Published:Updated:

`ஊசி உடைஞ்சு இடுப்பு எலும்புல சிக்கிக்கிச்சு!' - கோவை மருத்துவமனை மீது இளைஞர் புகார்

புகார்
News
புகார்

கோவை மீனாட்சி மருத்துவமனை மீது இளைஞர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

Published:Updated:

`ஊசி உடைஞ்சு இடுப்பு எலும்புல சிக்கிக்கிச்சு!' - கோவை மருத்துவமனை மீது இளைஞர் புகார்

கோவை மீனாட்சி மருத்துவமனை மீது இளைஞர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

புகார்
News
புகார்

கோவையில் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தம்பிதுரை (26). இவர், கடந்த மாதம் 22-ம் தேதி காய்ச்சலுக்காக குனியமுத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு, டைபாய்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக தம்பிதுரைக்கு செவிலியர் ஒருவர் ஊசி போட்டுள்ளார். அப்போது ஊசியின் முனைப்பகுதி, தம்பிதுரையின் இடுப்பு பகுதியில் உடைந்துவிட்டது.

ஊசி
ஊசி

இதைக் கவனித்த தம்பிதுரை, ஊசி போட்ட செவிலியரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அந்த செவிலியர், ``அதெல்லாம் ஒன்றும் இல்லை’ என்றிருக்கிறார். வீட்டுக்குச் சென்ற தம்பிதுரைக்கு இடுப்பு பகுதியில் அதிகமாக வலி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மீண்டும் மீனாட்சி மருத்துமனை மருத்துவர் ஜெயக்குமாரிடம் சென்று கேட்டபோது, `வேறு ஏதாவது பெரிய மருத்துவமனைக்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிதாக புகார் சொல்லப்படுகிறது. இதையடுத்து, தம்பிதுரை, எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது, ஊசி போட்ட இடுப்பு பகுதியில், 7 மில்லி மீட்டர் அளவுக்கு ஊசியின் முனைப்பகுதி உடைந்து உள்ளே எலும்பு பகுதியில் சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஊசி
ஊசி

இது குறித்து மீண்டும் மீனாட்சி மருத்துவமனைக்குச் சென்று கேட்டபோது, மருத்துவர்கள் சரியான பதில் கூறாமல் மிரட்டல் விடுத்து துரத்திவிட்டதாக தம்பிதுரை புகார் கூறுகிறார். தம்பிதுரை, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து மீனாட்சி மருத்துவமனை நிர்வாகத்தின் மருத்துவர் ஜெயக்குமார், ``அக்டோபர் மாதம் 21-ம் தேதி தம்பிதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போதே ஊசி இருந்தது. அக்டோபர் 20-ம் தேதி தம்பிதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின்னரே இங்கு வந்தார். தம்பிதுரைக்கு எந்த மருத்துவமனையில் இடுப்பில் ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. எங்கள் மருத்துவமனை மீது தவறான புகாரை அவர் சொல்கிறார்.

அக்டோபர் 21 -ம் தேதி வந்தவர் பின்னர் மீண்டும், நவம்பர் 14-ம் தேதிதான் இடுப்பில் வலி என வந்துள்ளார். டைபாய்டு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட அவர் இடையில் எங்கு சிகிச்சை பெற்றார் என்று தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை தம்பிதுரை வழக்கறிஞர்களுடன் வந்து 2 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். சிகிச்சை அளிக்கிறோம் இழப்பீடு கொடுக்க முடியாது என்று சொன்ன நிலையில் தற்போது மருத்துவமனை மீது தம்பிதுரை அவதூறு பரப்பி வருகிறார்” என்றார்.