ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 22

சகலகலா சருமம்! - 22
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 22

செல்வி ராஜேந்திரன் சரும மருத்துவர்அழகு

ழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பதைப்போல பருக்கள் மறைந்தாலும் அவை ஏற்படுத்தும் தழும்புகள் மறையாமல் நின்றுவிடுவது இன்று பலரின் பிரச்னையாக இருக்கிறது. அதிலும் ‘அக்னே' எனப்படும் பெரிய, பழுத்த பருக்கள் பெரும்பாலும் தாம் வந்த தடத்தை பதித்துவிட்டுத்தான் மறையும்.

தழும்புகளில் பல வகைகள் உண்டு.   

சகலகலா சருமம்! - 22

ரோலிங் ஸ்கார்ஸ் (Rolling Scars)

இவை சாய்வான முனைகளைக்கொண்ட வட்ட வடிவத் தழும்புகளாக இருக்கும். பார்ப்பதற்குச் சற்றே கரடுமுரடாக இருக்கும்.

பாக்ஸ்கார் ஸ்கார்ஸ் (Boxcar Scars)

பார்ப்பதற்கு அம்மைத் தழும்புகளைப்போலக் காட்சியளிக்கும்.  சருமத்தின்மேல் நகங்களால் அழுத்தினால் ஏற்படுவதுபோன்ற தோற்றத்தைத் தருபவை.

ஐஸ்பிக் ஸ்கார் (Ice Pick Scars)

இவை சருமத்தினுள் ஊசிகளை நுழைத்து எடுத்தது போலிருக்கும். இரண்டு மி.மீ-க்கும் குறைவாக இருக்கும். சருமத்தில் சிலருக்குப் பெரிய துவாரங்கள் திறந்த நிலையில் தெரியும். இந்தத் தழும்புகள் அவற்றைப்போலவே காட்சியளிக்கும்.

ஹைப்பர்ட்ராபிக் ஸ்கார் (Hypertrophic Scars)

சிலருக்குக் காயங்கள் ஆறுவது அசாதார ணமாக இருக்கும். அந்த இடத்தில் ஏற்படுகிற தழும்பு சற்றே தடிமனாக இருக்கும். அதையே ஹைப்பர்ட்ராபிக் வகைத் தழும்பு என்கிறோம். 

சகலகலா சருமம்! - 22

அட்ரோபிக் ஸ்கார் (Atrophic Scars)

சருமம் அதிக மீள் தன்மைக்குட்படுத்தப்படும் போது ஏற்படுகிற தழும்பு இந்த ரகம்.

கீலாய்டு ஸ்கார் (Keloid Scars)

சிலருக்கு அடிபடுகிற சருமப் பகுதி திடீரென வீங்கியதுபோல தடித்துப்போகும். காதுகளில் ஒன்றுக்கு மேலான துளைகள் போட்டுக் கொள்கிறவர்களுக்கும் அந்த உபரியான துளைகளில் கீலாய்டு தழும்புகள் உருவாகலாம். முகப்பருக்கள், முதுகில் வரும் பருக்கள் தழும்பாக மாறும்போது கீலாய்டு தழும்புகளாக மாறக்கூடும்.

பருத் தழும்புகள் ஏன்?

பெரிய பரு உருவாகி, அது ஆறும்போது தழும்பாக மாறும் வாய்ப்புகள் அதிகம். சிலர் அந்தப் பருக்களைக் கிள்ளி உள்ளே உள்ள சீழை வெளியேற்றப் பார்ப்பார்கள். அதனால் ஆழமான தழும்பாக மாறக்கூடும். சிலர் டூத் பேஸ்ட், மஞ்சள், வேப்பிலை போன்ற ஸ்ட்ராங் கான பொருள்களைச் சருமத்தில் தடவுவார்கள். அது சருமத்தைப் பாதித்துத் தழும்பாக மாறலாம்.

பியூட்டி பார்லர்களுக்குச் சென்று பிளாக் ஹெட்ஸை எடுக்கும்போது அவற்றை முறையாக எடுக்காமல் கடினமாகக் கையாள்வதாலும் தழும்புகள் உருவாகலாம்.

அம்மை நோய் ஏற்படும்போது அந்தத் தொற்று சருமத்தின் ஆழம் வரை தாக்குவதால்தான் தழும்புகள் ஏற்படுகின்றன.  அம்மை மற்றும் அக்கி போன்றவற்றில் அவை சருமத்தின் எந்த லேயர் வரை பாதித்துள்ளன என்பதைப் பொறுத்தே  தழும்புகளின் பாதிப்பின் தீவிரம் அமையும். அடிபடுவதாலும் தழும்புகள் ஏற்படும்.

எந்த வயதில் செய்யலாம்?

ஆழமான தழும்புகள் என்றால் 15 வயதிலிருந்தேகூட இந்தச் சிகிச்சைகளைத் தொடங்கலாம். லேசான வலி இருக்கும். ஆனால், தாங்கிக்கொள்ளும்படியாகவே இருக்கும்.

(சருமம் காப்போம்...)

- ஆர்.வைதேகி

செலிப்ரிட்டி ஸ்கின்

நான் ரொம்ப ட்ரெடிஷனல்!

``அழகு முதல் ஆரோக்கியம் வரை நான் ரொம்பவே ட்ரெடிஷனல். பழைய காலத்தில் எப்படி வாழ்ந்தார்களோ, அப்படியானதொரு வாழ்க்கைதான்  என்னுடையதும். தினமும் ஆயில்பாத் எடுப்பேன். அது இல்லாமல் என்னால் இருக்க முடியாது.
சோப்போ, கெமிக்கல்கள் உள்ள காஸ்மெட்டிக்ஸையோ உபயோகிக்கவே மாட்டேன். செயற்கையான வாசனைகள், கெமிக்கல் வாசனைகள் எனக்குப் பிடிக்காது. அவை என் சருமத்தில் உடனடி அலர்ஜியை ஏற்படுத்தும். எனது பியூட்டி பார்லர் என்பது கிச்சன்தான். அங்குள்ள இயற்கையான பொருள்கள்தான் என் காஸ்மெட்டிக்ஸ். இயற்கைக்கு நெருக்கத்தில் இருக்கும்போது நாம் ஆரோக்கியமாகவும் இருப்போம் என்பது என் நம்பிக்கை. உள்ளே ஆரோக்கியமாக இருந்தால் அது சரும அழகாகப் பிரதிபலிக்கும். புற அழகுக்கென தனியே எதையும் செய்யத் தேவையில்லை.’’

- நடிகை நித்யா மேனன்

சிகிச்சைகள்

முதலில் பருக்களைக் குணப்படுத்த வேண்டும். அப்போதுதான் தழும்புகளைத் தவிர்க்க முடியும். சின்னப் பருக்களாக வரும்போதே கவனித்துச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பருக்களையோ, கரும்புள்ளி களையோ அழுத்துவதும் கிள்ளுவதும் கூடாது. பார்லர்களில் பிளாக் ஹெட்ஸை நீக்குவதைத் தவிர்ப்பது நல்லது.

டெர்மா ரோலர் (Derma roller)

இதைச் சருமத்தின் மேல் ரோல் செய்ய வேண்டும். சின்னச்சின்ன டைட்டானியம் ஊசிகளைக் கொண்டிருக்கும். 0.5 மி.மீ முதல் 3 மி.மீ வரை வெவ்வேறு அளவுகளில் இந்த ரோலர் கிடைக்கும். பருத் தழும்புகளை மறைக்க 1.5 மி.மீ உபயோகிக்கிறோம். சருமத்தை க்ளென்ஸ் செய்து, மரத்துப்போகச் செய்கிற கிரீம் தடவப்படும். ஒருமணி நேரம் கழித்து அதைத் துடைத்துவிட்டு, டெர்மா ரோலரை எல்லாத் திசைகளிலும் ரோல் செய்ய வேண்டும். பிறகு ஆன்டிபயாடிக் ஆயின்மென்ட் உபயோகிக்க வேண்டும். இந்த ஊசிகள் காயங்கள் ஆறுவதைச் செயற்கையாகத் தூண்டிவிடும். கொலாஜன் தூண்டப்படுவதால் தழும்புகள் மறைகின் றன, இதே சிகிச்சையை ஆன்டி ஏஜிங் சிகிச்சை மற்றும் சருமத் துவாரங்களைச் சிறிதாக்கவும், மங்குப் பிரச்னையைச் சரிசெய்யவும்கூடப் பயன்படுத்துகிறோம்.

சப்சிஷன் (Subcision)

எண்ணிவிடக்கூடிய அளவில் ஆழமான தழும்புகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான சிகிச்சை இது.  காயம் ஆறும்போது சில இழைகள் உருவாகும். அவை சருமத்தைக் கீழ்நோக்கி இழுப்பதால்தான் தழும்புகள் உருவாகின்றன. இந்தச் சிகிச்சையில் சிறிய ஊசியைத் தழும்புக்கு அடியில்விட்டு அந்த ஊசியை இயக்குவதன் மூலம் இழைகள் அறுந்துபோகும். தழும்புகள் மறையும். இதில் ரத்த இழப்பு, வலி, வீக்கம் போன்றவை இருக்கும்.

பன்ச் எலிவேஷன் (Punch Elevation)

அம்மைத் தழும்புக்கானது இது. பன்ச்சிங் கருவி ஒன்றை அந்தத் தழும்பின் மேல் வைத்து அந்த இடத்துச் சருமத்தை பன்ச் செய்து, தூக்கிவிடுவதன் மூலம் தழும்பு மறையும்.

மைகரோ நீட்லிங் வித் ரேடியோ ஃப்ரீக்வன்சி (Micro needling Radio frequency)


மெஷின் மூலம் கொடுக்கப்படுகிற சிகிச்சை. அதிலுள்ள சின்னச்சின்ன ஊசிகள் கொலாஜனைத் தூண்டும். ரேடியோ ஃப்ரீக்வன்சியும் பரவுவதால் இன்னும் விரைவில் பலன் கிடைக்கும்.