ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம் - 17

சகலகலா சருமம் - 17
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம் - 17

அழகுமேனகா, அழகுக்கலை ஆலோசகர்

லக அழகிகள் முதல் உங்களுக்குப் பிடித்த உள்ளூர் அழகிகள் வரை அவர்களின் அழகு ரகசியம் கேட்டுப் பாருங்கள். ‘எத்தனை பிஸியான வேலைகள் இருந்தாலும், இரவு தூங்கச் செல்வதற்குமுன் மேக்கப்பை நீக்க மறக்க மாட்டோம்’ என்பதையே பொதுவான பதிலாகச் சொல்வார்கள். இது பார்ட்டி மேக்கப்புகளுக்கு மட்டுமில்லை, சாதாரணமாக நீங்கள் தினமும் உபயோகிக்கிற சன் ஸ்கிரீன், லோஷன், பவுடர் வகையறாக்களுக்கும் பொருந்தும்.

சகலகலா சருமம் - 17

மேக்கப்பை நீக்குவது ஏன் அத்தனை முக்கியம்?

இரவில் தூங்கச் செல்வதற்குமுன் சருமத்தில் மேக்கப்பின் தடம் எதுவும் இருக்கக் கூடாது. தூங்கும்போது நம் சருமம் தானாகப் புத்துணர்வடையும். மேக்கப் நீக்கப்படாதபோது, அவை சருமத்துவாரங்களை அடைத்திருக்கும். அதன் காரணமாகச் சருமம் சுவாசிக்க முடியாமல் திணறும். புத்துணர்வுச் செயல்பாட்டில் தடை ஏற்படும்.

முகத்தை சோப் அல்லது ஃபேஸ் வாஷ்கொண்டு கழுவுவது மட்டுமே சுத்தப்படுத்துவது என்றாகாது. கிளென்ஸர் உபயோகித்துச் சுத்தப்படுத்தினால் மட்டுமே ஆழத்தில் படிந்த அழுக்குகள் வெளியேறும். மேக்கப் போடும் பழக்கமுள்ளவர்கள் மட்டுமின்றி, எல்லோருமே தினமும் கிளென்ஸர் உபயோகித்துச் சருமத்தைச் சுத்தப்படுத்துவதன்மூலம் அதன் ஆரோக்கியம் காக்கலாம்.

சகலகலா சருமம் - 17


 இரவில் மேக்கப்பை நீக்காமல் விடும்போது, அது சருமத்தில் கட்டிகள், பருக்கள், சுருக்கங்கள், கண்களுக்கடியில் வீக்கம் மற்றும் கருவளையங்கள் போன்றவை ஏற்படக் காரணமாகும். அது மட்டுமல்ல... தொடர்ந்து பல இரவுகள் இப்படி மேக்கப்பை நீக்காமல் தூங்குவது, சருமத் துவாரங்களின் அடைப்பை அதிகரித்து, பருக்கள் உருவாகக் காரணமான பாக்டீரியாக்களை ஈர்க்கும்.

மஸ்காராவை நீக்க அலுத்துக்கொண்டு அப்படியே தூங்குவதைப்போன்ற ஆபத்து வேறில்லை. அது கண் இமைகளை உதிரச்செய்யும். மஸ்காரா போடப்பட்ட இமைகள் கூர்மையாக இருப்பதால் விழிப்பகுதியைக் குத்தும் வாய்ப்புகளும் உண்டு. தரமற்ற மஸ்காரா என்றால் பார்வைக் கோளாறுகளையும் ஏற்படுத்தலாம்.

மேக்கப்பை நீக்கும் முறைகள்

மேக்கப்பை நீக்க, டிஷ்யூ பயன்படுத்துவது சரியானதல்ல. அது மேக்கப்பை முற்றிலும் நீக்காது. அது சருமத்தின் மேல்பரப்பில் உள்ள மேக்கப்பை மட்டுமே சுத்தப்படுத்தும். சருமத் துவாரங்களில் அடைபட்டுள்ள மேக்கப்பின் மிச்சங்களை எடுத்து முழுமையாகச் சுத்தப்படுத்த கிளென்ஸர் உபயோகிப்பதுதான் தீர்வு.

கிளென்ஸர் உபயோகித்து மேக்கப்பை நீக்கும்போது ஒரே முறையில் அது முற்றிலும் சுத்தமாகிவிடாது. எனவே இரண்டுமுறை கிளென்ஸ் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது சருமத்தில் மேல்நோக்கி, வட்டவடிவமாக மசாஜ் செய்து மேக்கப்பை நீக்குவது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேக்கப்பை நீக்குவது என்பது படிப்படியாகச் செய்யப்பட வேண்டும். அதாவது கண்களைத் தனியேவும், உதடுகளைத் தனியேவும், முகத்தின் மற்ற பகுதிகளைத் தனியேவும் கிளென்ஸ் செய்ய வேண்டும். அந்த வகையில் முதலில் உதடுகளையே சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால்  லிப்ஸ்டிக்கின் மிச்சம், முகத்தின் மற்ற பகுதிகளில் ஒட்டிக்கொண்டு சுத்தப்படுத்துவதை இன்னும் சிக்கலாக்கும்.

உதடுகளைச் சுத்தப்படுத்திய பிறகு கண்களுக்கு வர வேண்டும். கண்களைச் சுத்தப்படுத்தும்போது அதிக  கவனம் தேவை. கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அந்தப் பகுதிகளை அழுத்தம் கொடுக்காமல் கிளென்ஸ் செய்ய வேண்டும். கண்களுக்கான மேக்கப்பை நீக்க, ஐ மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதே சிறந்தது. அடுத்து, முகத்தில் போடப்பட்ட ஃபவுண்டேஷனை நீக்க வேண்டும். தரமான மேக்கப் ரிமூவர் பயன்படுத்தியே இது சுத்தப்படுத்தப்பட வேண்டும். இரண்டு முறை கிளென்ஸ் செய்த பிறகு, முகத்தை நல்ல தண்ணீரால் கழுவிவிட்டு, டோனரும் மாயிஸ்ச்சரைசரும் தடவ வேண்டும். சுத்தமான காட்டன் துணியை வெந்நீரில் முக்கிப் பிழியவும். அதன் சூடு ஓரளவு குறைந்ததும் முகத்தில் சில நிமிடங்கள் வைத்தி ருந்தால், அந்த ஆவிபட்டுச் சருமத் துவாரங்கள் திறந்து உள்ளிருக்கும் மேக்கப் வெளியேறும். அழகாகக் காட்சியளிக்க மேக்கப் உதவலாம். அந்த அழகைத் தக்கவைத்துக்கொள்ள மேக்கப்பை நீக்கிவிட்டுத் தூங்குவதுதான் ஒரே வழி என்பதுதான் எல்லோருக்குமான அழகு ரகசியம்!

(சருமம்  காப்போம்...)

-  ஆர்.வைதேகி

சகலகலா சருமம் - 17

செலிப்ரிட்டி ஸ்கின்

வெள்ளரியும் வேப்பிலையுமே சீக்ரெட்ஸ்!

``அழகு என்பது மனமும் உணவும் சம்பந்தப்பட்டது என நினைக்கிறேன். சந்தோஷமான மனநிலை, சருமத்தை அழகாக்கும் என்பதை அனுபவித்தால்தான் புரியும்.

என்னுடைய பியூட்டி சீக்ரெட்ஸில் இயற்கையான பொருள்களே அதிகம் இடம்பெறும். வாரம் ஒருமுறை வேப்பிலை கலந்த ஃபேஸ்பேக் உபயோகிப்பேன். உள்ளுக்குச் சாப்பிடுகிற உணவுதான் சருமத்தின் வெளியில் பிரதிபலிக்கும். தினமும் சர்க்கரை சேர்க்காமல் இரண்டு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் அல்லது அன்னாசி ஜூஸ் குடிப்பேன்.  வெள்ளரிக்காய்ச் சாற்றில் நனைத்த மாஸ்க்கை முகத்தில் போட்டு ஓய்வெடுப்பேன். இது சருமத்தை இயற்கையாக ப்ளீச் செய்யும். களைப்பையும் போக்கும்.’’

- நடிகை கேத்தரின் தெரசா

ழகியான உங்களைப் பேரழகியாகக் காட்டுவதில் மேக்கப்பின் பங்கு மகத்தானது. உங்களிடமிருந்து அதே பேரழகை நிரந்தரமாகப் பறிப்பதிலும் அந்த மேக்கப்புக்குப்  பங்குண்டு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.  தரமற்ற மேக்கப் சாதனங்களை உபயோகிப்பதால் மட்டுமல்ல, உபயோகித்த மேக்கப்பை முழுமையாக நீக்காவிட்டாலும் சருமம் பாதிக்கப்படும்.

சில விசேஷத் தருணங்களுக்காக  வழக்கத்தைவிட சற்றே ஹெவியான மேக்கப் போட வேண்டியிருக்கும். சாதாரண கிளென்ஸர்கொண்டு அதை நீக்குவதில் சிரமம் இருந்தால் பெட்ரோலியம் ஜெல்லி உபயோகிக்கலாம். இது வாட்டர் ப்ரூஃப் மேக்கப்பைக்கூட முழுவதுமாக நீக்கிவிடும்.