Published:Updated:

Doctor Vikatan: திருமணமாகாத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா?

தாய்ப்பால்
News
தாய்ப்பால்

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: திருமணமாகாத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

தாய்ப்பால்
News
தாய்ப்பால்

என் வயது 23. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 3 மாதங்களாக எனக்கு மார்பகங்களில் தாய்ப்பால் சுரக்கிறது. இது எனக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டது. திருமணமாகாத, கர்ப்பம் தரிக்காத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

புரோலாக்டின் என்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு அரிதாக இப்படி நிகழலாம். மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கக்கூடிய ஹார்மோன்தான் புரோலாக்டின்.

Doctor Vikatan: திருமணமாகாத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா?

இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்தால் பீரியட்ஸ் சுழற்சி மாறும். உடல் எடை கூடும். திருமணம் ஆகாத மற்றும் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மார்பகங்களில் பால் சுரப்பு இருக்கும்.

தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் இப்படி வரக்கூடும். நீங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் புரோலாக்டின் ஹார்மோன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். அது அசாதாரண அளவில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தவிர, சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் மூளையில் கட்டியோ, அசாதாரண வளர்ச்சியோ இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். இதில் மைக்ரோ அடினோமா மற்றும் மேக்ரோ அடினோமா என இரண்டு வகை உண்டு. முதல் வகையை மாத்திரைகளின் மூலம் குணப்படுத்தலாம். அடுத்த வகை பாதிப்பு நரம்பு சம்பந்தப்பட்டது என்பதால் நரம்பியல் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

தாய்ப்பால்
தாய்ப்பால்

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புரோலாக்டின் அளவை தெரிந்துகொள்ள டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். கூடவே தைராய்டு அளவையும் அவ்வப்போது சரி பார்க்க வேண்டும். பெரும்பாலும் மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிட முடியும் என்பதால் இது குறித்து பெரிதாக பயப்படத் தேவையில்லை. அதே நேரம் இதை அலட்சியமும் செய்யக் கூடாது. உடனடியாக மருத்துவ ஆலோசனையும் பரிசோதனையும் முக்கியம்.