Published:Updated:

How to: வீட்டிலேயே பெடிக்யூர் செய்துகொள்வது எப்படி? | How to do pedicure at home?

வீட்டிலேயே pedicure செய்வது எப்படி

பாதங்களை பராமரிப்பது பற்றி பலரும் நினைப்பதில்லை. அப்படியே நினைத்தாலும் அதற்கான பெடிக்யூர் (Pedicure) காஸ்மெடிக் சிகிச்சையை பார்லரிலேயே செய்துகொள்கின்றனர். வீட்டிலேயே எளிய முறையில் பெடிக்யூர் செய்துகொள்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Published:Updated:

How to: வீட்டிலேயே பெடிக்யூர் செய்துகொள்வது எப்படி? | How to do pedicure at home?

பாதங்களை பராமரிப்பது பற்றி பலரும் நினைப்பதில்லை. அப்படியே நினைத்தாலும் அதற்கான பெடிக்யூர் (Pedicure) காஸ்மெடிக் சிகிச்சையை பார்லரிலேயே செய்துகொள்கின்றனர். வீட்டிலேயே எளிய முறையில் பெடிக்யூர் செய்துகொள்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

வீட்டிலேயே pedicure செய்வது எப்படி

தொடர்ச்சியான பணி, குடும்ப வேலை, அடுத்தடுத்து காத்துக்கொண்டிருக்கும் கடமைகள் என ஓடிக்கொண்டே இருக்கும் பெண்களுக்கு, தங்களை பராமரிப்பதற்கென நேரம் ஒதுக்குவது என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. அப்படியே பராமரிப்பை மேற்கொண்டாலும், பெரும்பாலும் அது முகத்திற்கும், கேசத்திற்குமானதாகவே உள்ளது. பாதங்களை பராமரிப்பது பற்றி பலரும் நினைப்பதில்லை. அப்படியே நினைத்தாலும் அதற்கான பெடிக்யூர் (Pedicure) காஸ்மெடிக் சிகிச்சையை பார்லரிலேயே செய்துகொள்கின்றனர். வீட்டிலேயே எளிய முறையில் பெடிக்யூர் செய்துகொள்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

- நெயில் கட்டர்
- பஞ்சு
- நெயில் பாலிஷ் ரிமூவர்
- நெயில் ஃபைல் (Nail File)
- ஃபுட் ஸ்க்ரப் (Foot Scrub)

- க்யூட்டிகிள் க்ரீம்
- க்யூட்டிகிள் புஷ்ஷர் (Cuticle pusher)

- மாய்ஸ்ச்சரைஸர்

- நெயில் பாலிஷ்

Pedicure (Representational Image)
Pedicure (Representational Image)
Pixabay

ஸ்டெப் 1:

முதலில், கால்களில் உள்ள நகங்களை வெட்டிக்கொள்ளவும். கார்னர்களில் உள்நோக்கி வெட்டினால் வலி ஏற்படலாம் என்பதால் தவிர்க்கவும். நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் பழைய நெயில் பாலிஷை அகற்றி, நகங்களை நன்றாகச் சுத்தம் செய்யவும். U வடிவம், Round வடிவம் என விரும்பும் வடிவத்தில் நகங்களை ஷேப் செய்துகொள்ளவும். அதற்கு நெயில் ஃபைலை பயன்படுத்தவும்.

ஸ்டெப் 2 :

இரண்டு பாதங்களையும் வைக்கக்கூடிய அளவில் ஒரு டப் எடுத்துக்கொள்ளவும். கணுக்கால் வரை மூழ்கும் அளவுக்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பவும். அதில் சிறிது குளியல் உப்பு (Bath salts) சேர்க்கவும். நீங்கள் விரும்பும் எசன்ஷியல் ஆயில் (essential oil) சில துளிகள் சேர்க்கலாம். பாதங்களை இந்த தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து ஓய்வெடுக்கவும். பின்னர் பாதங்களை வெளியே எடுத்து, காட்டன் துணி கொண்டு ஈரம் உலர்த்தவும்.

ஸ்டெப் 3:

இப்போது இறந்த செல்களை நீக்கும் முறை. பாதங்களை உலர்த்திய பின், ஒவ்வொரு கால் நகத்தின் வேர்ப்பகுதியிலும் சிறிதளவு க்யூட்டிகிள் கிரீமை அப்ளை செய்து, சில நிமிடங்கள் வைத்திருக்கவும். அந்த நேரத்தில், ஃபுட் ஸ்கிரப் பயன்படுத்தி பாதத்தில் உள்ள உலர்ந்த மற்றும் இறந்த சரும செல்கள் மிருதுவாகத் தேய்த்து நீக்கவும். அடுத்து, க்யூட்டிகிள் க்ரீமை துடைத்து எடுக்கவும். க்யூட்டிகிள்களை மெதுவாக நீவிவிடவும்.

Pedicure (Representational Image)
Pedicure (Representational Image)
Photo by Rune Enstad on Unsplash

ஸ்டெப் 4:

பாதங்களை சுத்தமாகக் கழுவி, உலர்த்தி, மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யவும். அது சருமத்தை மென்மையாக்கி, ஈரப்படுத்தி, வெடிப்புகளை சரிசெய்யும்.

ஸ்டெப் 5:

பாதத்தில் நகங்களை அலங்கரிக்கலாம். விருப்பப்படி நெயில் பாலிஷ் தீட்டவும். அதற்கு முன் பேஸ் கோட் போடுவது நல்லது. கோட் உலரும் வரை காத்திருந்து, பின்னர் ஒரு கோட் நெயில் பாலிஷ் போட்டு, அது காய்ந்ததும் மறு கோட் அப்ளை செய்யலாம். இது நெயில் பாலிஷ் நீண்ட நாள்கள் நீடிக்க உதவும்.

பெடிக்யூர் செய்த பளிச் பாதங்கள் ரெடி!