பிரீமியம் ஸ்டோரி

ரவு பகல் பார்க்காமல் உழைக்கிறவர்களுக்கும் சீரற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறைகளுக்குப் பழகியவர்களுக்கும் அசிடிட்டிப் பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. பாட்டி வைத்தியக் குறிப்புகளில் அசிடிட்டிக்கான அருமருந்துகள் பட்டியலில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு  ஆகியவை இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.  உள்ளுக்குச் சாப்பிடுகிற அதே பொருள்களை அசிடிட்டியால் ஏற்படுகிற புறஅழகுப் பிரச்னைகளுக்கும் உபயோகிக்கலாம்.

அகமும் புறமும்

பூண்டு

அகமும் புறமும்


இரண்டு பல் பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டி, மஸ்லின் துணியில் கட்டி, சீழ் கோர்த்துப் பழுத்த பருக்களின் மேல் வைத்து எடுக்கலாம். பருக்கள் உடைவதுடன் பக்கத்து இடங்களுக்குப் பரவுவதும் தடுக்கப்படும்.

மிளகு

மிளகும் பாலும் சேர்த்து அரைத்து, லேசாகச் சூடாக்கித் தலையில் தடவிக் குளித்தால் பொடுகு போகும்.

அகமும் புறமும்

இஞ்சி

இஞ்சிச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து சருமத்தின் மங்கு மேல் தடவிக் கழுவினால் அதன் நிறம் மாறும். வெயிலினால் உண்டான சன்டேனும் மாறும். தேன் முகத்திலுள்ள ரோமத்தை நரைக்கச் செய்யாது.

அகமும் புறமும்

சீரகம்

ஒரு டீஸ்பூன் சீரகத்தை அரைத்து வடிகட்டிச் சாறு எடுக்கவும். மிகக் குறைந்த அளவு சாறுதான் கிடைக்கும். சிலருக்கு உதடுகளின் நிறம் கறுப்பாக இருக்கும்.  உதடுகளைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உதடுகள் வறண்டிருக்கும். சீரகச் சாற்றை அடிக்கடி உதடுகளில் தடவி வந்தால் கருமை நிறமும் வறட்சியும் மாறும். அதை அப்படியே மென்று விழுங்கினால் உடலும் குளிர்ச்சியடையும்.

- சாஹா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு