Published:Updated:

Doctor Vikatan: குழந்தையில்லாத தோழிக்கு கருமுட்டை தானம் செய்யலாமா?

Baby - Representative Image
News
Baby - Representative Image ( Photo by Kristina Paukshtite from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: குழந்தையில்லாத தோழிக்கு கருமுட்டை தானம் செய்யலாமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Baby - Representative Image
News
Baby - Representative Image ( Photo by Kristina Paukshtite from Pexels )

என் தோழிக்கு திருமணமாகி 15 வருடங்களாகியும் குழந்தை இல்லை. நான் அவளுக்கு கருமுட்டை தானம் செய்ய ஆசைப்படுகிறேன். என் கணவருக்கு அதில் சம்மதம் இல்லை. இதனால் பின்னாளில் பிரச்னைகள் வரலாம் என்கிறார். கருமுட்டை தானம் பற்றி விளக்க முடியுமா?

- தரண்யா (விகடன் இணையத்திலிருந்து)

 மாலா ராஜ்
மாலா ராஜ்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

``பல வருடங்களாகக் குழந்தையில்லாத தோழிக்கு உதவ நினைத்து கருமுட்டை தானம் செய்ய நினைக்கும் உங்கள் நோக்கம் சரியானதுதான். ஆனால், விதிகளின்படி அது சாத்தியமில்லை.

கருமுட்டை தானம் பெற விரும்புவோருக்கு, அந்த முட்டைகளை தானம் செய்கிறவர் யார் என்பது தெரியக் கூடாது. அதற்காகத்தான் இப்போது கருமுட்டை சேகரிப்பு வங்கிகள் இயங்குகின்றன. இந்த வங்கிகள் கருமுட்டை தானம் செய்ய விரும்புவோரைத் தேர்வுசெய்து மருத்துவர்களிடம் அனுப்புவார்கள். அந்தப் பெண்களிடமிருந்துதான் கருமுட்டைகளை தானமாகப் பெற முடியும். அப்படி தானம் கொடுக்க முன்வரும் பெண்களுக்கும் கடுமையான விதிகள் இருக்கின்றன.

அதாவது, ஒரு பெண் ஒருமுறை மட்டுமே கருமுட்டை தானம் செய்ய முடியும். தன்னுடைய கருமுட்டைகள் யாருக்குப் போய்ச் சேரப் போகின்றன என்ற விவரம், தானம் கொடுப்பவருக்கும் தெரியக் கூடாது. விதிமுறைகளின்படி, தானம் செய்ய விரும்பும் ஒரு பெண்ணிடமிருந்து அதிகபட்சமாக 7 முட்டைகள்தான் எடுக்க முடியும்.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash

எனவே, உங்கள் தோழிக்கு நீங்கள் உங்கள் கருமுட்டைகளை தானமாகக் கொடுக்க முடியாது. உங்கள் தோழியை அசிஸ்ட்டடு ரீபுரொடக்டிவ் டெக்னாலஜி கிளினிக்குகளை (Assisted Reproductive Technology Clinic) அணுகச் சொல்லுங்கள். அவர்கள் ஏ.ஆர்.டி வங்கிகளிடமிருந்து தானம் பெற முன்வருவோரை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து கருமுட்டைகளைச் சேகரித்து உங்கள் தோழியின் கருத்தரிப்பு சிகிச்சைக்கு உதவுவார்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?