Published:Updated:

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு டைபாய்டு, ஃப்ளூ தடுப்பூசிகள் போடலாமா?

Baby - Representative Image
News
Baby - Representative Image ( Photo by Kristina Paukshtite from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு டைபாய்டு, ஃப்ளூ தடுப்பூசிகள் போடலாமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Baby - Representative Image
News
Baby - Representative Image ( Photo by Kristina Paukshtite from Pexels )

என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. அரசாங்க ஆஸ்பத்திரியில் தடுப்பூசி கிடையாது. தனியார் மருத்துவமனையில் ஃப்ளூ மற்றும் டைபாய்டுக்கான ஊசிகளைப் போடலாமா?

- முபாரக் (விகடன் இணையத்திலிருந்து)

எஸ். ஸ்ரீநிவாஸ்
எஸ். ஸ்ரீநிவாஸ்

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்.

``டைபாய்டு தடுப்பூசி (Typhoid vi conjugate vaccine) ஆபத்தான டைபாய்டு காய்ச்சலிலிருந்தும், ஃப்ளூ தடுப்பூசி (Influenza vaccine) ஃப்ளூ காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்கக்கூடியவை.

டைபாய்டு தடுப்பூசியை குழந்தை பிறந்த ஆறாவது மாதத்திலிருந்து எந்த வயதிலும் ஒரு தவணை போட்டுவிட்டால் போதுமானது.

ஃப்ளூ தடுப்பூசியை ஆறு மாதத்தில் முதல் தவணையும், ஏழு மாதங்கள் முடிந்ததும் இரண்டாவது தவணையும் போட வேண்டும். பிறகு வருடத்துக்கொரு முறை பூஸ்டர் டோஸ் போட வேண்டும்.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash

இந்தத் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள்நல மருத்துவர்களால் போடப்படும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?