Published:Updated:

How to series: How to remove vaginal hair?

Bikini Hair Removal Guide
News
Bikini Hair Removal Guide

பெண்களுக்குப் பிறப்புறுப்புப் பகுதியில் சருமம் மிகவும் சென்சிட்டிவ்வாக இருக்கும் என்பதால், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள ரோமங்களை நீக்கப் பயன்படுத்தும் முறையை இங்கும் பின்பற்றுவது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

பெண்களுக்குப் பிறப்புறுப்புப் பகுதியில் சருமம் மிகவும் சென்சிட்டிவ்வாக இருக்கும் என்பதால், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள ரோமங்களை நீக்கப் பயன்படுத்தும் முறையை இங்கும் பின்பற்றுவது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்த ஆலோசனைகள் தருகிறார், சரும மருத்துவர் ரூபா.

மருத்துவர் ரூபா
மருத்துவர் ரூபா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஷேவர் (Shaver):

``வெஜைனல் ஹேரை நீக்க பலரும் பயன்படுத்துவது, ஷேவர். இது எளிமையான முறை. என்றாலும், இதன்மூலம் வெஜைனல் ஹேர் ரிமூவ் செய்யும்போது தவறுதலாகக் காயம் ஏற்பட்டுவிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் ரோம வளர்ச்சியும் அதிகமாக வாய்ப்புள்ளது.

வேக்ஸிங்

பெரும்பாலும் பார்லர் சென்றுதான் வேக்ஸிங் செய்துகொள்ள முடியும். ஹாட் வேக்ஸ் மிகவும் மிருதுவான வெஜைனல் பகுதியில் படும்போது சருமம் பாதிக்கப்படலாம்; காயம் ஏற்படலாம். எனவே வேக்ஸிங் முறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் கோல்டு வேக்ஸ் பயன்படுத்தலாம்.

Cream (Representational Image )
Cream (Representational Image )
Photo by cottonbro from Pexels

கிரீம்

ஹேர் ரிமூவல் கிரீமை வெஜைனல் பகுதியில் பயன்படுத்தும்போது அதில் இருக்கும் கெமிக்கலால் அலர்ஜி, தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. கூடவே, அதை அப்ளை செய்த டைரக்‌ஷனிலேயே அகற்ற வேண்டும்; அது மிகவும் கஷ்டம். வெஜைனல் பகுதியின் உள்ளே இது பாதிப்பை ஏற்படுத்திடும் வாய்ப்பும் உள்ளது என்பதால் இதைத் தவிர்ப்பது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எபிலேட்டர்ஸ் (Epilators):

எபிலேட்டர்ஸ் என்பது சிறிய மெஷின். இதனைக் கொண்டு ரோமத்தின் வேர் வரை சென்று அதை நீக்க முடியும். ஆனால் இது மிகவும் வலி நிறைந்ததாக இருக்கும் என்பதால் யாரெல்லாம் வலி பொறுக்க முடியுமோ அவர்கள் பயன்படுத்தலாம். இந்த முறையில் தோற்று ஏற்படாமல் கவனமாகக் கையாள வேண்டும்.

கிளிப்பிங் மற்றும் ட்ரிம்மிங்:

ரொம்பவே எளிதான, பாதுகாப்பான முறை என்பதால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால், இதில் முழுமையாக ஹேரை நீக்க முடியாது. பொதுவாக, ரோமத்தை முழுமையாக நீக்கும் முறைகளைப் பயன்படுத்தும்போது சிறு சிறு கொப்புளங்கள், எரிச்சல் போன்றவை ஏற்படும் என்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். பக்க விளைவுகள் மிகவும் குறைவு.

லேசர் ஹேர் ரிடெக்சன் (Laser hair reduction)

இது ரொம்பவே பாதுகாப்பான முறை. இதை மேற்கொள்ளும்போது ரோம வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். 5 முதல் 6 சிட்டிங் தேவைப்படலாம். 6 முறைக்கு மேல் தொடர்ந்து மெயின்டெயின் செய்தால் போதுமானது. தேவைப்பட்டால் வருடத்திற்கு ஒருமுறை, அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மறுபடியும் இந்த முறையை மேற்கொள்ளலாம்'' என்றார்.