Published:Updated:

பியூட்டி - உச்சி முதல் பாதம் வரை

பியூட்டி
பிரீமியம் ஸ்டோரி
பியூட்டி

ஃப்ளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகள் வறண்ட கூந்தலுக்கு மிகச் சிறந்த மருந்து. இவற்றிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கூந்தல் வறட்சியைப் போக்கி உடைந்த நுனிகளையும் சரி செய்யக்கூடியது

பியூட்டி - உச்சி முதல் பாதம் வரை

ஃப்ளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகள் வறண்ட கூந்தலுக்கு மிகச் சிறந்த மருந்து. இவற்றிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கூந்தல் வறட்சியைப் போக்கி உடைந்த நுனிகளையும் சரி செய்யக்கூடியது

Published:Updated:
பியூட்டி
பிரீமியம் ஸ்டோரி
பியூட்டி

கூந்தலுக்கு...

  • ஃப்ளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகள் வறண்ட கூந்தலுக்கு மிகச் சிறந்த மருந்து. இவற்றிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கூந்தல் வறட்சியைப் போக்கி உடைந்த நுனிகளையும் சரி செய்யக்கூடியது. கால் டீஸ்பூன் ஆளி விதைகளை அரைத்து அந்த விழுதுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால் கூந்தல் ஆரோக்கியம் மேம்படும். முடிகளின் வேர்கள் வலுப்பெறும். முடி உதிர்வது நிற்கும். கூந்தலின் பளபளப்பு கூடும். கொழுப்பை நீக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பதால் ஆளி விதை ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது.

கூந்தல்
கூந்தல்
  • ஆலிவ் ஆயிலை டபுள் பாய்லிங் முறையில் லேசாக சூடுபடுத்தவும். அதாவது, நேரடியாக அடுப்பில் வைத்துச் சூடாக்காமல் ஒரு கிண்ணத்தில் எண்ணெயை எடுத்துக்கொண்டு அதை தண்ணீர் உள்ள வேறொரு பாத்திரத்தின் மேல் மூழ்கிவிடாதபடி வைத்து, சூடுபடுத்துவதுதான் டபுள் பாய்லிங் முறை. இந்த எண்ணெயை தலை முழுவதும் தாராளமாகத் தடவி ஷவர் கேப் அணிந்துகொள்ளவும். அதன்மேல் ஒரு டவலைச் சுற்றிக் கொள்ளவும். 45 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பூவால் கூந்தலை அலசவும். இந்த சிகிச்சை கூந்தலுக்கு அதிகபட்ச வலிமையைத் தரும். கூந்தலின் வறட்சியைப் போக்கும். கூந்தல் உடைவதைச் சரி செய்யும். வெயிலின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். கூந்தலைக் கண்டிஷன் செய்து மென்மையாக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சருமத்துக்கு...

சருமம்
சருமம்
  • இப்போதெல்லாம் 30 ப்ளஸ்ஸிலேயே முகச்சுருக்கங்கள் ஆரம்பித்துவிடுகின்றன. வாரத்தில் ஒரு நாள் மெனக்கெட்டால் இளமைத் தோற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம். கால் கிலோ கேரட்டைக் கழுவி விழுதாக அரைக்கவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் பாதாம் ஆயில் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து கண்களுக்கு அடியிலும், சருமத்தில் சுருக்கங்கள் காணப்படும் மற்ற பகுதிகளிலும் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரம் ஒரு முறை இப்படிச் செய்துவந்தால் சுருக்கங்கள் நீங்குவதுடன் சரும நிறமும் கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதங்களுக்கு...

பாதம்
பாதம்
  • பலருக்கும் கால்களில் செருப்பு அணிகிற இடம் தவிர மற்ற பகுதிகளில் கருமை படர்ந்து காணப்படும். செருப்பு அணியாத நேரத்தில் இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப் பழச்சாற்றில் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, இரண்டும் கரையும் வரை கலக்கவும். இதை கருமை படர்ந்த பகுதிகளில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவவும். தினமும் இப்படிச் செய்துவந்தால் கால்களில் கருமை படர்வதைத் தவிர்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism