Published:Updated:

Doctor Vikatan: ஆஸ்துமா நோயாளிகள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?

ஆஸ்துமா
News
ஆஸ்துமா

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: ஆஸ்துமா நோயாளிகள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

ஆஸ்துமா
News
ஆஸ்துமா

என் வயது 34. ஆஸ்துமா பிரச்னை உள்ளது. எடை அதிகரிப்பதால் உடற்பயிற்சி செய்யலாம் என நினைக்கிறேன். ஆனால் கடினமான பயிற்சிகள் செய்தால் ஆஸ்துமா தொந்தரவு வருகிறது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?

ஹேமா (விகடன் இணையதளத்திலிருந்து...)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்

எப்போதுமே உடற்பயிற்சிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்யத் தொடங்க வேண்டும். இடையில் இரண்டு, மூன்று நாள்கள் பிரேக் எடுக்கும்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடராமல், மெதுவாகவே தொடர வேண்டும்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

முதல் நாள் பத்து நிமிடங்கள், அடுத்த நாள் இருபது நிமிடங்கள், மூன்றாவது நாள் முப்பது நிமிடங்கள் என படிப்படியாகத் தான் நேரத்தை அதிகரிக்க வேண்டும். உடலை மெதுவாகத் தான் தயார்செய்ய வேண்டும்.

ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு செய்ய ஆரம்பிப்பது நல்லது. வொர்க்அவுட் செய்வதற்கு முன் இன்ஹேலர் பயன்படுத்தலாம். அது மூச்சுத்திணறல் ஏற்படாமல் காக்கும்.

ஆஸ்துமா...
ஆஸ்துமா...

வொர்க் அவுட் செய்வது ஆஸ்துமா பாதிப்பைத் தீவிரப்படுத்தும் என்பது உண்மைதான். சிலருக்கு அதிகமாக சிரித்தாலோ, கத்திப் பேசினாலோ, வேகமாக மாடிப்படிகள் ஏறினாலோகூட ஆஸ்துமா பாதிப்பு அதிகரிக்கும். அப்படி வராமல் தடுக்க இன்ஹேலர் பயன்படுத்த வேண்டும்.

சைக்கிளிங் செய்யலாம், டிரெட்மில்லில் நடக்கலாம், ஜாகிங் செய்யலாம். இப்படி உங்கள் உடல் ஒத்துழைக்கும் பயிற்சிகளைச் செய்யலாம். உடலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் ஜிம்மில் மொத்தமாக பணத்தைக் கட்டிவிட்டு, உங்கள் உடலுக்குப் பொருந்தாத பயிற்சிகளை மணிக்கணக்கில் செய்வது ஆஸ்துமா பாதிப்பைத் தீவிரப்படுத்தலாம்.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கான முக்கியமான பயிற்சிகளில் ஒன்று பிராணாயாமம். மூச்சை நன்கு உள்ளிழுத்து சில நொடிகள் பிடித்துவைத்து வெளியேற்றும் எளிமையான இந்தப் பயிற்சி, மூச்சுக்குழல் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.

Doctor Vikatan: ஆஸ்துமா நோயாளிகள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?

ஒரு மூக்கு துவாரத்தை அடைத்துக்கொண்டு இன்னொரு துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து சில நொடிகள் வைத்திருக்க வேண்டும். பிறகு அடைத்திருந்த மூக்து துவாரத்தின் வழியே மூச்சை வெளியேற்ற வேண்டும்.

உடற்பயிற்சிகள் மட்டுமே எடையைக் குறைக்கும் என்று நினைக்காமல், உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுங்கள். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், பிறகு வொர்க் அவுட் செய்து எடையைக் குறைத்துக்கொள்ளலாம் என்று நினைக்காமல் கால் வயிற்றுக்கு சோறு, மீதி வயிற்றுக்கு காய்கறிகள், பழங்கள் என சாப்பிட்டுப் பழகுவதுதான் எடையைக் குறைக்கும், உங்களை ஆரோக்கியத்துடனும் வைக்கும்.