மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உணவு 360 டிகிரி - ஒரு பொருள்... பல பயன்கள்... மஞ்சள் மகிமை - புதிய பகுதி 1

மஞ்சள் மகிமை
பிரீமியம் ஸ்டோரி
News
மஞ்சள் மகிமை

காய்கறி மற்றும் கீரையுடன் மஞ்சள் தூளைச் சேர்த்துச் சமைத்தால், அவற்றிலிருக்கிற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிக்கப் பட்டுவிடும்.

நம் தினசரி பயன்பாட்டு உணவுப்பொருள்களின் மருத்துவ பலன்களைச் சொல்லும் பகுதி இது. பலன்களைச் சொல்பவர் பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு.

* மஞ்சள் கிழங்கை மண்ணிலிருந்து எடுக்கை யில், வேரின் நடுவில் உருண்டையாக இருப்பது குண்டு மஞ்சள். அதைச் சுற்றிலும் விரல் விரலாக இருப்பது விரலி மஞ்சள். இவற்றைத் தனித்தனியாக வெவ்வேறு முறையில் பாடம் செய்வார்கள். குண்டு மஞ்சளை முகத்தில் பூசுவதற்கும், விரலி மஞ்சளை சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறோம். இவை தவிர கஸ்தூரி மஞ்சளும் மரமஞ்சளும் இருக்கின்றன. கஸ்தூரி மஞ்சள் சருமத்துக்கானது. அதை சமையலுக்குப் பயன்படுத்த மாட்டோம். மர மஞ்சள், கொடி வகையைச் சேர்ந்தது. அந்தக் கொடியை வெட்டினால் அதனுள் மஞ்சளாக இருக்கும். இதை, சித்த மருத்துவத் தில் கஷாயங்களில் சேர்ப்போம்.

* மஞ்சளின் பூர்வீகம் இந்தியாதான். இந்தியாவின் மிகப் பழைமையான நறுமணப் பொருள் இது. விலையுயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் மஞ்சள் நமக்குத் தருவதால், இதற்கு ‘ஏழை களின் குங்குமப்பூ’ என்கிற பெயரும் உண்டு.

உணவு 360 டிகிரி - ஒரு பொருள்... பல பயன்கள்... மஞ்சள் மகிமை - புதிய பகுதி 1

* இதிலுள்ள ‘குர்குமின்’ (Curcumin) என்ற வேதிப்பொருள்தான், உணவின் நிறத்தை மாற்றி, சுவையை ஏற்றி, உணவிலிருக்கிற நச்சுகளை நீக்குகிறது. இந்த குர்குமின், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது/

* காய்கறி மற்றும் கீரையுடன் மஞ்சள் தூளைச் சேர்த்துச் சமைத்தால், அவற்றிலிருக்கிற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிக்கப் பட்டுவிடும். அசைவ உணவுகளைச் சமைக்கும்போது மட்டுமல்ல, அவற்றைச் சுத்தம் செய்யும்போதும் மஞ்சளைப் பயன் படுத்த வேண்டும். அசைவத்தின் தேவையற்ற வாடை போவதுடன், அதிலிருக்கிற கண் ணுக்குத் தெரியாத கிருமிகளும் அழியும்.

* விரலி மஞ்சளை சுட்டு மோந்தால் தலைவலி, மூக்கடைப்பு சரியாகும்.

* சோற்றுக்கற்றாழையின் சோற்றை, மஞ்சள் பொடி தூவி விளக்கெண்ணெயில் வதக்கி, கட்டிகள் மேல் வைத்துக் கட்டினால், அவை விரைவில் அமுங்கிவிடும்.

* சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் குடல் புற்றுநோய் பாதிப்பு மிகக் குறைவு. அதற்கு காரணம், பெரும்பாலான இந்திய உணவுகளில் மஞ்சள் பொடி சேர்த்ததுதான். தற்போதைய துரித உணவுகளில் மஞ்சள் பொடி சேர்ப்பதில்லை என்பதையும், குடல் புற்று அதிகரித்திருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பி.மைக்கேல் செயராசு
பி.மைக்கேல் செயராசு

பி.மைக்கேல் செயராசு

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில், 1990-ம் ஆண்டு சித்த மருத்துவப் பட்டப் படிப்பை முடித்தார். மூலிகைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்வீகமாகக் கொண்ட அரியவகை மூலிகைகளை வளர்த்து ஆய்வு களையும் மேற்கொண்டு வருகிறார். ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி கடந்த 25 வருடங்களாக சித்த மருத்துவப் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் முயற்சிகளை முன் னெடுத்து வரும் இவர், பாபநாசத்தில் ‘அவிழ்தம்’ என்ற பெயரில் சித்த மருத்துவமனையை நடத்தி வருகிறார். ‘கற்ப அவிழ்தம்’ என்கிற சிறு பத்திரிகை யையும் கடந்த 30 வருடங்களாக நடத்தி வருகிறார்.