Published:Updated:

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஜூஸ் குடிக்கலாமா?

Juice (Representational Image)
News
Juice (Representational Image) ( Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஜூஸ் குடிக்கலாமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Juice (Representational Image)
News
Juice (Representational Image) ( Pixabay )

எனக்கு சர்க்கரை அளவு 320 இருக்கிறது. வாக்கிங் போகச் சொல்கிறார்கள். ஆனால், என்னால் போக முடியவில்லை. என் வயது 58. மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். என் எடை 81 கிலோ. டென்ஷன் ஆனால் சுகர் அதிகரிக்குமா? நீரிழிவு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா? என் பிரச்னைக்கு நாட்டு வைத்தியம் பண்ணலாமா?

- அப்துல் ரஷீத் (விகடன் இணையத்திலிருந்து)

ரவிகிரண்
ரவிகிரண்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நாளமில்லா சுரப்பியல் மருத்துவர் ரவிகிரண்.

``மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் சர்க்கரை அளவு 300-க்கு மேல் போகிறது என்றால் அது உடலில் இன்சுலின் அளவு குறைவதையே குறிக்கும். இந்த நிலை வரும்போது பெரும்பாலும் நேரடியாக இன்சுலின் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படும். நாட்டு வைத்தியம் முயற்சி செய்யலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். அது அவரவர் விருப்பம். வேண்டுமானால் ஒரு மாதம் நீங்கள் விரும்பும் மாற்று மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்கலாம். அப்படி நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் சரியான, முறையான மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட, கலப்படமில்லாதவையாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை உங்களுக்கு அந்த மருந்துகளால் எந்தப் பலனும் இல்லை என்று தெரிந்தால் சர்க்கரைநோய் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்றிரண்டு மாதங்களுக்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

டென்ஷன் ஆனால் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம் என்பதால் முடிந்தவரை பிராணயாமம், யோகா, தியானம் போன்ற விஷயங்களைச் செய்து மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஜூஸ் குடிக்கலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். அது சீக்கிரமே செரிமானமாகி, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஜூஸாக குடிப்பதற்குப் பதில் அந்தப் பழத்தை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

ஜூஸ்
ஜூஸ்

எடையையும் ரத்தச் சர்க்கரையையும் ஒருசேர குறைக்கும் மருந்து, மாத்திரைகள் இன்று வந்துவிட்டன. உடற்பயிற்சியே செய்யாதவர்களுக்கும் உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்க மாத்திரைகள் இருக்கின்றன. நீங்கள் நாளமில்லா சுரப்பியியல் மருத்துவரையோ, நீரிழிவு நோய் மருத்துவரையோ அணுகி முறையான சிகிச்சைகளை மேற்கொள்வதுடன், வீட்டுக்குள்ளேயே கை, கால்களை நீட்டி மடக்கும் பயிற்சிகளையும் செய்துவந்தாலே எடையும் குறையும், ரத்தச் சர்க்கரை அளவும் குறையும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?