Published:Updated:

கொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் ?#DoubtOfCommonMan

India Virus Outbreak
News
India Virus Outbreak ( AP / Dar Yasin )

கொரோனா நோய் தொற்று உலகம் முழுதும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. நோயின் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பலவும் முடங்கிக் கிடக்கின்றன. இந்தியாவும் 'லாக் டவுன்' அறிமுகப்படுத்தியுள்ளது.

Published:Updated:

கொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் ?#DoubtOfCommonMan

கொரோனா நோய் தொற்று உலகம் முழுதும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. நோயின் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பலவும் முடங்கிக் கிடக்கின்றன. இந்தியாவும் 'லாக் டவுன்' அறிமுகப்படுத்தியுள்ளது.

India Virus Outbreak
News
India Virus Outbreak ( AP / Dar Yasin )
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "கொரோனா நோய்க்கு இதுவரை எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படாதது ஏன் ? எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படுமா?" என்ற கேள்வியைக் கேட்டிருந்தார் விகடன் வாசகர் கார்த்தி. அதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டக் கட்டுரை இது.
Doubt of a common man
Doubt of a common man

கொரோனா நோய்க்கு இதுவரை எவ்வித மருந்துகளோ தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால், அந்த மருந்தையோ, தடுப்பூசியையோ கண்டுபிடிப்பதில் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? இல்லை அதில் நடைமுறை சிக்கல்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்பது குறித்து அறிய பிரபல தொற்றுநோய் மருத்துவர் ராமசுப்ரமணியன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.

கொரோனா
கொரோனா

"எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்றாகிவிட்டது. கொரோனாவால் உலகம் அடைந்திருக்கும் பாதிப்புகள் மிகவும் அதிகம். கொரோனா வைரஸ் மனிதர்களைப் பாதிக்க ஆரம்பித்து இன்னும் முழுமையாக மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை. ஆனால், இந்தக் குறுகிய காலகட்டத்திலேயே 20,000-க்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பறித்திருக்கிறது. இந்த நேரத்தில் மருத்துவர்களின் களப்பணி இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் மக்களைக் காக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

சினிமாவில் வருவதுபோல் நோய் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதற்கான மருந்தையும் தீர்வையும் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.

தடுப்பூசி என்பது ஒரு குறிப்பிட்ட கிருமியின் வீரியமிக்க செயலாக்கத்தைத் தடுத்து, அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கப் பயன்படுத்துவது. பொதுவாக, ஒரு நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்குக் குறைந்தது 2 முதல் 5 ஆண்டுகள் ஆகும். நோய் விளைவிக்கும் கிருமிகளின் எண்ணிக்கை ஒன்றோ இரண்டோ அல்ல. பல்லாயிரக்கணக்கான நோய்க் கிருமிகள் உள்ளன. அதில் எந்த வகை கிருமி என்று கண்டுபிடிக்கவே நமக்கு மாதக்கணக்கில் ஆகும். அப்படியே கண்டுபிடித்தாலும் அதன்பிறகு அந்தக் கிருமியைப் பல பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாகத்தையும் முறையாக மனித உடலுக்குள் புகுத்தி அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்.

Doubt of a common man
Doubt of a common man

பொதுவாகக் கிருமிகள் அது போன்று செலுத்தப்படும்போது அதன் வீரியத்தைக் குறைக்க வேண்டும். அதே போன்று கிருமிகளின் வீரியத்தைக் குறைக்கும்போது, மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். வீரியத்தை மிக அதிகமாகக் குறைத்துவிட்டால் அது உடலில் 'Anti bodies' உற்பத்தியைத் தூண்டிவிடாமல் செய்து விடும். அதே போல் வீரியத்தைச் சூடு மற்றும் கெமிக்கல் போன்றவற்றைக் கொண்டு தணிக்காமல் அப்படியே உள்ளே செலுத்தும்போது anti bodies உற்பத்தியைச் செய்யாமல் மாறாக நோய்ப் பாதிப்பை உருவாக்கி இன்னும் அதிகமாக்கும். எனவே, ஒரு மிதமான வீரியத்தில் அதைச் செலுத்தும்போது மட்டுமே அது உடலில் Anti Bodies உற்பத்தியைத் தூண்டிவிடும். உடலில் Anti bodies அளவு நல்ல எண்ணிக்கையிலிருந்தால் மட்டுமே அதனால் நோய்க் கிருமியை எதிர்த்துப் போராட முடியும். உதாரணத்திற்கு உடலில் 5 Anti bodies இருக்கின்றது என்றால் அந்த ஐந்துமே கிருமிகளை சாவடித்துவிடாது. அதில் ஒன்றோ இரண்டோ மட்டுமே கிருமிகளை எதிர்த்துப் போராடி அழிக்கும் திறனைக் கொண்டிருக்கும். ஆனால், இதனை மேம்படுத்துவதற்குப் பல வருடங்கள் ஆகும். குறைந்தது ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கு நமக்கு 5 முதல் 6 வருடங்கள் ஆகும்.

ஆனால், இந்தக் கொரோனா விஷயத்தில் மருத்துவத்துறை நல்ல உத்வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.நோய்க் கிருமி நம்மிடத்தே அறிமுகமாகி 3 மாதங்கள்கூட ஆகாத நிலையில் அது என்ன வைரஸ், அதன் செயல்முறை எப்படி என அனைத்தையும் நாம் கண்டுபிடித்துவிட்டோம். இனி அதைப் பல பாகங்களாகப் பிரித்துத் தக்க பாகத்தை மனிதனுக்குச் செலுத்தி அதன் பிறகுதான் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முடியும்.

அவசரமாக ஏதோ கண்டுபிடிக்கிறோம் என்று நம்மால் கண்டுபிடித்துவிட முடியாது. ஒரு தடுப்பூசி வடிவமைக்கப்பட்ட பிறகு, அதை மூன்று கட்டங்களாகச் சோதனைக்கு உட்படுத்துவோம். Phase 1, Phase 2, Phase 3. இந்த மூன்று நிலைகளை ஒரு தடுப்பூசி கடந்தால் மட்டுமே அது மனிதர்களுக்குப் பயன்படுத்தத் தகுதியான தடுப்பூசியாகும்.

corona
corona

இத்தனை காலமாக நம்மை வதைத்துக்கொண்டிருக்கும் காசநோய்க்கே நம்மால் இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது மூன்று மாதங்கள்கூட ஆகாத கோவிட்-19 கிருமிக்குத் தடுப்பூசியை எதிர்பார்ப்பது நியாயமில்லை.

நாம் கொரோனாவுக்கு என்னதான் அதிவிரைவாகத் தடுப்பூசி கண்டுபிடிக்க முயன்றாலும், குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் நமக்குத் தேவைப்படும். அதுவரை நோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே நம்மால் செய்ய முடியும். இதற்கு வேறு வழியும் இல்லை. தற்போதைக்கு எந்த மருந்தும் இல்லை. மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வதே இதற்குச் சிறந்த தீர்வாகக் கருதுகிறேன்" என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of a common man
Doubt of a common man