கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் அவரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

அப்பாவுக்கு அறிகுறிகள் தெரிந்ததும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே இருந்து வருகிறோம். தயவு செய்து பொய்யான வதந்திகளைப் பரப்பாதீங்க. முடிந்தால் அப்பாவுக்காக பிரார்த்னை செய்யுங்க. இது உலகளவிலான பிரச்னை, அமைதியாக இருங்கள்டாக்டரின் மகள்
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. கொரோனா வைரஸிக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விமானம், ரயில், பஸ் என அனைத்து பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 144 தடை உத்தரவால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
அத்தியவசிய தேவைகளுக்காக மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருகின்றனர். மதியம் 1 மணிக்கு மேல் அத்தியாவசிய கடைகளும் மூடப்படுவதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தேவையில்லாமல் ஊரைச் சுற்றுபவர்களை காவல்துறையினர் எச்சரிப்பதோடு நூதன தண்டனைகளை வழங்கிவருகின்றனர். இந்தச் சூழலில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ்கள் பாதிக்கப்பட்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட புதுச்சேரி காவல்துறையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக ரயில்வே டாக்டர், அவரின் 10 மாத குழந்தை ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து சென்னை மேற்கு மாம்பலத்தில் பொதுசுகாதார மையத்தில் டாக்டராகப் பணியாற்றிவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர், வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தச் சூழலில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையை நடத்திவரும் டாக்டர் ஒருவரும் கொரோனா அறிகுறிகளுடன் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தச் சூழலில் சம்பந்தப்பட்ட டாக்டரின் மகனும் மகளும் பேசும் வீடியோ ஒன்று மருத்துவர்கள் வாட்ஸ்அப் குழுவில் வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கின்றனர். அந்த வீடியோவில், ``எங்களுடைய அப்பா, டாக்டராக உள்ளார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் இயக்குநராக உள்ளார். அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். வென்டிலேட்டரில் இருக்கிறார். பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. ஆனால், அதற்கு வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

கடந்த 3 தினங்களுக்கு முன் அறுவைசிகிச்சை செய்தார், நிறைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார் என்று கூறுவதில் உண்மையில்லை. கடந்த 10 தினங்களாக அப்பா வீட்டில்தான் இருந்தார். 3 நாள்களுக்கு முன்புதான் அறிகுறிகள் தெரிந்தன. மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்பாவுக்கு அறிகுறிகள் தெரிந்ததும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருந்துவருகிறோம். தயவு செய்து பொய்யான வதந்திகளைப் பரப்பாதீங்க. முடிந்தால் அப்பாவுக்காக பிரார்த்னை செய்யுங்க. இது உலகளவிலான பிரச்னை, அமைதியாக இருங்கள்" என்று கூறியுள்ளனர்.