Published:Updated:

How to: பாதவெடிப்பை சரிசெய்வது எப்படி? I How to get rid of cracked heels?

Get rid of Cracked Heels Permanently | Nature Nurture

''பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு மிக முக்கியக் காரணம், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பாதங்களில் ஏற்படும் வெடிப்பை வீட்டிலேயே எளிய முறையில் சரிசெய்வதற்கான மூன்று விதமான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...

How to: பாதவெடிப்பை சரிசெய்வது எப்படி? I How to get rid of cracked heels?

''பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு மிக முக்கியக் காரணம், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பாதங்களில் ஏற்படும் வெடிப்பை வீட்டிலேயே எளிய முறையில் சரிசெய்வதற்கான மூன்று விதமான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...

Published:Updated:
Get rid of Cracked Heels Permanently | Nature Nurture

வெடிப்புகள் இல்லாத வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான். ஆனால், பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்னை. கேசம், சருமத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதத்துக்குக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. இப்படி கவனிக்கப்படாமல் விடுவதாலேயே பாத வெடிப்பு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும். பாத வெடிப்பை சரிசெய்வதற்கான பராமரிப்பு வழிமுறைகளைச் சொல்கிறார், 'ட்ரெண்ட்ஸ் அகாடமி'யை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா.

வினோத் பாமா
வினோத் பாமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காரணம்..

''பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு மிக முக்கியக் காரணம், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக, கோடையில் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதங்களில் ஏற்படும் வெடிப்பை வீட்டிலேயே எளிய முறையில் சரிசெய்வதற்கான மூன்று விதமான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செய்முறை 1

தேவையான பொருள்கள்

1. வெள்ளை வினிகர்

2. கருங்கல் அல்லது கடைகளில் விற்கப்படும் பியுமிஸ் கல் (pumice stone)

3. ஆலிவ் ஆயில்

4. வெந்நீர்

Feet (Representational Image)
Feet (Representational Image)
Photo by Rune Enstad on Unsplash

செயல்முறை

- முதலில், பாதங்களை வைக்கக்கூடிய அளவுக்கு ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, சிறிதளவு வெள்ளை வினிகர் ஊற்றி, அதில் பாதங்களை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

- கருங்கல் அல்லது பியுமிஸ் ஸ்டோன் கொண்டு வெடிப்பு இருக்கும் பகுதிகளில் நன்றாகத் தேய்க்கவும். இதன் மூலம் பாதத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.

- பின் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்து, கழுவிய பின், நன்றாகத் துடைத்துவிட்டு ஆலிவ் ஆயில் அப்ளை செய்து, நடக்காமல் ஓய்வெடுக்கவும்.

இதுபோல அடிக்கடி செய்துவர பாத வெடிப்பு குறையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செய்முறை 2

தேவையான பொருள்கள்

1. அவகடோ - ஒன்று

2. வாழைப்பழம் - இரண்டு

Feet (Representational Image)
Feet (Representational Image)
Image by Charles Thompson from Pixabay

செயல்முறை

- அவகடோ, வாழைப்பழம் இரண்டிலும் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதற்கான சத்துகள் நிறைந்துள்ளன. மேலும், வெளிப்பூச்சில் அவை சருமத்தின் ஈரப்பதத்தை மீட்கும்.

- இவை இரண்டையும் தோல்களை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.

- பின் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

- இந்தக் கலவையை பாதம் முழுவதும் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் கழுவவும்.

- இதேபோன்று வாரத்திற்கு ஒருமுறை செய்துவந்தால் மெல்ல மெல்ல பாத வெடிப்புக் குறைந்து, முழுமையாக குணமடைந்துவிடும்.

செய்முறை 3

தேவையான பொருள்கள்

1. பூசணிக்காய்

2. காபி தூள்

3. நாட்டுச்சக்கரை

4. பாதாம் எண்ணைய்

5. எலுமிச்சை சாறு

செய்முறை

- பூசணிக்காயை சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்து எடுத்த பூசணிக்காயை மிக்ஸியில் அரைத்து, அந்த பேஸ்ட்டை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடைகளில் இது pumpkin pure என்ற பெயரில் ரெடிமேடாகவும் கிடைக்கும்.

- பூசணி பேஸ்ட்டுடன் பாதாம் எண்ணெய் 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை 2 டீஸ்பூன், காபி தூள் 1 டீஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலக்கி ஸ்கிரப் மாதிரி தயாரித்துக்கொண்டு, அதனை பாதம் முழுவதும் அப்ளை செய்த பின், 15 நிமிடங்கள் வைத்திருந்து கால்களைக் கழுவிக்கொள்ளவும்.

- இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வரவும்; பாதவெடிப்பு நிச்சயம் குறைந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism