Published:Updated:

வேப்பிலை ஃபேஸ் பேக்... கற்றாழை கண் மை... மரிக்கொழுந்து எண்ணெய்!

பருக்களுக்கு ‘பை’
பிரீமியம் ஸ்டோரி
பருக்களுக்கு ‘பை’

- சு.கவிதா

வேப்பிலை ஃபேஸ் பேக்... கற்றாழை கண் மை... மரிக்கொழுந்து எண்ணெய்!

- சு.கவிதா

Published:Updated:
பருக்களுக்கு ‘பை’
பிரீமியம் ஸ்டோரி
பருக்களுக்கு ‘பை’

இயற்கை பொருள்களின் மூலம் உடலை மெருகேற்றிக்கொள்ளும் வசீகரம்தானே தற்போது எல்லோரும் விரும்புவதாக இருக்கிறது... பெருநகரங்களில்கூட சிரமமின்றி கிடைக்கின்ற இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி நம் வசீகரத்தை அதிகரித்துக்கொள்ள, பியூட்டீஷியன் ராஜம் முரளி தரும் ஆலோசனைகள் உங்களுக்காக..!

 ராஜம் முரளி
ராஜம் முரளி

வேப்பிலைக்கு ‘ஹாய்’... பருக்களுக்கு ‘பை’!

ஒரு வேப்பமரம், ஒரு மருத்துவருக்கு சமம். குறிப்பாக, வேப்பிலையில் அபரிமிதமான ஆன்டிசெப்டிக் குணங்கள் இருக்கின்றன. அது பருக்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது. சிலர் பருக்களைக் கிள்ளிக் கிள்ளி அதனால் சீழ் பிடித்துவிடும். அதிலிருந்து நிவாரணம் பெற, வேப்பிலையில் ஆவி பிடிக்கலாம். பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து, அதில் 10 தளிரான வேப்பிலையைப் போட்டு (அதற்கு அதிகமாகப் போட்டால் முகம் எரியும்), இரண்டு நிமிடங்கள் ஆவி பிடிக்கவும். பின்னர் ஐஸ் க்யூப்களால் உடனே முகத்தை ஒற்றி எடுக்கவும். இப்படி ஒருநாள்விட்டு ஒருநாள் செய்துவர பருக்களால் ஏற்படும் அரிப்பும் வலியும் நின்றுவிடுவதோடு, பருக்களும் குறைந்துபோகும்.

வேப்பிலை ஃபேஸ் பேக்...
கற்றாழை கண் மை...
மரிக்கொழுந்து எண்ணெய்!

வேப்பிலையை ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். இளம் தளிரான வேப்பிலை - 5, ஊற வைத்து அரைத்த பாதாம் விழுது - ஒரு டீஸ்பூன், பால் - சிறிதளவு... இந்த மூன்றையும் நன்கு கலந்து க்ரீம்போல ஆக்கவும். இதை முகத்தில் பேக் போலப் போட்டு வர பருக்கள் இருந்த அடையாளம் மறைவதோடு, மீண்டும் வராமலும் இருக்கும்.

மென்மைக்கு... மரிக்கொழுந்து!

மரிக்கொழுந்தை அதன் வாசனைக்காக மட்டுமே நாம் அறிவோம். ஆனால், அது எண்ணெய் தன்மையையும் தன்னுள் அடக்கிவைத்திருக்கும் ஓர் இயற்கை மூலிகை. தலையின் ஸ்கால்ப் முதல் பாதம்வரை, சருமத்தை மென்மையாக்கும் தன்மை மரிக்கொழுந்துக்கு உண்டு. எனவே, மரிக்கொழுந்தை எண்ணெயாகக் காய்ச்சி ஸ்கால்ப், கேசம் முதல் உடலிலும் தடவிக்கொள்ளலாம். இது உலர்வான கேசத்தை மென்மையாக்கும், ஸ்கால்ப்பை கண்டிஷன் செய்து மென்மையாக்கி முடியை நெருக்கமாக வளர வைக்கும்.

வேப்பிலை ஃபேஸ் பேக்...
கற்றாழை கண் மை...
மரிக்கொழுந்து எண்ணெய்!

மரிக்கொழுந்து எண்ணெய் தயாரிக்கும் முறை

தேங்காய் எண்ணெய் - கால் லிட்டர்

குச்சிகள் நீக்கப்பட்ட ஃபிரெஷ்ஷான

மரிக்கொழுந்து இலைகள் - 100 கிராம்

சிறிதாக நறுக்கப்பட்ட வெட்டிவேர் - ஒரு டீஸ்பூன்

தேங்காய் எண்ணெயில் மரிக்கொழுந்து இலைகளைப் போட்டுக் காய்ச்சவும். கலவை தைலப் பதத்துக்கு வந்தவுடன் அதில் வெட்டிவேரைச் சேர்த்து அடுப்பை அணைத்து அப்படியே மூடிவிடவும் (இதில் வெட்டிவேர் ஒரு பிரிசர்வேட்டிவ்வாகச் செயல்படும்). இந்த எண்ணெயைத் தலைக்கு மட்டுமல்லாது பாதங்கள் மற்றும் நகங்களில் தொடர்ந்து தடவிவரும்போது, அப் பகுதிகளில் உள்ள சொரசொரப்புத் தன்மை மறைந்து மென்மையாகும்; நகங்கள் உடையாமல் இருக்கும். பாத வெடிப்புக்கும் இது நிவாரணம் தரும். வாரம் இருமுறை, இந்த எண்ணெயைச் சிறிது சூடாக்கி தலை மற்றும் உடல் முழுக்கத் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்தும் குளிக்கலாம்.

மரிக்கொழுந்து ஃபேஸ் பேக்

தேவையானவை:

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

பால் - ஒரு டீஸ்பூன்

மரிக்கொழுந்து இலைகள் - இரண்டு டீஸ்பூன்

செய்முறை:

முதல்நாள் இரவு கடலைப்பருப்பை ஊறவைக்கவும். மறுநாள் காலையில் இதனுடன் பால் மற்றும் மரிக்கொழுந்து இலைகளைச் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதை முகத்தில் பேக்காகப் போட்டுவந்தால் மென்மையான மாசுமருவற்ற சருமம் கிடைக்கும்.

வேப்பிலை ஃபேஸ் பேக்...
கற்றாழை கண் மை...
மரிக்கொழுந்து எண்ணெய்!

இதழ்களை நிறமூட்ட... ஆவாரம்பூ!

சருமத்தை பொன்னிறமாக மாற்றும் வல்லமை பெற்றதாலேயே, ஆவாரம்பூவை பொன் ஆவாரம்பூ என்று அழைப்பர். இதைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கும்போது தலைமுடி கருகருவென மாறும். உதட்டுக் கருமையை மறைய வைக்கும் ஆற்றலும் ஆவாரம்பூவுக்கு உண்டு.

உலர்த்திய ஆவாரம்பூ பவுடர் - 25 கிராம், எலுமிச்சை இலை பவுடர் - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - அரை டீஸ்பூன், உலர் திராட்சை சாறு - ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு கலந்தால் க்ரீம்போல வரும். இதைத் தினமும் காலை மற்றும் மாலை உதடுகளில் தடவி வந்தால் உதட்டுக் கருமை மறையும்.

ஆவாரம்பூ முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் கொண்டது. எனவே, இதை வைத்து ஒரு ஹேர் பேக்கும் தயாரிக்கலாம். தேங்காய்ப்பால் - கால் கப், ஆவாரம்பூ பவுடர் - கால் கப், வெந்தயப்பொடி - இரண்டு டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைச் சாறு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையெனில் சிறிது வெந்நீர் சேர்த்து பேஸ்ட்போலத் தயார் செய்யவும். இதைத் தலை முழுக்க நன்கு தடவி 10 - 15 நிமிடங்கள் ஊறவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் அலசவும். இது முடி வளர்ச்சியைத் தூண்டி, மென்மையான கூந்தலுக்கும் வழிவகுக்கும்.

வேப்பிலை ஃபேஸ் பேக்...
கற்றாழை கண் மை...
மரிக்கொழுந்து எண்ணெய்!

கற்றாழை கண் மை!

கற்றாழை... உடலுக்கு ஆரோக்கியம் தரும் அற்புதமான ஒரு மூலிகை. கற்றாழையை வைத்து கண்மை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஒரு தடிமனான கற்றாழைப் பட்டையை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுக்கவும். ஒரு சிறிய குத்துவிளக்கில் விளக்கெண்ணெய் விட்டு திரி போட்டு விளக்கேற்றவும். இந்தச் சுடரில் தோல் சீவி வைத்திருக்கும் கற்றாழை ஜெல்லைக் காட்டிக்கொண்டே வந்தால் அந்தக் கற்றாழை ஜெல் கொஞ்சம் கொஞ்சமாக முழுக்கவே கறுப்பாக மாறிவிடும். ஆனால், கறுப்பாக மாறும்போது ஜெல் உடைந்து கீழே விழாது. பின்னர், முழுவதும் கறுப்பாக மாறிய கற்றாழை ஜெல்லை ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் மூன்று, நான்கு சொட்டுகள் விளக்கெண்ணெயைச் சேர்த்து அரைத்து எடுத்தால்... கண்களுக்குக் குளிர்ச்சி தரும் இயற்கையான கண் மை தயார்.

சருமத்தை கற்றாழை ஜெல் மாசு மருவற்றும் பளபளப்புடனும் மாற்றும். ஆனால், அதை அப்படியே முகத்தில் தடவினால், சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு அதன் ஹெவினெஸ்ஸை தாங்க முடியாமல் கன்னிப்போகலாம். சரியான விதத்தில் கற்றாழை ஃபேஸ் பேக் தயாரிக்க, தோல் நீக்கிய கற்றாழையை சிறிதளவு எடுத்து கைகளால் நசுக்கி ஜெல்லாக்கிக் கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் சந்தனத்தூள், அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் ஆக்கி, ஃபேஸ் மாஸ்க்காகப் போட, முகம் பொலிவு பெறும். அதேபோல கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன், பால் அரை டீஸ்பூன், கடலை மாவு அரை டீஸ்பூன் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்தும் முகத்துக்கு ஃபேஸ் மாஸ்க்காகப் போடலாம்.

வேப்பிலை ஃபேஸ் பேக்...
கற்றாழை கண் மை...
மரிக்கொழுந்து எண்ணெய்!

பட்டுப்போல கூந்தலுக்கு... செம்பருத்தி இலை!

செம்பருத்தி முடி வளர்ச்சியைத் தூண்டி, உலர்ந்த கூந்தலையும் மென்மையாக்கும். கூந்தல் மிகவும் உலர்வாகவோ, அதிக எண்ணெய்ப் பசையுடனோ இல்லாமல் இருக்க உதவும் தைலம் தயாரிக்க, புதிதாகப் பறித்த செம்பருத்தி இலை, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி கீரை ஆகியவற்றைத் தலா ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். இதை விழுதாக அரைத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தைலமாகக் காய்ச்சவும். தைலப் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தடவிவர கூந்தல் பட்டுப்போல மிருதுவாகும்.