Published:Updated:

How to: ஆண்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பது எப்படி? I How to do skin care routine for men?

Men ( Photo by Drew Hays on Unsplash )

ஆண்கள் தங்கள் சருமத்தின் தன்மையை முதலில் அறிந்துகொண்டு, அதற்கு ஏற்ற க்ளென்ஸர் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். சன்ஸ்க்ரீனில் லோஷன், ஜெல், க்ரீம் மற்றும் மேட் ஃபினிஷ் எனப் பல வகை உள்ளன. இவற்றில் ஆண்களுக்குப் பெரும்பாலும் பரிந்துரைக்கத்தக்கது... மேட் ஃபினிஷ்.

Published:Updated:

How to: ஆண்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பது எப்படி? I How to do skin care routine for men?

ஆண்கள் தங்கள் சருமத்தின் தன்மையை முதலில் அறிந்துகொண்டு, அதற்கு ஏற்ற க்ளென்ஸர் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். சன்ஸ்க்ரீனில் லோஷன், ஜெல், க்ரீம் மற்றும் மேட் ஃபினிஷ் எனப் பல வகை உள்ளன. இவற்றில் ஆண்களுக்குப் பெரும்பாலும் பரிந்துரைக்கத்தக்கது... மேட் ஃபினிஷ்.

Men ( Photo by Drew Hays on Unsplash )

''சருமப் பராமரிப்பு என்றாலே அது பெண்களுக்குத்தான் என்பதில்லை. ஆண்களும் தங்கள் சருமத்துக்கான பராமரிப்பை கொடுக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் சரும வறட்சி முதல் மாசுபடுதல் வரை பல பிரச்னைகளிலிருந்தும் பாதுகாப்புப் பெறலாம், ஃப்ரெஷ் லுக்கில் இருக்கலாம்'' என்று கூறும் அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா, அதற்கான வழிகாட்டல்களை இங்கே வழங்குகிறார்.

Face care for men (Representational image)
Face care for men (Representational image)
Pixabay

ஃபேஸ்வாஷ், க்ளென்ஸர்...

சில ஆண்களுக்கே உள்ள சோம்பல் குணத்தால், காலையில் எழுந்ததும் மற்றும் வெளியில் சென்று வந்த பின்னர் முகம் கழுவும் பழக்கம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால், காலை எழுந்தவுடன், மேலும் வெயில், தூசு என்று என்று சென்று வந்த பின்னர் முகத்தைக் கழுவுவது அவசியம், அடிப்படை. அப்போது சோப் பயன்படுத்துவதைவிட பேஸ்வாஷ், கிளென்ஸர் (cleanser) போன்றவற்றைப் பயன்படுத்தும்போது சருமத்துக்கு டீப் க்ளீன் கிடைக்கும்.

சருமத்தின் தன்மை...

ஆண்கள் தங்கள் சருமத்தின் தன்மையை முதலில் அறிந்துகொண்டு, அதற்கு ஏற்ற க்ளென்ஸர், ஃபேஸ்வாஷ் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் ஜெல் அடிப்படையிலான க்ளென்ஸர் (gel based cleanser) பயன்படுத்தலாம். வறண்ட மற்றும் பருக்கள் உள்ள சருமம் உடையவர்கள் மில்க் அல்லது லோஷன் அடிப்படையிலான (milk/lotion based cleanser) க்ளென்ஸரைப் பயன்படுத்தலாம். கூடவே anti acne cleanser-ம் பயன்படுத்தலாம்.

க்ளென்ஸர் பயன்படுத்திய பின் சருமத்தை அப்படியே விடாமல், அடுத்ததாக மென்மையான மாய்ஸ்ச்சரைஸர் (moisturizer)/லோஷன்/சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. இவற்றையும் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்.

Skin care for men (Representational image)
Skin care for men (Representational image)
Pixabay

மேட் ஃபினிஷ் சன்ஸ்கிரீன்...

சன்ஸ்க்ரீனில் லோஷன், ஜெல், க்ரீம் மற்றும் மேட் ஃபினிஷ் எனப் பல வகை உள்ளன. இவற்றில் ஆண்களுக்குப் பெரும்பாலும் பரிந்துரைக்கத்தக்கது... மேட் ஃபினிஷ். அதேபோல, சன்ஸ்கிரீன் தேர்வு செய்யும்போது அதில் லேபிளில் UV A, UV B போன்றவை குறிப்பிடப்பட்டுள்ள சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது.

சருமம் பொலிவு பெற... 

பகலுக்கான சருமப் பராமரிப்பு போல, இரவு நேரத்துக்கான சருமப் பராமரிப்பும் முக்கியம். இரவு உறங்குவதற்கு முன்னர் முகத்தை க்ளென்ஸர்/ஃபேஸ்வாஷ் கொண்டு கழுவ வேண்டும். பின் மாய்ஸ்ச்சரைஸர் (moisturizer) அப்ளை செய்ய வேண்டும். கூடவே நைட் கிரீம் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு. இந்தப் பராமரிப்பு முறைகளால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும், சருமம் வறட்சி இன்றி பொலிவாக இருக்கும்.

ஸ்கிரப் தயாரிக்கவும்...

ஆண்கள் அதிகமாக வெளியில் அலைவதால் முகத்தில் ஏற்படும் கருமையைப் போக்க, ஸ்கிரப் பயன்படுத்தலாம். அதற்கு, ஒரு டீஸ்பூன் காபித்தூள், ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்து ஒன்றாகக் கலந்து ஸ்கிரப் தயார் செய்து, முகத்தில் அப்ளை செய்து, 15 நிமிடங்களில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரத்தில் இரண்டு நாள்கள் இதை செய்து வர நல்ல பலன் இருக்கும்.

மேலும், ஸ்கிரப் செய்து முடித்த பின்னர், பப்பாளி அல்லது கேரட் ஜூஸ் எடுத்து, ஸ்கிரப் செய்த முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்துகொள்ளவும். `வாவ்... என்ன ஸ்கின் மினுங்குது' என்று கேட்பார்கள் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்!