ஹெல்த்
Published:Updated:

சகலகலா சருமம்! - 26

சகலகலா சருமம்! - 26
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா சருமம்! - 26

செல்வி ராஜேந்திரன் சரும மருத்துவர்அழகு

ரும நிறம் அதிகரிக்க... சுருக்கங்கள் நீங்க.... வறட்சி நீங்கி மென்மையாக இருக்க.... கரும்புள்ளிகள் இன்றித் தெளிவாக இருக்க... இப்படிச் சருமத்தைப் பாதிக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் பார்த்துப் பார்த்து அழகு சாதனப் பொருள்கள் வாங்கி உபயோகிக்கிறோம். ஆனால், வெளிப்பூச்சுகளின் மூலம் சருமத்துக்குக் கொடுக்கும் அதே ஊட்டங்களை உணவுகளின் மூலமே கொடுக்க முடியும் என்பதை  அறிவீர்களா? அப்படிக் கொடுக்கப்படுகிற ஊட்டம்தான் நிரந்தரமானதும்கூட. சருமத்தின் அழகு, ஆரோக்கியம் மற்றும் இளமைக்குத் தேவையான அத்தனை ஊட்டங்களையும் பற்றி விரிவாக அலசுவோம். 

சகலகலா சருமம்! - 26

வைட்டமின் ஏ

சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும் பாதிப்புகள் ஏற்பட்டால் பழுதுபார்ப்பதிலும் இந்த வைட்டமின் முக்கியமானது. வைட்டமின் ஏ பற்றாக்குறை இருந்தால் சருமம் வறண்டு போகும். செதில்களாக உரியும். வைட்டமின் ஏவின் விஞ்ஞானப் பெயர் பீட்டாகரோட்டின். பப்பாளி, கேரட், அடர் பச்சை நிறக் கீரைகள், மஞ்சள் நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவை வைட்டமின் ஏ அதிகம் கொண்டவை. பருக்களைக் கட்டுப்படுத்துவதிலும் சருமச் சுருக்கங்கள் வராமல் தடுக்கவும் வைட்டமின் ஏ அவசியம். 

சகலகலா சருமம்! - 26பி காம்ப்ளெக்ஸ்

சருமத்துக்கு அதி முக்கியமான வைட்டமின். இதில் ஃபோலிக் ஆசிட், நயாசின் (பி3) பான்டதெனிக் ஆசிட் (பி5) என நிறைய இருக்கின்றன.

நயாசின் சரும நிறத்தை மேம்படுத்திப் பருக்கள் வராமல் காக்கும்.

பி5 என்பது சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கிறது. இது அவகேடோ பழம், சியா விதைகளில் அதிகமிருக்கிறது.

பி காம்ப்ளெக்ஸ் அதிகமுள்ள உணவுகளில் அரிசி முக்கியமானது. டயட் என்கிற பெயரில் நிறைய பேர் இன்று அரிசியைத் தவிர்க்கிறார்கள். சரும ஆரோக்கியம் வேண்டுவோர் அரிசியைத் தவிர்க்க வேண்டாம். ஓட்ஸ், முட்டை, வாழைப்பழம் போன்றவற்றிலும் பி காம்ப்ளெக்ஸ் அதிகமுள்ளது.

ஃபோலிக் அமிலம், சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜெனைத் தக்க வைக்கவும், புதிய செல்கள் உற்பத்திக்கும் உதவும்.

வைட்டமின் சி

கொலாஜென் உற்பத்திக்கு மிக முக்கியம். சுருக்கங்களையும் மெல்லிய கோடுகளையும் தவிர்க்கும். வெயிலின் பாதிப்புகளில் இருந்து சருமத்தைக் காப்பாற்றும்.

சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக முள்ளது. காலிஃபிளவர், புரோக்கோலி. ஸட்ராபெர்ரி, தக்காளி போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

மருத்துவரின் ஆலோசனையுடன் தினம் 1500 மி.கி மாத்திரையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

வைட்டமின் ஈ

சூழல் மாசு மற்றும் புற ஊதாக் கதிர்கள் பாதிப்பி லிருந்து சருமத்தை மீட்கும். சரும வறட்சியை நீக்கும். வால்நட்ஸ், ஆலிவ் மற்றும் கீரைகளில் வைட்டமின் ஈ அதிகமுள்ளது.

வைட்டமின் கே

*   கருவளையங்களையும்,  அடிபட்டால்  சருமம் நீலநிறமாக மாறுவதையும் தவிர்க்கும். சுருக்கங் கள் வராமலும் காக்கும்.

அடர்பச்சை கீரைகள், முட்டைகோஸ், பால், ஈரல் போன்றவற்றின் மூலம் வைட்டமின் கே சத்தைப் பெறலாம்.

சகலகலா சருமம்! - 26ஒமேகா 3 கொழுப்பு அமிலம்

சருமத்தை மீள் தன்மையுடனும் தளர்வின்றியும் வைக்க அவசியமானது. சால்மன் மீன் மற்றும் வால்நட்ஸில் அதிகமிருக்கிறது.

வைட்டமின் டி

இதை ‘சன்ஷைன் வைட்டமின்’ என்றே அழைக்கலாம். சூரிய வெளிச்சம் சருமத்தில் பட்டதும் உற்பத்தியாகும்.

உணவுப் பொருள்களில் வைட்டமின் டி சேர்த்துச் செறிவூட்டப்பட்டுக் கிடைக்கின்றன. தானியங்களிலும் காளான்களிலும் அதிகமிருக்கிறது.

இரும்புச்சத்து

சருமத்துக்கும் கூந்தலுக்கும் தேவையான ஆக்சிஜன் சப்ளை தடையின்றி நடைபெற இரும்புச்சத்து அவசியம்.

இது பேரீச்சம் பழம், கிட்னி பீன்ஸ். பருப்பு, பசலைக்கீரை போன்றவற்றில் அதிகமுள்ளது.

துத்தநாகம்

சருமத்தில் இயற்கையான எண்ணெய்ப் பசையான சீபம் சுரக்க இது மிக அவசியம். சீபம் சுரப்பு சரியாக இருந்தால்தான் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

பீன்ஸ், சிக்கன், நட்ஸ் போன்றவற்றில் அதிக முள்ளது.

செலினியம்

சருமப் புற்றுநோயைத் தடுக்கும். வெயிலினால் உண்டாகும் சருமப் பாதிப்பிலிருந்து காக்கும்.

சியா, சூரியகாந்தி, ஹேசல் போன்ற விதைகளிலும், பூண்டு, முழுத் தானியங்கள், கடல் உணவுகளிலும் செலினியம் அதிகமுள்ளது.

ஆல்ஃபா லைபாயிக் அமிலம்

முதுமையைத் தள்ளிப் போடுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. பசலைக்கீரை, தக்காளி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் அதிகமுள்ளது.

ஹையலுரானிக் அமிலம்

அதிகளவில் நீரை உறிஞ்சிக்கொள்ளக்கூடியது என்பதால் சருமம் வறட்சியின்றி புஷ்டியாக இருக்க உதவுகிறது. இது சோயா உணவுகள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகளில் உள்ளது.

அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள்

எசென்ஷியல் ஃபேட்டி ஆசிட் எனப்படுகிற இது குறைந்தால் சருமம் வறண்டு போகும். தொற்றுகள் வரும். கரும்புள்ளிகள் வரும்.

ஆளிவிதை, ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் போன்றவற்றில் அதிகமுள்ளது.

கோஎன்சைம் கியூடென்

செல்களின் ஆற்றல் உற்பத்தி, வளர்ச்சிக்கு உதவுகிறது. முதுமையைத் தள்ளிப் போடுகிறது. திசுக்களின் ஆரோக்கியம் காக்கிறது.

சார்டின் மீன்கள், வேர்க்கடலையில் உள்ளது.

க்ளூட்டோதயான்

* சரும நிறத்தை மேம்படுத்துவதில் அதிகம் பயன்படுகிறது. கல்லீரலின் நச்சுகளை நீக்குகிறது. வே புரோட்டீன், கந்தகம் அதிகமுள்ள உணவு களில் இந்தச் சத்து இருக்கிறது.

(சருமம் காப்போம்...)


- ஆர். வைதேகி

சகலகலா சருமம்! - 26

செலிப்ரிட்டி ஸ்கின்:

வாக்கிங்கும் வால்நட்ஸும்

``நி
றைய டிராவல் செய்ய வேண்டியிருப்பதால் பார்த்துப் பார்த்துச் சாப்பிட முடியாது. சீக்கிரமே என் எடை எகிறிவிடும். அதைத் தவிர்க்க தினமும் 6 கிலோமீட்டர் வாக்கிங் போவேன். வாக்கிங் செல்வது எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதுடன் சரும அழகிலும் பிரதிபலிக்கும். நிறைய தண்ணீர் குடிப்பேன். நான் பியூர் வெஜிட்டேரியன். புரோட்டீன் உள்ள உணவுகளும் காய்கறி சாலட்டும் எப்போதும் என் சாய்ஸ். இவற்றுடன் ஒமேகா 3 மற்றும் 6 சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்வேன். நாள்தவறாமல் வால்நட்ஸ்  சாப்பிடுவேன். தேவையற்ற நேரத்தில் மேக்கப்பைத் தவிர்த்துவிடுவேன்.’’

- பாடகி ஷாஷா திருப்பதி