Published:Updated:

How to: உதடுகளை பராமரிப்பது எப்படி? I How to take care of lips naturally?

lip care

உதட்டில் ஸ்கிரப் செய்து முடித்த பின், மாஸ்க் போட வேண்டும். ஏனென்றால் லிப் ஸ்கிரப் செய்த பின் உதட்டின் மேற்பகுதியின் தோல் நீங்கியிருக்கும். இதனால் மாஸ்க் போடுவது அவசியமாகிறது.

Published:Updated:

How to: உதடுகளை பராமரிப்பது எப்படி? I How to take care of lips naturally?

உதட்டில் ஸ்கிரப் செய்து முடித்த பின், மாஸ்க் போட வேண்டும். ஏனென்றால் லிப் ஸ்கிரப் செய்த பின் உதட்டின் மேற்பகுதியின் தோல் நீங்கியிருக்கும். இதனால் மாஸ்க் போடுவது அவசியமாகிறது.

lip care

முகம் மற்றும் கேசப் பராமரிப்புபோல, உதடுகளுக்கான பராமரிப்பும் முக்கியம். சருமத்திற்கு மட்டும் பராமரிப்பை கொடுத்துவிட்டு உதடுகளை சரிவர கவனிக்காவிட்டால் முகத்தின் அழகு முழுமையாக வெளிப்படாது. இதழ்களை அழகாக்க லிப்ஸ்டிக்தான் வழி என்று இல்லை. இயற்கையான வழிகளில் இதழ்களை பொலிவூட்ட பியூட்டி தெரபிஸ்ட் ரதி ராதிகா தரும் டிப்ஸ் இங்கே...

lips
lips

சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு

சர்க்கரை இரண்டு ஸ்பூன், எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் இரண்டையும் கலந்து உதட்டில் ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை தேய்க்கவும்(ஸ்கிரப்பிங்). முன்னதாக, உதட்டில் லிப்ஸ்டிக் அப்ளை செய்திருந்தால் ரிமூவ் செய்துவிடவும். பொதுவாகவே எந்த ஸ்கிரப் செய்வதாக இருந்தாலும் அதற்கு முன்னதாக உதட்டை சுத்தப்படுத்திக்கொள்வது அவசியம். சர்க்கரை, எலுமிச்சை கொண்டு கொண்டு ஸ்கிரப் செய்யும்போது உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும். ஸ்கிரப் செய்து முடித்த பின் நல்ல காட்டன் துணி அல்லது டிஷ்யூ கொண்டு உதட்டை துடைத்துக்கொள்ளவும்.

மாஸ்க்

உதட்டில் ஸ்கிரப் செய்து முடித்த பின், மாஸ்க் போட வேண்டும். ஏனென்றால் லிப் ஸ்கிரப் செய்த பின் உதட்டின் மேற்பகுதியின் தோல் நீங்கியிருக்கும். இதனால் மாஸ்க் போடுவது அவசியமாகிறது.

மாஸ்க் செய்ய தேவையான பொருள்கள்

- கேரட் அரைத்தது

- பீட்ரூட் அரைத்தது

- பாதாம் எண்ணைய்

- எலுமிச்சை சாறு

மாஸ்க் தயார் செய்யும் முறை

- அரைத்த கேரட் மற்றும் பீட்ருட் இரண்டையும் தலா ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் மற்றும் பாதாம் எண்ணெய் அரை ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளது; பீட்ரூட் உதட்டிற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்; எலுமிச்சை சிறந்த பிளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படும்; கூடவே பாதாம் எண்ணெய் சேர்வதால் நல்ல ஈரப்பதம் (moisture) கிடைக்கும்.

இந்தக் கலவையை மாஸ்க் போல உதட்டின் மீது அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின் துடைத்து எடுக்கவும். உதடு பொலிவு பெற்றிருப்பதை நன்கு காண முடியும்.

Lip care
Lip care

லிப் பாம்

அடுத்ததாக, லிப் பாம். எல்லா செயல்முறைகளும் முடிந்த பின் லிப் பாமை உதட்டில் இடவேண்டும். லிப் பாம் செய்ய காரட் அல்லது பீட்ரூட் ஜூஸ் சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். வெண்ணையைக் கொஞ்சமாக சூடுபடுத்திக்கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் கேரட் அல்லது பீட்ரூட் ஜூஸ் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை ஐஸ் ட்ரேயில் இட்டு, ஃப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக மாற்றி எடுத்துக்கொள்ளவும்.

இந்த ஐஸ் கட்டி லிப் பாமை உதட்டில் நன்றாகத் தேய்த்து எடுக்கவும். மென்மையாக மாறிவிடும். கலவையை ஃப்ரீஸரில் வைக்காமல், ஃபிரிட்ஜில் வைத்து தினமும் இரவு தூங்கும் முன் உதட்டில் அப்ளை செய்து வந்தாலும் நல்ல பலனைக் கொடுக்கும்.