
இருமல், காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் சுவாச மண்டலம் சார்ந்த பிரச்னையாக இருக்க லாம்.
சளியும் இருமலும் உலகத்தையே அச் சுறுத்த ஆரம்பித்தது கோவிட்-19 பரவலுக் குப் பிறகுதான். ‘நாளைக்கு லீவ் போடணும். பாஸ் முன்னாடி ரெண்டு இருமலைப் போட்டுற வேண்டியதுதான்’னு மீம்ஸ் போட்டுக் கலாய்க்கும் அளவுக்குச் சென்றது தனிக்கதை.
இருமலும் காரணங்களும்
கோவிட்-19 வைரஸ், பருவநிலையால் சுவாச மண்டலத்தைத் தாக்கும் வைரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான வைரஸ் பாதிப்புகளால் இருமல் ஏற்படலாம். நுரையீரலில் `நியுமோகாக்கல்' (Pneumococcal) போன்ற பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதாலும் இருமல் வரலாம். பெரும்பாலான வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மூச்சுத்திணறல், இயல்பாகப் படுக்க முடியாத நிலை, தொடர்காய்ச்ச லுடன் இருமலும் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண் டும்.
இதயத்தின் இடது அறையின் (வென்ட்ரிக்கிள்) செயல்பாடு குறையும் போதும், வால்வுகளில் பிரச்னை இருப்பவர்களுக்கும் இதயத்தின் பம்ப்பிங் திறன் குறையும். அந்த அழுத்தம் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தி இருமல் வரச் செய்யும்.
சுயபரிசோதனை
இருமல், காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் சுவாச மண்டலம் சார்ந்த பிரச்னையாக இருக்க லாம்.
காய்ச்சல் இல்லாமல் இருமல், மூச்சுவிட சிரமம், நேராகப் படுக்க முடியாதது, சில அடி தூரம்கூட நடக்க முடியாத நிலை இருந்தால் இதயம் தொடர்பான பிரச்னை யாக இருக்கலாம்.
தொடர் இருமல், மாலை நேரத்தில் அதிக காய்ச்சல், எடை குறைவு, பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் காசநோயாக இருக்கலாம்.
உமிழும்போது வெள்ளை நிறத்தில் சளி வந்தால் தானாகவே சரியாகிவிடும் சாதாரண பிரச்னையாக இருக்கலாம்.
வெளிர் பச்சை நிறத்தில் சளி இருந்தால் ஏதேனும் தொற்று பாதிப்பாக இருக்கலாம்.
தொற்று அல்லது இதயத்தில் பாதிப்பு இருந் தாலும் இருமலுடன் ரத்தம் கலந்தது போன்று சளி வெளியேறலாம்.
கறுப்பு அல்லது அடர் நிறத்தில் சளி வெளி யேறினால் ரத்த உறைவு ஏற்பட்டிருக்கக் கூடும்.
காலையில் எழுந்தவுடன் அளவுக்கு அதிகமாக சளி வெளியேறினால் சைனஸ் பிரச்னையாக இருக்கலாம்.
யாருக்கு ஆபத்து?
நீரிழிவு, உடல் பருமன் உள்ளவர்கள், நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் மருந்துகள் எடுப்பவர்கள், வயதானவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு வைரஸ், பாக்டீரியா தொற்றுகள், காசநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பும், அவற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு அதிகமாகவும் அடிக்கடி யும் இருமல் ஏற்படும்.

அலர்ட்!
ஒரு மனிதனின் சுவாச சுழற்சி (ஒருமுறை மூச்சிழுத்து வெளியேற்றுவது) என்பது ஒரு நிமிடத்துக்கு 12 - 16 முறை. இந்த அளவைவிட அதிகரித்தால், பல்ஸ் ஆக்ஸிமிட்டீரில் ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழ், இதயத்துடிப்பு 100-க்கு அதிகமானால், 10 படிகள்கூட ஏறி இறங்க முடியாமல் மூச்சு வாங்கினால், ஒரு வாரத்துக்கு மேல் இருமலுடன் மேற்கூறிய இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
சுய மருத்துவம்... நோ!
மனிதனைத் தொற்றும் வைரஸ் வகைகளே 200-க்கும் மேல் இருக்கின்றன. எந்தத் தொற்றுக்கு என்ன மருந்து என்பது மருத் துவர்களுக்குத்தான் தெரியும். எனவே, ‘சாதாரண இருமல்தானே’ என்று நினைத்து சுயமாக மருந்து வாங்கி சாப்பிடவே கூடாது.
மாஸ்க்கே பிரதானம்!
மனித உள்ளுறுப்புகளில் நுரையீரல் மட்டும் தான் நேரடியாகச் சுற்றுச்சூழலுக்கு வெளிப்படுவது. சுற்றுச்சூழலில் காணப்படும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, சிகரெட் புகை என எதுவும் நுரையீரலுக்குள் நுழைந்து விடலாம். மாஸ்க் அணியும்போது பாதிக்கப் படுவதற்கான வாய்ப்பு 95 சதவிகிதம் குறை கிறது. எனவே, கோவிட் சூழலுக்குப் பிறகும் மாஸ்க் அணிவதைத் தொடர்வது சிறந்தது.
தகவல்: கோவினி சுப்ரமணியம், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்