Published:Updated:

தலைக்கு மேல் பிரச்னையா...?

தலைக்கு மேல் பிரச்னையா...?
பிரீமியம் ஸ்டோரி
தலைக்கு மேல் பிரச்னையா...?

ஷாம்பூ குளியலுக்கு முன், ஆயில் மசாஜ் செய்வது அவசியம். பாதாம் எண்ணெய், நெல்லிக்காய் சாறு, கறிவேப்பிலை சாறு ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து சூடுபடுத்தவும்

தலைக்கு மேல் பிரச்னையா...?

ஷாம்பூ குளியலுக்கு முன், ஆயில் மசாஜ் செய்வது அவசியம். பாதாம் எண்ணெய், நெல்லிக்காய் சாறு, கறிவேப்பிலை சாறு ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து சூடுபடுத்தவும்

Published:Updated:
தலைக்கு மேல் பிரச்னையா...?
பிரீமியம் ஸ்டோரி
தலைக்கு மேல் பிரச்னையா...?
கூந்தலைக் காதலிக்காத பெண்கள் அரிது. ஆனாலும், அதைப் பராமரிப்பதில்தான் பிரச்னையே. கூந்தல் பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் முத்துலட்சுமி.

சீப்பை ஷேர் செய்யாதீர்கள்!

ஒருவர் பயன்படுத்திய சீப்பை மற்றவர்கள் பயன்படுத்தும்போது பொடுகு பரவும். எனவே, எப்போதும் தனி சீப்பை பயன்படுத்துங்கள். மரச்சீப்பு பயன்படுத்தினால் தலையில் இருக்கும் எண்ணெய்ப்பசை சீராகப் பரவும். வேர்க்கால்கள் உறுதியடையும். முடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

ஆயில் மசாஜ் அவசியம்!

ஷாம்பூ குளியலுக்கு முன், ஆயில் மசாஜ் செய்வது அவசியம். பாதாம் எண்ணெய், நெல்லிக்காய் சாறு, கறிவேப்பிலை சாறு ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து சூடுபடுத்தவும். கை பொறுக்கும் சூட்டில் தொட்டு தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்துவந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

ஷாம்பூ

தலைக்குக் குளிக்க சீயக்காய் அல்லது கெமிக்கல் இல்லாத ஷாம்பூ பயன்படுத்துங்கள். பூந்திக்கொட்டை- 3, சீயக்காய் - 2 துண்டு, செம்பருத்திப் பூக்கள் - 2, வெந்தயம் - ஒரு டீஸ்பூன்... இவற்றை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும்.மறுநாள் எல்லாவற்றையும் கசக்கி, தண்ணீரை மட்டும் வடித்து ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

தலைக்கு மேல் பிரச்னையா...?
தலைக்கு மேல் பிரச்னையா...?

ஹேர் பேக்

கற்றாழையை இரண்டாகக் கீறவும். அதிலிருந்து வடியும் கொழகொழப்பான திரவம் வெளியேறும்வரை கற்றாழையை நன்கு கழுவவும். அதன் பின் கற்றாழையின் உள் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாள்கள் கழித்து அந்த வெந்தயத்தை, கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவிக் குளித்தால் கூந்தல் பளபளப்பாகும்.

முடி உதிருதா..?

பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய்... இந்த ஐந்தையும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கி, தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ வாஷ் செய்யவும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால் வறட்சியால் ஏற்படும் முடி உதிர்வு நின்றுவிடும்.

தலைக்குக் குளித்த உடன் டவலை வெகு நேரம் கூந்தலில் கட்டி வைத்திருக்காதீர்கள். முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகி முடி உதிர்வு ஏற்படும்.

இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழச் சாறு - அரை டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வாரம் ஒரு முறை கூந்தலில் தடவிக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

பராமரிப்பின்மை தவிர, ஹார்மோன் பிரச்னை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களாலும் முடி உதிரலாம். ஒரு மாதத்துக்கும் மேலாக முடி உதிர்தல் தொடர்ந்தால் மருத்துவரைச் சந்தித்து தீர்வு காண்பது நல்லது.

உணவு

புரதம், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். வாரம் மூன்று முறையாவது உணவில் கீரை சேர்த்துக் கொள்வது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism