லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

கொரோனா தொற்று... வேலைக்குச் செல்வோர் கவனத்துக்கு

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா

ஜூஸ் போன்று ஜில்லென்ற பானங்களைக் குடிக்காதீர்கள்.

கொரோனாவுக்கு பயந்து லாக் டெளனில் இருந்தோம். கொரோனாவுடன் வாழப் பழக வேண்டியிருப்பதால், மெள்ள மெள்ள இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். `வயிறா... உயிரா' என்ற போராட்டத்தில் வயிறு வெல்லவே, பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறோம். பணியிடங்களில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க நாம் எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டுமென சொல்கிறார் தொற்றுநோய் மருத்துவர் சித்ரா.

கொரோனா தொற்று... வேலைக்குச் செல்வோர் கவனத்துக்கு

1. அலுவலகத்தில் இரண்டு பேருக்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

2.ஜூஸ் போன்று ஜில்லென்ற பானங்களைக் குடிக்காதீர்கள்.

3. காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளை பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து குடியுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

செல்போன்களை நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறை ஹேண்ட் சானிட்டைசரை டிஷ்யூ பேப்பரால் தொட்டுத் துடைக்க வேண்டும்.

4. மாஸ்க்கை இறக்கிவிட்டு இருமுவது, தும்முவது, துப்புவது கூடாது.

5. பயன்படுத்துகிற டேபிள், இருக்கை போன்றவற்றை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை டிஸ்இன்ஃபெக்டன்ட் திரவத்தைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

6. மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை கைகளை சோப் போட்டுக் கழுவ வேண்டும். அல்லது கைகளில் ஹேண்ட் சானிட்டைசர் அப்ளை செய்ய வேண்டும்.

7. மாடிப்படிகளின் கைப்பிடி, லிஃப்ட், பாத்ரூமின் கதவு, கைப்பிடி என உங்கள் கைகள் எதைத் தொட்டாலும், உடனடியாக கைகளில் சானிட்டைசரைத் தடவிக் கொள்ளுங்கள்

8 நோய் எதிர்ப்பு சக்திக்கு புரதச்சத்து அதிகம் தேவை என்பதால், சைவம் சாப்பிடுபவர்கள் புரதம் அதிகம் கொண்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் வாரம் இரண்டு நாள் முட்டை, மாமிசம் எடுத்துக்கொள்ளுங்கள்.

9. பயணத்தின்போதும் தனிமனித இடைவெளி அவசியம்.

10. வீட்டுக்குச் சென்றவுடன் குளித்து விடுங்கள்.