ஹெல்த்
Published:Updated:

இளமை உணவுகள்

இளமை உணவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
இளமை உணவுகள்

தலத் சலீம் ட்ரைகாலஜிஸ்ட்ஹெல்த்

`ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால் போதும்... முதுமையைத் தள்ளிப் போடலாம்; போடாக்ஸ் (Botox) போன்ற ஆன்டி ஏஜிங்குக்கான சிகிச்சைப் பக்கமெல்லாம் தலைவைத்துப் படுக்கவேண்டிய அவசியமே இருக்காது’ என்கிறார்  ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம். இளமையைத் தக்கவைக்க அவர் தரும் ஐந்து ஆலோசனைகள் இங்கே...

இளமை உணவுகள்

கீரை, புரோக்கோலி, தக்காளி, தர்பூசணி, திராட்சை, கொய்யா, கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பரிசி இவையெல்லாம் சருமம் காக்கும்  உணவுப் பொருள்கள்.

இளமை உணவுகள்

ரிபோஃப்ளேவின், நியாசின், சயானோகோபாலமின் (Cyanocobalamin) போன்ற வைட்டமின்கள் நிறைந்த சில உணவுகளை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். திரவ உணவுகளை அதிகம் உட்கொண்டால், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறிவிடும்.

இளமை உணவுகள்

பாதாம் பருப்பிலும் வால்நட்டிலும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது; இது, சருமத்தைப் பாதுகாக்கும். கிரீன் டீ, தயிர், தேன் ஆகியவையும் சருமத்துக்கு நல்லவை.

இளமை உணவுகள்

ர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது சருமத்திலிருக்கும் கொலாஜனை பாதித்து, சுருக்கத்தை ஏற்படுத்திவிடும். இவற்றுக்கு பதிலாகப் பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்வது சருமத்துக்கு நல்லது.

இளமை உணவுகள்
இளமை உணவுகள்

முதுமையைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் முக்கியமாகத் தவிர்க்கவேண்டியது ஆல்கஹால். இது உருவாக்கும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் சருமத்திலிருக்கும் செல்களை பாதித்து, விரைவில் முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்திவிடும்... கவனம்!

- பாலு சத்யா