Published:Updated:

உணவின்றி அமையாது உலகு - 17

உணவின்றி அமையாது உலகு - 17
பிரீமியம் ஸ்டோரி
News
உணவின்றி அமையாது உலகு - 17

உணவின்றி அமையாது உலகு - 17

உணவின்றி அமையாது உலகு - 17

லப்படம் என்ற சொல்லும் நம் தினசரி பயன்பாட்டுச் சொல்லாகவே மாறிவிட்டது. இது வெறுமனே நடுத்தர மக்களின் புலம்பல் அல்ல. இந்திய அரசின் ஆய்வு. பெரும்பாலான உணவுகள் மோசமானவை என்று சொல்லும் அளவுக்கு என்னதான் நடந்துவிட்டது?

2014 – 15ம் ஆண்டு ‘இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு’ 42,290 மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தது. ஆய்வில் 8,469 மாதிரிகள் தரமற்றவை, கலப்படம் செய்யப்பட்டவை எனக் கண்டறிப்பட்டன.

அகில இந்திய அளவில் அந்தந்த மாநில அரசுகளின் வழியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆனாலும், எல்லா மாநிலங்களும் இந்த ஆய்வை நடத்துவது இல்லை. வெறும் 14 மாநிலங்களே இதில் பங்கேற்றன. மீதம் உள்ள மாநிலங்களின் உணவுகளையும் இங்கு சேர்த்தால் தரமற்ற, கலப்பட உணவுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.

‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் 2006’ உணவுக் கலப்படத்துக்குக் கடும் தண்டனைகளை விதிக்கிறது. நல்ல சட்டங்களுக்கு நம் நாட்டில் பஞ்சம் இல்லை. உணவு ஆய்வுகளும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. ஆனால், தரமற்ற உணவுகளாக அடையாளம் காணப்பட்ட உணவுகள் மீது என்னதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது?

தரமற்ற உணவுகளாக அடையாளம் காணப்பட்ட 8,469 உணவுகளில் தொடர் நடவடிக்கைகள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்ட உணவுகளின் எண்ணிக்கை 1,256. மீதம் உள்ள உணவுகள் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது. தப்பிய உணவுகளை விட்டுவிடுவோம். ஒருவேளை அவை நல்ல உணவாக இருந்ததாகவே வைத்துக்கொள்ளலாம். ஆனால், நிரூபிக்கப்பட்ட 1,256 நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உணவின்றி அமையாது உலகு - 17

6.9 கோடி ரூபாய் அபராதத் தொகை பெறப்பட்டது. இதுதான் நம் அரசாங்கத்தின் நடவடிக்கை.

இந்தியாவிலேயே தரமற்ற கலப்பட உணவுகளின் மீதான குறைவான நடவடிக்கை எடுக்கும் மாநிலங்கள் எவை தெரியுமா? விதிமுறைகளை மீறி அதிகமான கலப்படங்கள் நடைபெறும் மாநிலங்கள் எவை தெரியுமா? தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், மகராஷ்டிரம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள்தான்.

தமிழகத்தில் தரமற்ற, கலப்பட உணவுகள் என கண்டுபிடிக்கப்பட்டவை 1,047. இவற்றில் நடவடிக்கை எடுக்கப்பட்டவை 203 மட்டுமே. மத்தியப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலப்பட உணவுகளின் எண்ணிக்கை – 1,412. நடவடிக்கை எடுக்கப்பட்டவை – 418. மகராஷ்டிராவில் கண்டறியப்பட்ட 1,162-ல் நடவடிக்கை எடுக்கப்பட்டவை 75 உணவுகள் மீதுதான். மேற்கு வங்காளத்தில் ஆய்வு செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்து எந்தத்  தகவலும் இல்லை. இதுதான் நம் நாட்டின் உணவுத் தர நிர்ணயக் கட்டுப்பாட்டின் நிலை. இந்த ஆய்வுகளில் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்படும் போலி பொருட்கள் தயாரிப்பு, உணவு தயாரிக்க அனுமதி பெறாத போலி நிறுவனங்களின் பட்டியல் சேர்க்கப்படவில்லை.

இந்த விதத்தில் உணவு தொடர்பான ஆய்வுகள் நடந்தால், மோசமான உணவுகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்றுதான் தெரியவில்லை.  அரசு அமைப்புகளும் ஆய்வுக்கூடங்களும் தங்கள் வேகத்தில் மோசமான உணவுகளை ஒருபுறம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கட்டும். இன்னொருபுறம் நம் உடல்நலத்தை நாமே காப்பாற்றிக்கொள்வதற்காகக் கலப்பட உணவுகளையும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் உணவுகளையும் அறிந்து, அவற்றின் பயன்பாட்டைக் கட்டுக்குள்கொண்டுவருவது அவசியம். கலப்பட உணவுகளில் அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் உணவுகளுக்கு உடனடி மாற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.  எப்போதோ ஒருமுறை பயன்படும் உணவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

உணவின்றி அமையாது உலகு - 17

இந்த இதழில், அனைவருக்கும் விருப்பமான பாப்கார்ன் கலப்படம் பற்றிப் பார்ப்போம். பாப்கார்னில் என்ன சிக்கல் இருக்க முடியும்? சாதாரண சோளப்பொரிதானே இது? சோளத்தில் வைட்டமின் பி1, பி5, சி இருக்கின்றன. பாஸ்பரஸ், மாங்கனீஸ் போன்ற தாதுஉப்புக்கள் இருக்கின்றன. நிறைய நார்ச்சத்தும் கலோரிகளும் உடைய இது, உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இது எல்லாம் சோளப்பொரிக்குத்தான் பொருந்தும். பாப்கார்னுக்கு அல்ல.

தியேட்டர்களிலும் பெரிய ஷாப்பிங் மால்களிலும் விற்கப்படும் பாப்கார்னாக இருந்தாலும் சரி, நாமே வீட்டில் உடனடியாகத் தயாரித்துவிட முடியும் இன்ஸ்டன்ட் மைக்ரோவேவ் பாப்கார்னாக இருந்தாலும் சரி, இவை இயற்கையானமுறையில் தயாரிக்கப்படுவது இல்லை. இவற்றை சோளப்பொரி என்று சொல்ல முடியாது.

மைக்ரோவேவ் பாப்கார்ன் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் செயற்கை வெண்ணெய் தயாரிக்கும் ஃபிளேவர் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏன்? பாப்கார்னைப் பொரிக்கும்போது மூக்கைத் துளைக்கும் வாசனை வருகிறது அல்லவா? அதில்தான் விஷயமே உள்ளது. பாப்கார்னின் சுவை கூட்டவும், திக்கெட்டும் மணம் பரப்பவும் சேர்க்கப்படும் ரசாயனம்தான் டைஅசிட்டைல் (Diacetyl). இந்த டைஅசிட்டைல் மஞ்சள் நிறத் திரவமாகவோ, பெளடராகவோ கிடைக்கிறது. இதனை, பாப்கார்னில் சேர்க்கும்போதுதான் அந்த சுவையும் மணமும் வருகின்றன. இதே டைஅசிட்டைல் குளிர்பானங்கள் மற்றும் பலவகை உணவுப் பொருட்களிலும் சுவைகூட்டியாகச் சேர்க்கப்படுகிறது.

“டைஅசிட்டைல் சேர்க்கப்படும் உணவுகளிலேயே மோசமானது பாப்கார்ன் தான். ஏனென்றால், இந்த டைஅசிட்டைல் சூடேற்றப்படும்போதுதான் வீரியமாகிறது” என்கிறார் உணவு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்.

டைஅசிட்டைல் செயற்கை மணத்தைத் தொடர்ந்து சுவாசித்தாலே பாதிப்புகள் ஏற்படுகிறது எனும்போது, அதே டைஅசிட்டைல் கலந்த பாப்கார்னைத் தொடர்ந்து சாப்பிட்டால் தொந்தரவுகள் வராதா என்ன?

- பயணம் தொடரும்

உணவின்றி அமையாது உலகு - 17

தியேட்டர்களில் குழந்தைகளோடு போய் பாப்கார்ன் கடை முன்பு சிக்கிக்கொள்ளும்போது என்ன செய்யலாம்? எப்போதாவது ஒருமுறை டைஅசிட்டைல் பாப்கார்ன் சாப்பிடுவதால் ஒன்றும் ஆகிவிடாது. அப்போதைக்கு வாங்கிக் கொடுங்கள். ஆனால், அடிக்கடி பாப்கார்ன் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.

கம்பு பாப்கார்ன்

உணவின்றி அமையாது உலகு - 17

சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்னையே மினியேச்சராகப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி, குட்டிக் குட்டியான பாப்கார்னைத் தயாரிக்க, நம் ஊர் கம்பு போதும். உலர்ந்த கம்பை வறுத்தால், அவை வெடித்து பாப்கார்ன் போன்ற இன்னொரு வகை உணவு கிடைக்கும். இதிலும், தேவைக்கு மிளகு, உப்பு சேர்த்துக்கொள்ளலாம். பாப்கார்ன் குழந்தைகளுக்கான நல்ல உணவுதான். ஆனால், அதனைக் கடையில் வாங்கித் தருவதற்குப் பதிலாக, வீட்டிலேயே செய்ய வேண்டும். கடையில் கிடைக்கும் சோளத்தை வாங்கி, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து வறுத்தால் பாப்கார்ன் கிடைத்துவிடும். தேவைக்கு மிளகுத்தூளோ அல்லது மிளகாய்த்தூளோ சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் தியேட்டர் பாப்கார்ன் போன்ற மணம் வேண்டும் என்றால், வெண்ணெய் இரண்டு துளி சேர்த்தால் போதும். ஒரிஜினல் பாப்கார்ன் தயார்.

பாப்கார்னின் சுவை கூட்டவும், திக்கெட்டும் மணம் பரப்பவும் சேர்க்கப்படும் ரசாயனம்தான் டைஅசிட்டைல். இது மஞ்சள் நிறத் திரவமாகவோ பெளடராகவோ கிடைக்கிறது.