Published:Updated:

டிரோன்களில் ரத்த விநியோகம்... நொய்டாவில் சோதனை முயற்சி; இந்தியா முழுவதும் பயன்பாட்டிற்கு வருமா?

ஐ-ட்ரோன்
News
ஐ-ட்ரோன்

இந்த ஐ-டிரோன், முதன்முதலில் கோவிட் தொற்று சமயத்தின்போது எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்குத் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

Published:Updated:

டிரோன்களில் ரத்த விநியோகம்... நொய்டாவில் சோதனை முயற்சி; இந்தியா முழுவதும் பயன்பாட்டிற்கு வருமா?

இந்த ஐ-டிரோன், முதன்முதலில் கோவிட் தொற்று சமயத்தின்போது எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்குத் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

ஐ-ட்ரோன்
News
ஐ-ட்ரோன்

வீடியோ கவரேஜ் செய்யப் பயன்படுத்தப்பட்ட வந்த டிரோன்கள், மருத்துவ பயன்பாட்டுக்கும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில், அவசர தேவைகளின்போது தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை எடுத்துச்செல்ல டிரோன்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது டிரோன்களில் ரத்த மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டு நொய்டாவில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நொய்டாவின் அரசு மருத்துவ அறிவியல் கழகம் (ஜி.ஐ.எம்.எஸ்) மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி (எல்.ஹெச்.எம்.சி) ஆகியவற்றிலிருந்து 10 யூனிட் ரத்தம் கொண்டு செல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் ஜேபி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியால் (ஜி.ஐ.ஐ.டி) நடத்தப்பட்டது. 

 ரத்த மாதிரிகள்
ரத்த மாதிரிகள்
Pixabay

``இந்த 'ஐ-டிரோன்' முதன்முதலில் கோவிட் தொற்று சமயத்தின்போது எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்குத் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இன்று, குறைந்த வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டிய ரத்தம் மற்றும் ரத்தம் தொடர்பான பொருள்களை இதில் கொண்டு செல்கிறோம். 

சோதனைக்குப் பிறகு, நாம் வெப்பநிலையைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், கொண்டு செல்லப்பட்ட பொருள்களுக்கு எந்தச் சேதமும் இல்லை என்பதைக் கண்டறிந்தோம். நாங்கள் ஆம்புலன்ஸ் மூலமும் மற்றொரு மாதிரியை அனுப்பினோம்.  ஆம்புலன்ஸ் மற்றும் டிரோன் இந்த இரண்டு முறைகளைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட மாதிரிகளில் வேறுபாடுகள் இல்லை என்றால், இந்த டிரோன் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும்’’ என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் பாஹல் தெரிவித்துள்ளார்.