லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஐப்ரோ மேக்கப்... அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஐப்ரோ மேக்கப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐப்ரோ மேக்கப்

உங்கள் முகத்தின் வடிவத்துக்குத் தகுந்தாற்போல் புருவங்களை ஷேப் செய்வது அவசியம்.

மேக்கப் தேவையில்லை. காஸ்ட்லியான காஸ்மெட்டிக்ஸ் அவசியமில்லை. மாதம் தவறாமல் புருவங்களை திரெடிங் செய்தாலே முகம் வசீகரிக்கும். அடர்த்தியான, வடிவான புருவங்கள் ஒருவரது முகத்தோற்றத்தை நிச்சயம் மேம்படுத்தும். புருவங்களை ஷேப் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களோடு சில டிப்ஸையும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பியூட்டீஷியன் ஆர்த்தி.

உங்கள் முகத்தின் வடிவத்துக்குத் தகுந்தாற்போல் புருவங்களை ஷேப் செய்வது அவசியம்.

ஐப்ரோ மேக்கப்... அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நீள் வடிவ முகம்:

நீங்கள் எந்த ஷேப்பில் வேண்டுமானாலும் புருவங்களை வரைந்துகொள்ளலாம்.

டைமண்ட் வடிவ முகம்:

கட் இல்லாமல் ரவுண்டு ஷேப்பில் வரையவும்.

வட்ட வடிவ முகம்:

புருவம் தொடங்கும் இடத்திலேயே சற்று மேல் தூக்கி திருத்தம் செய்து காஜலை வைத்து ஃபில்லிங் செய்ய வேண்டும். புருவ எலும்பு இருக்கும் இடத்தில் காஜலை அகலப்படுத்தி, ஆர்ச் வடிவம் கொடுக்கலாம்.

ஹார்ட்டின் வடிவ முகம்:

புருவம் ஆரம்பிக்கும் இடத்தில் வளைவாகத் தொடங்கி, புருவ எலும்பு இருக்கும் இடத்தில் வில் போன்று வளைத்து அகலமாக வரைய வேண்டும்.

சதுர வடிவ முகம்:

புருவம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்தே அடர்த்தியாக ஒரே அகலத்தில் வரையத் தொடங்கி, புருவ எலும்பு இருக்கும் இடத்தில் சற்று மெலிதாக காஜலால் ஃபில்லிங் செய்ய வேண்டும்.

ஐப்ரோ மேக்கப்... அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
PRIYANKA

ஐப்ரோ மேக்கப்

ஐப்ரோ மேக்கப்... அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

டிப்ஸ்:

ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து, லேசாகச் சூடாக்கி, இரவு நேரத்தில் புருவங்களில் தடவி, லேசாக மசாஜ் செய்யவும். புருவங்கள் அடர்த்தியாக வளரும்.

மாதம் ஒரு முறை புருவங்களை ஷேப் செய்து விடுங்கள். முடி வளர்ச்சி அதிகமானால், திரெடிங் செய்யும்போது வலியும் அதிகமாகும்.

புருவங்களுக்கு கறுப்பு நிற காஜல் தவிர்த்து, டார்க் பிரவுன் நிறத்தைத் தேர்வு செய்யலாம். புருவங்களை வரைந்திருப்பது செயற்கையாகத் தெரியாமலிருக்கும்.