Published:Updated:

முகம் வீங்கிய நிலையில் ரைசா... மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ்... சிகிச்சையில் என்ன நடந்தது?

Raiza Wilson

சிகிச்சைக்குப் பின்னர் ரைசாவின் வலது கண் மற்றும் கன்னம் வீங்கிய நிலையிலும், ரத்தக்கசிவு ஏற்பட்டது.

முகம் வீங்கிய நிலையில் ரைசா... மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ்... சிகிச்சையில் என்ன நடந்தது?

சிகிச்சைக்குப் பின்னர் ரைசாவின் வலது கண் மற்றும் கன்னம் வீங்கிய நிலையிலும், ரத்தக்கசிவு ஏற்பட்டது.

Published:Updated:
Raiza Wilson

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். அதன் பின் பின், `பியார் பிரேமா காதல்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப்படம் படம் வெற்றியடைந்ததால் `காதலிக்க யாருமில்லை' போன்ற சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். நடிகை என்பதைத் தாண்டி மாடலிங்கிலும் எப்போதும் பிஸியாக இருப்பவர்.  மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பவர் ரைசா.

ரைசா
ரைசா

இந்நிலையில், அழகு சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மார்ச் 25-ம் தேதி ரைசா சிகிச்சை எடுத்துள்ளார். 10 நாள்களுக்குப் பிறகும் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாததால், மீண்டும் மருத்துவரை அணுகி விளக்கம் கேட்டுள்ளார். அதன் பின் ரைசாவுக்கு தெர்மல் ஃபில்லர் சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைத்துள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்டு ரைசாவும், மருத்துவபடிவத்தில் கையொப்பம் இட்டு, ரூ.65,000 கட்டணமாகச் செலுத்தியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிகிச்சைக்குப் பின்னர் ரைசாவின் வலது கண் மற்றும் கன்னம் வீங்கிய நிலையிலும், ரத்தக்கசிவு ஏற்பட்டது போன்றும் ரைசா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ரைசா
ரைசா

அதில், `சிறிய அழகு சிகிச்சைக்காகச் சென்றிருந்தேன். ஆனால், அங்குள்ள மருத்துவர் பைரவி செந்தில், என்னை வலுக்கட்டாயமாக வேறு சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தார். என் சருமத்துக்குப் பொருத்தமில்லாத சிகிச்சையால், இறுதியில் என் முகம் வீங்கிய நிலையில் மாறிவிட்டது. நான் மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னாலும், மருத்துவமனை தரப்பில் அதைத் தவிர்க்கிறார்கள்' என்று பதிவிட்டு இருந்தார். இது குறித்து ரைசாவிடம் நாம் பேச முயன்றபோது, முகம் வீங்கி, தீராத வலியில் இருப்பதால், காயங்கள் ஆறிய பின் தொடர்பு கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரைசாவின் இந்தப் பதிவுக்குப் பிறகு, ரைசாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பைரவி செந்தில், 'இருபக்கமும் முகத்தை சீரான தோற்றத்துக்குக் கொண்டு வரும், தெர்மல் ஃபில்லர் சிகிச்சையே ரைசாவுக்கு அளிக்கப்பட்டது. மருத்துவ படிவத்தில் ரைசாவின் கையொப்பம் பெற்ற பின்னரே அவருக்கு அந்தச் சிகிச்சையை வழங்கினோம். ஆனால், ரைசா சிகிச்சைக்குப் பிறகான வழிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்கவில்லை. இப்போது முகம் வீங்கியுள்ளதாகக் கூறி என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்' என்று பதிவிட்டுள்ளார். இப்படி மாறி மாறி சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து வந்த நிலையில், தவறான சிகிச்சை செய்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நடிகை ரைசா நேற்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Raiza's Insta Story
Raiza's Insta Story
Instagram

ரைசா வில்சன் தரப்பு வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீஸில் 15 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்காவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேச ரைசாவை பல முறை தொடர்பு கொண்ட போதும் பேச முடியவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism