியோ வறண்ட சருமமோ, தேங்காய் எண்ணெய் தடவுவதோ இதமளிக்கும். அரிப்புள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தொட்டு விரல்களால் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். அதைக் கழுவ வேண்டியதில்லை. தினமும் குளிப்பதற்கு முன்னர் லேசாக சூடாக்கிய தேங்காய் எண்ணெயைச் சருமத்தில் தடவிக் குளிப்பது சரும வறட்சியை விரட்டும். அரிப்பும் கட்டுப்படும். குளித்து முடித்ததும் சருமம் லேசான ஈரத்துடன் இருக்கும்போதே சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவிக்கொள்வதும் சருமத்தைக் காக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism