லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஸ்ட்ரெயிட்டனிங் செய்யப் போறீங்களா? - ஷீபா தேவி

கூந்தல்
பிரீமியம் ஸ்டோரி
News
கூந்தல்

கூந்தல்

து ஸ்ட்ரெயிட்டனிங் சீசன். ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதற்கு முன்னும் பின்னும் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி.

ஷீபா தேவி
ஷீபா தேவி

ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும்போது தலையில் பொடுகு இருக்கக் கூடாது. பொடுகு இருந்தால் முடியின் வேர்க்கால்கள் பலவீனமாக இருக்கும். ஸ்ட்ரெயிட்டனிங் செய்யப் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களைத் தாங்கும் அளவுக்குக் கூந்தலில் வலு இருக்காது. அந்த நிலையில் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.

முடியின் நுனிகள் பிளவுபட்டு இருந்தாலோ, பாதிப்பாதியாக உடைந்து உதிர்ந்தாலோ அந்த நிலையிலும் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யக் கூடாது. முடிக்கு ஹென்னா போட்டிருந்தால் ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதற்குமுன் அதை முற்றிலும் நீக்கிவிட வேண்டும்.

கூந்தலின் அடர்த்தி மிகவும் குறைவாக இருப்பவர்கள் ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கூந்தலின் தன்மைக்கேற்ப எந்த அளவு க்ரீம் பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பனவற்றையெல்லாம் அனுபவம் வாய்ந்த ஸ்ட்ரெயிட்டனிங் நிபுணர்களால் மட்டுமே சரியாகச் செய்ய முடியும்.

ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும்போது பயன் படுத்தும் க்ரீமை கூந்தலின் வேர்க்கால்களை ஒட்டியபடி உபயோகிக்காமல் சிறிது இடைவெளிவிட்டுப் பயன்படுத்துகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

கூந்தல்
கூந்தல்

ஸ்ட்ரெயிட்டனிங் செய்த பிறகும் முறையான கூந்தல் பராமரிப்பு அவசியம். ஸ்ட்ரெயிட்டனிங் செய்த பலனைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக ஷாம்பூ மற்றும் கண்டிஷனரை மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஸ்ட்ரெயிட்டனிங் செய்தபிறகு கூந்தலைக் கையாள்வதில் கூடுதல் கவனம் தேவை. அதை ஸ்ட்ரெயிட்டனிங் நிபுணரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டியது அவசியம்.