மற்ற எபிசோடுகள்
Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 10 - வேதனையைத் தரும் வெரிகோஸ் வெயின்ஸ்... ஏன், யாருக்கு, என்ன தீர்வு?

வெரிகோஸ் வெயின்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
வெரிகோஸ் வெயின்ஸ்

ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் என்பதால் இடுப்பி லிருந்து கணுக்கால் மூட்டுவரையுள்ள நரம்புகள் பழுதடைவதற்கு வாய்ப்புள்ளது

சுருள் சிரை நரம்பு (வெரிகோஸ் வெயின்ஸ்) பிரச்னை... நீண்டநேரம் நின்றுகொண்டே பணியாற்றும் ஆசிரியர்கள், போஸ்ட்மேன், செவிலியர்கள், மருத்துவர்கள், சமையற்கலைஞர்கள், மார்கெட்டிங், கட்டுமானத் தொழிலாளர்கள் போன்றோரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதே சமயம், இதுபோன்ற பணியில் ஈடுபடாதவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம்.

எஸ்.பாலகுமார்
எஸ்.பாலகுமார்

4 மி.மீட்டருக்கு அதிகமாக விரி வடைந்த, நீண்டுபோன, முறுக்கிய நிலையில், வெளியே தெரியும்படி காணப்படும் நரம்பைத்தான் வெரிகோஸ் வெயின் என்கிறோம். கால் தொடையின் முன், பின் பக்கங்கள் அல்லது கால் மூட் டுக்கு கீழ் உள்ள கெண்டைத் தசையில் இது காணப்படும்.

பெரும்பாலும் இது வெளியில் தெரியும், சிலருக்கு வெளியே தெரியாமலும் இருக்கலாம்.

பிரச்னை என்ன செய்யும்?

ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் என்பதால் இடுப்பி லிருந்து கணுக்கால் மூட்டுவரையுள்ள நரம்புகள் பழுதடைவதற்கு வாய்ப்புள்ளது. பாதத்திலிருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தம் சீராகச் செல்லாமல் தேங்கி தேங்கிச் செல்லும். நரம்புக்கான அடிப்படை தோற்றம் (Structure) மாறி, அதன் நெகிழ்வுத்தன்மை போய்விடும். எந்த வயதில் வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். சராசரியாக 7-8 வருடங்களுக்குப் பிறகுதான் அறிகுறிகள் வெளியே தெரியும். பாதிப்பைக் கண்டுபிடிக்க டாப்ளர் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன் எடுக்க வேண்டும்.

செக் ஃப்ரம் ஹோம் - 10 - வேதனையைத் தரும் வெரிகோஸ் வெயின்ஸ்... ஏன், யாருக்கு, என்ன தீர்வு?

சுய பரிசோதனை

* கால் வீக்கம் குறிப்பாக பாதம், கணுக்கால் பகுதியில் நின்றுகொண்டு வேலை செய்யும்போது, நடமாடும்போது வீக்கம் தொடங்கி, மாலை, இரவு நேரங்களில் அதிகரிக்கும். காலை யில் வீக்கம் இருக்காது.

* கெண்டைச் சதையில் தசைப் பிடிப்பு

* பாதத்தில் பழுப்பு அல்லது சிவப்பு நிறத்திலான புள்ளிகள் அல்லது பாதத்தின் சருமம் கறுப்பாக மாறுவது

* பாதத்தில் அரிப்பு

* நான்கு வாரங்களுக்கும் மேல் புண்வந்து ஆறாமல் இருப்பது

* பாதத்தில் தொற்று ஏற்பட்டு சிவந்துபோதல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள்

* ரத்த உறைவு அல்லது ரத்தக்கசிவு

இவற்றில் ஏதாவது ஓர் அறிகுறி தென்பட்டாலே உடனடியாக மருத்து வரை அணுக வேண்டும். அறிகுறி வெளியே தெரிகிறது என்றால் உள்ளே பல ஆண்டுகளாகப் பிரச்னை இருக்கும்.

யாருக்கு, என்ன அறிகுறி?

* 20-40 வயது: கால் வீ்க்கம், தசைப்பிடிப்பு

* 40-60 வயது: கால் வீ்க்கம், தசைப்பிடிப்பு, சரும நிறம் மாறுதல், புண் ஏற்படுதல்

* 60 வயதுக்கு மேல்: ரத்தக்கசிவு, ரத்தம் தேங்கி நரம்பில் உறைவு ஏற்படுதல், அரிப்பு ஏற்பட்டு, புண்ணாகி தொற்று ஏற்படுவது.

சிகிச்சைகள்

அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து, மாத்திரைகள் மற்றும் கம்ப்ர ஷன்ஸ் ஸ்டாக்கிங்ஸ் (சாக்ஸ்) அணிய அறிவுறுத்தப்படும். அறிகுறிகள் அன் றாட வாழ்க்கையை பாதித்தால், சிறிய சிகிச்சை மூலம், பாதிக்கப்பட்ட நரம்பு அடைக்கப்படும். நன்றாக வேலை செய்யும் பிற நரம்புகள் வழியாக ரத்தம் திசை திரும்பி வழக்கமான ரத்த ஓட்டத்தில் சென்று சேர்ந்துவிடும். சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தி லேயே நடக்க ஆரம்பித்துவிடலாம்.

தகவல்: எஸ்.பாலகுமார், ரத்தநாள அறுவை சிகிச்சை மருத்துவர், சென்னை