புயல், மழை, காற்று, வெயில் என வஞ்சமில்லாமல் எல்லாச் சூழல்களையும் வாரிக்கொடுக்கிறது இந்த சீசன்.

பருவநிலை மாற்றத்தின் முக்கிய சிக்கல்களான, சருமம் மற்றும் தலைமுடிக்கான பிரச்னைகளை எதிர்கொள்ள இயற்கையான ஆலோசனைகளைப் பரிந்துரைக்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇயற்கையான லிப் பாம்:
தர்ப்பூசணி அல்லது கிர்ணிப் பழச்சாறு + மாதுளைச் சாறு + உப்பு சேர்க்காத வெண்ணெய் (unsalted butter) கலவை (தலா ஒரு டீஸ்பூன்) எடுத்துக்கொள்ளவும். இதை, உதட்டில் அவ்வப்போது தடவிவந்தால் உதட்டு வெடிப்பு, வறண்டுபோதல் போன்றவற்றைத் தவிர்க்கலாம். தினமும் இரு முறை இந்த லிப் பாம் அப்ளை செய்வது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தலைமுடி நுனிப்பிளவு தவிர்க்க:
ஹாட் ஆயில் ட்ரீட்மென்ட் : ஒரு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் நான்கு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மூன்றையும் கலந்து, லேசாகச் சூடுபடுத்தித் தலைமுடியில் தேய்க்க வேண்டும். உச்சந்தலையில் தேய்க்க வேண்டிய அவசியமில்லை. தேய்த்தபிறகு, ஷவர் கேப் அணிந்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின், ஷாம்பூ உபயோகித்து அலசவும்.

சருமத்தில் திட்டுகள் நீங்க:
வேப்பிலைக் கொழுந்துச் சாறு - 2 டீஸ்பூன், தயிர் - 2 டீஸ்பூன்.
இரண்டையும் நன்கு கலந்து, உடலில் திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பின் குளிக்கலாம். குளிக்கச் செல்வதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன் முகத்தில் அப்ளை செய்தால் போதுமானது. ஊறவைத்தவற்றைச் சுத்தம்செய்யும்போது, கடலை மாவு அல்லது பச்சைப்பயற்று மாவு கொண்டு சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்.
