தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பியூட்டி

பியூட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
பியூட்டி

ஶ்ரீஜா

கை அழகு... கால் அழகு!

முகத்தை அழகாக வைத்துக் கொள்ளப் பலரும் மெனக்கெடு கிறோம். ஆனால், அதற்கு இணையாக கைகால்களின் அழகையும் பராமரிக்க வேண்டியதும் அவசியம். பலரின் முகத்தின் அழகுக்குக் கைகால்களின் அழகு ஈடுகொடுக்க முடியாமல் போய் விடும். வயது அதிகமாக அதிகமாகக் கைகளில் ஏற்படும் சுருக்கங்கள், வயதைக் காட்டிக்கொடுத்துவிடும் அபாயமும் உண்டு. இவற்றைத் தவிர்க்க...

  • இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் இரண்டையும் எடுத்துக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை உள்ளங்கை மற்றும் கைகால்களின் மேற்பகுதியில் தடவவும். பின்னர், கைகளால் நன்றாக அழுத்தித் தேய்க்கவும். மூன்று நிமிடங்கள் தேய்த்துவிட்டு அப்படியே விட்டுவிடவும். 10 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்து வரும்போது உள்ளங்கை கால்களில் உள்ள சொரசொரப்புத் தன்மை நீங்கி, கைகால்களின் மேற்பகுதியும் மென்மையாக இருக்கும்.

பியூட்டி
பியூட்டி
  • தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி அதைக் கைகளில் தடவி காட்டன் கிளவுஸ் அணிந்துகொள்ளவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு கிளவுஸை எடுத்துவிட்டு, கடலை மாவைத் தண்ணீரில் தொட்டு, மசாஜ் போல செய்து கழுவவும். இது சருமத்தை மிருதுவாக்கும்.

  • கடினமான சோப்புகளைப் பயன்படுத்தும்போது கிளவுஸ் பயன்படுத்துவது நல்லது. பாத்திரம் கழுவும் போதும் சரி, துணி துவைக்கும்போதும் சரி... கைகளில் ரப்பர் கிளவுஸ் அணிந்துகொள்ளலாம். இதன் மூலம் டிடர்ஜென்ட்டால் கைகளில் சொரசொரப்புத் தன்மை ஏற்படாமல் தடுக்கலாம்.

  • ஜிம்மில் வொர்க்அவுட், வெயிட் லிஃப்ட்டிங் என்று செய்பவர்களுக்குக் கைகள் கடினமாகிவிடும். அதேமாதிரி, அதிக நேரம் வாகனம் ஓட்டுகிறவர்களின் கைகளும் கடினமாக இருக்கும். ஜிம் செல்பவர்களுக்கென கிளவுஸ் கிடைக்கும். அதேபோன்று, வண்டி ஓட்டுபவர் களுக்கென கிளவுஸ் கிடைக்கும். அந்தந்த கிளவுஸ் களைப் பயன்படுத்தினால் கைகளைப் பாதுகாக்க முடியும்.

  • பால் காய்ச்சும்போது மேலாகப் படியக்கூடிய ஆடையை எடுத்து, கைகால்களில் தேய்த்து, இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துத் தேய்க்கவும். பிறகு, ஐந்து நிமிடங்கள் உலரவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதன்மூலம் சருமத்தின் எண்ணெய்ப் பசை தக்கவைக்கப்படும்.

  • சிலருக்குக் கைகால்களின் மேற்பகுதி கறுப்பாக இருக்கும். அவர்கள், பாலாடையுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கைகால்களின் மேற்பகுதியில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். தொடர்ந்து இதைச் செய்துவர அந்தக் கருமை நீங்கும்.

தலைச்சுற்றலைப் போக்கும் தனியா!

தனியா
தனியா
  • மல்லி, கொத்தமல்லி விதையை வட இந்தியாவில் தனியா என்று சொல்கிறார்கள்.

  • இது ஒரு சிறந்த ஆன்டிபயாடிக். கெட்ட பாக்டீரியாவை அழிக்கும்.

  • பித்தத்தைச் சமநிலைப்படுத்தும்.

  • டைபாய்டு காய்ச்சல் இருக்கும்போது, தனியாவைப் பொடி செய்து, நீரில் கலந்து குடிக்கலாம்.

  • வாயில் கெட்ட நாற்றம் வீசினால், சிறிது அளவு தனியாவை எடுத்து, நன்றாக மென்று, வாய் கொப்பளித்தால், துர்நாற்றம் நீங்கும்.

  • கர்ப்பகாலத்தில் பல பெண்களுக்குத் தலைச்சுற்றல் பிரச்னை இருக்கும். தனியாவுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, விழுதுபோல (பேஸ்ட்) ஆக்கிக்கொள்ளவும். இந்த விழுதுடன், ஒரு டம்ளர் தண்ணீர், தேன் சேர்த்துக் கலந்து குடித்துவந்தால், தலைச்சுற்றல் நீங்கும்.

நகத்தில் நலம் பார்க்கலாம்!

பொதுவாக, நகங்கள் நன்றாக இருந்தால் நம்முடைய ஆரோக்கியமும் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அப்படிப்பட்ட நகங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்...

நகங்கள்
நகங்கள்
  • எலுமிச்சைச்சாறு சிறிதளவு எடுத்து நகங்களில் தடவ வேண்டும். தொடர்ந்து அப்படிச் செய்துவர நகங்கள் வலிமை பெறும். எலுமிச்சையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் சி நகங்களின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

  • ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்து லேசாகச் சூடுபடுத்திக்கொள்ளவும். அதை ஒவ்வொரு நகத்தின் வேர்ப் பகுதியிலும் விட்டு மசாஜ் செய்யவும். ஒவ்வொரு விரலுக்கும் 20 விநாடிகள் மசாஜ் கொடுத்தால் போதும். மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்துக் கைகளைக் கழுவிக்கொள்ளவும். இதனால் நகங்கள் ஆரோக்கியமாக வளர்வதுடன் நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாறாமலும் இருக்கும்.

  • ஒரு சொட்டு விளக்கெண்ணெய் எடுத்து நகங்களின் அடிப்பாகத்தில் இட்டு மெதுவாக மசாஜ் கொடுக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கைகளைக் கழுவிக்கொள்ளலாம். உப்பு சேர்க்காத வெண்ணெயையும் இதுபோன்று மசாஜ் செய்வதற்குப் பயன்படுத்தலாம்.

  • போலியான நகங்களைப் பயன்படுத்துவது தற்போது டிரெண்டாகி வருகிறது. அந்த இணைப்பின்போது நகங்கள் மிகவும் அழுத்தப்படும் என்பதால் நகங்களுக்குப் பாதிப்பும் ஏற்படலாம்.

  • கால் நகங்களை யூ வடிவத்தில் கட் செய்வதைவிட நேராகவே கட் செய்வது நல்லது. இல்லையென்றால் அழுக்குகள் ஓரத்தில் அடைந்து குடைச்சல் எடுக்க ஆரம்பிக்கும்.

  • கால் நகங்களை வெட்டும்போது, குளித்தவுடன் அல்லது கால்களைத் தண்ணீரில் நனைத்துவிட்டு வெட்ட லாம். அதன் கடினத்தன்மை சற்றுக் குறைந்திருக்கும், வெட்டுவதற்கு வசதியாக இருக்கும்.