Published:Updated:

ஹேர்கட் முதல் ஐபுரோ த்ரெடிங்வரை... அவள் விகடனின் ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப்!

அவள் விகடனின் ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப்
அவள் விகடனின் ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப்

இதோ அவள் விகடனின் அடுத்த முன்னெடுப்பு... 'ஹேர்கட் முதல் ஐபுரோ த்ரெடிங்வரை... ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப்!' இம்முறை நான்கு நாள்கள்!

லாக்டெளனில் பார்லர் செல்ல வாய்ப்பில்லாததால், வீட்டிலேயே அழகுப் பராமரிப்புக்கான வழிகளை நாடினார்கள் பெண்கள். அவர்களுக்கு வழிகாட்ட, பிரபல பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தராவுடன் இணைந்து, 'அழகுக்கு அழகு சேர்ப்போம்' இலவச ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப்பை நடத்தியது அவள் விகடன். இரண்டு மணி நேரம் நடந்த இந்த ஆன்லைன் பயிற்சியில் கிட்டத்தட்ட 200 பெண்கள் கலந்துகொண்டு, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு தொடர்பான பல பயனுள்ள டிப்ஸ்களைப் பெற்றுக்கொண்டனர். கூடுதலாக, அழகு தொடர்பான தங்கள் சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெற்றனர்.

``இந்த ஆன்லைன் வொர்க்‌ஷாப் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, அழகுக்கலையின் அடிப்படை விஷயங்களை இதுபோல் தெளிவாகவும், இன்னும் விரிவாகவும் விளக்கும் வொர்க்‌ஷாப்பில் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்."
என்று வாசகிகள் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
அவர்களுக்காக, இதோ அவள் விகடனின் அடுத்த முன்னெடுப்பு... `ஹேர்கட் முதல் ஐபுரோ த்ரெடிங்வரை... ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப்!' இம்முறை நான்கு நாள்கள்!
ஜூன் 20, 21 மற்றும் 27, 28 ஆகிய நாள்களில் மாலை 3 மணி முதல் 5 மணிவரை பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. கட்டணம் உண்டு. பலருக்கும் அலுவலகம் திறந்துவிட்டதால் இந்தப் பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிறுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப்புக்குப் பதிவு செய்து கட்டணம் செலுத்த இங்கே க்ளிக் செய்யவும்!

பயிற்சியின் முதல் நாள் சிலபஸ்: சருமப் பராமரிப்பு

சரும வகைகள், சரும அடுக்குகள், உங்கள் சரும வகை என்ன, அதற்கேற்றபடி தினசரி செய்ய வேண்டிய CTM (Cleansing, Toning, Moisturizing), கெமிக்கல் மற்றும் ஹெர்பல் பிளீச், வீட்டிலிருக்கிற பொருள்களை வைத்தே ஃபேஷியல் செய்துகொள்வது எப்படி, கடையில் வாங்குகிற கிட்டை வைத்து எப்படி ஃபேஷியல் செய்வது மற்றும் க்ளென்ஸர், டோனரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி...

சருமப் பராமரிப்பு
சருமப் பராமரிப்பு
freepik

பயிற்சியின் இரண்டாம் நாள் சிலபஸ்: மேக்கப்

பகல் நேரத்துக்கான சிம்பிள் மேக்கப், மாலை நேரத்துக்கான கிராண்ட் மேக்கப், மூன்று விதமான ஹேர்ஸ்டைல்ஸ், உங்கள் சருமத்துக்கு ஏற்ற காஸ்மெட்டிக் பொருள்களை எப்படித் தேர்ந்தெடுத்து வாங்குவது (தியரி மற்றும் பிராக்டிக்கல்).

பயிற்சியின் மூன்றாம் நாள் சிலபஸ்: கூந்தல் பராமரிப்பு

கேசத்துக்கான எண்ணெய் மற்றும் ஹேர் பேக் தயாரிப்பது, தலைக்கு ஆயில் மசாஜ் எப்படிச் செய்ய வேண்டும் என்ற கைடன்ஸ், ஹெர்பல் ஹேர் கலர் தயாரிப்பது எப்படி, ஹேர்கலரிங் செய்யும்போது பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருக்க கவனத்தில்கொள்ள வேண்டியவை...

கூந்தல் பராமரிப்பு
கூந்தல் பராமரிப்பு

பயிற்சியின் நான்காம் நாள் சிலபஸ்: ஹேர்கட் பிரின்சிபல்ஸ்

கூந்தலை `ஸ்ட்ரெய்ட் கட்’ செய்வது எப்படி, `யூ கட்’ செய்வது எப்படி, ஹாட் மற்றும் கோல்டு வேக்ஸ் மூலம் சருமத்தில் தேவையற்ற ரோமத்தை நீக்குவது எப்படி, ஐபுரோ த்ரெடிங், சிம்பிள் மெனிக்யூர் கைடன்ஸ்...

இந்த ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப்புக்குப் பதிவு செய்து கட்டணம் செலுத்த இங்கே க்ளிக் செய்யவும்!

பயிற்சி வகுப்பு ஜூன் 20, 21, 27 மற்றும் 28, 2020, மாலை 3 மணி முதல் 5 மணிவரை இரண்டு மணி நேரம் நடக்கிறது.
இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்கக் கட்டணம் ரூ.500. ஜூன் 19, மாலை 6.00 மணிக்கு பதிவு நிறைவு பெறுகிறது.

முக்கியக் குறிப்புகள்:

டியர் அவள் விகடன் வாசகிகளே!

அவள் விகடன் நடத்தும் `ஹேர்கட் முதல் ஐபுரோ த்ரெடிங்வரை... ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப்'பில் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளைப் பின்பற்றுங்கள்!

Webinar
Webinar

* Zoom App-ஐ டவுன்லோடு செய்யுங்கள் (For Laptop)

வெபினாரில் பங்கேற்பவர்கள் ஸூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

https://zoom.us/download

* ஆண்ட்ராய்டு போனுக்கு...

* ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

* ஸூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

பயிற்சியின்போது, நீங்கள் ரெஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினார் அட்மின் உங்கள் வருகையைச் சரிபார்த்த பின்பு, ஆன்லைன் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.

Webinar
Webinar

* இன்டர்நெட் கனெக்‌ஷன் தடைபடாத இடத்தைத் தேர்ந்தெடுங்கள்

வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத, இணையத் தொடர்பு தடைபடாத இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

* நேரம் முக்கியம்...

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஸூம்-ல் லாக்-இன் செய்துவிடுவது நல்லது.

* மைக் & வீடியோ... ஆஃப் ப்ளீஸ்!

ஸூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை ம்யூட் (mute) செய்துவிடுங்கள். அப்போதுதான் வெளிப்புற ஒலி இடையூறுகள் எதுவுமின்றி பயிற்சியாளர் சொல்வதைக் கவனிக்க முடியும்.

Webinar
Webinar

* டிரெஸ்கோடு!

இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்கிற நீங்களும் வீடியோவில் வருவதற்கு வாய்ப்புண்டு என்பதால், அலுவலகத்துக்குச் செல்வது போன்ற டிரெஸ் கோடுடன் கலந்துகொள்வது சிறப்பு.

* நோட் பேட் முக்கியம்!

கைகளில் நோட்-பேட் வைத்துக்கொண்டால், முக்கியமான அழகுக் குறிப்புகளையும், அதில் வருகிற சந்தேகங்களையும் குறித்து வைத்துக்கொள்ளலாம்.

* பயிற்சி வகுப்புக்கு வரத் தவறினால்...

பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ரெஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வரத் தவறினால், செலுத்திய கட்டணத்தைத் திருப்பித் தர இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப்புக்குப் பதிவு செய்து கட்டணம் செலுத்த இங்கே க்ளிக் செய்யவும்!

அடுத்த கட்டுரைக்கு