நசநசவென்று பெய்கிற மழை... அது ஏற்படுத்தும் லேசான குளிர்... தும்மலும் தலைவலியும் ஏற்படுத்தும் பயம் எனப் பல காரணங்களால் மழை நாள்களில் தலைக்குக் குளிக்கவே பயப்படுவார்கள் பலரும். ஆனால், சருமத்தைப் போலவே கூந்தலுக்கும் மழைக்காலப் பராமரிப்பு அவசியம். மழைக்காலத்தில் கூந்தலை பாதிக்கும் பிரச்னைகள், பராமரிப்பு பற்றிப் பேசுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

மழையோ, வெயிலோ... கூந்தலுக்கு முறையான ஊட்டம் கொடுக்கப்பட வேண்டும். ஆயில் மசாஜ் செய்வது எல்லா சீசனுக்குமான சிறந்த சிகிச்சை. உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் ஓர் எண்ணெயை டபுள் பாயிலிங் முறையில் லேசாகச் சூடுபடுத்தவும். முடியைப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு சூடான எண்ணெயை வேர்க்கால்களில்படும்படி தடவி, விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும். முடிந்தால் வெந்நீரில் நனைத்துப்பிழிந்த டவலால் தலைக்கு ஒத்தடம் கொடுத்து, பிறகு கூந்தலை அலசலாம். வாரம் ஒருமுறையாவது இதைச் செய்வது உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தைக் காக்கும்.

சூழலிலுள்ள ஈரப்பதம் அழுக்கையும் தூசையும் அதிக அளவில் ஈர்த்து, கூந்தலில் படியச் செய்யும். அவை சேரச் சேர கூந்தலில் பிசுபிசுப்பு சேர்ந்து உதிரத் தொடங்கும். எனவே, வாரம் இருமுறை கூந்தலை அலச வேண்டியது அவசியம். மைல்டான ஷாம்பூ உபயோகித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். அதிக சூடான நீரைத் தவிர்க்கவும்.

மழை நாள்களில் கூடியவரையில் கெமிக்கல் சிகிச்சைகளையும் ஹேர் டிரையர் உபயோகிப்பதையும் தவிர்ப்பது நல்லது.

உணவு விஷயத்திலும் இந்த நாள்களில் அதிக அக்கறை தேவை. நீங்கள் என்ன உண்கிறீர்களோ, அதன் பிரதிபலிப்பு கூந்தலில் தெரியும். புரதம் நிறைந்த முட்டை, வால்நட்ஸ், பாதாம், பால் உணவுகள், பருப்பு, கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை முறையாகச் சாப்பிடும்பட்சத்தில் கூந்தலில் பளபளப்பும் உறுதியும் கூடுவதைப் பார்க்கலாம்!