Published:Updated:

How to: வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி? | How to make aloe vera gel at home?

Home made aloe vera gel

``பெரும்பாலும் கற்றாழையை ஜெல் வடிவில் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக நம் வீட்டிலேயே மிக எளிய முறையில் கற்றாழை ஜெல்லைத் தயாரிக்க முடியும்'' என்று கூறும் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா அதைத் தயாரிக்கும் வழிமுறைகளை விளக்குகிறார்.

How to: வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி? | How to make aloe vera gel at home?

``பெரும்பாலும் கற்றாழையை ஜெல் வடிவில் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக நம் வீட்டிலேயே மிக எளிய முறையில் கற்றாழை ஜெல்லைத் தயாரிக்க முடியும்'' என்று கூறும் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா அதைத் தயாரிக்கும் வழிமுறைகளை விளக்குகிறார்.

Published:Updated:
Home made aloe vera gel

``சருமம், கேசம் என நம் உடல் பராமரிப்பில் கற்றாழை ஜெல்லின் பங்கு மிக அதிகம். உடலுக்குக் குளிர்ச்சி தர, குளிர்ச்சி, கேச வளர்ப்பு, சருமத்தில் ஏற்படும் பரு, சருமப் பொலிவு எல்லாவற்றுக்கும் கற்றாழை பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலும் கற்றாழையை ஜெல் வடிவில் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக நம் வீட்டிலேயே மிக எளிய முறையில் கற்றாழை ஜெல்லை தயாரிக்க முடியும்'' என்று கூறும் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா அதைத் தயாரிக்கும் வழிமுறைகளை விளக்குகிறார்.

Aloe Vera
Aloe Vera

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்றாழை ஜெல் தயாரிக்க தேவையான பொருள்கள்:
1. கற்றாழை.
2. வைட்டமின் சி கேப்ஸுல்(பவுடர் வடிவில்).
3. வைட்டமின் இ கேப்ஸுல்.
4. ரோஸ் எண்ணெய்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தயாரிக்கும் முறை:
* முதலில் கற்றாழையை சுத்தம் செய்து மேல் இருக்கும் தோலை நீக்கிய பின் அதன் உள் இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
* அடுத்ததாக 500 மி.கி வைட்டமின் சி கேப்ஸுல் ஒன்றை எடுத்து, அதன் உள்ளே இருக்கும் பவுடரை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்துக்கொள்ளவும்.
* இதேபோன்று வைட்டமின் இ கேப்ஸுல் ஒன்றை எடுத்து அதிலிருக்கும் எண்ணையைச் சேர்க்கவும்.
* இந்தக் கலவையில் இரண்டு சொட்டுகள் ரோஸ் எண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

கற்றாழை
கற்றாழை

தற்போது கற்றாழை ஜெல் தயாராக இருக்கும். இதை அப்படியே முகத்தில், கேசத்தின் வேர்ப்பகுதியில் பயன்படுத்தலாம். அல்லது இதனுடன் முல்தானி மெட்டி, கடலை மாவு போன்றவற்றை சேர்த்தும் பயன்படுத்தலாம். இந்த ஜெல்லை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை பயன்படுத்த முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism