மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உணவு 360 டிகிரி - 11 - சமைக்கப்பட்ட இரும்பு இது!

வெந்தயம்
பிரீமியம் ஸ்டோரி
News
வெந்தயம்

ஒரு பொருள்... பல பயன்கள்... சொல்கிறார் சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு

* ‘வெந்த’ என்றால் ‘வேக வைக்கப்பட்ட’ என்று பொருள். ‘அயம்’ என்பது இரும்புக்கான தமிழ் கலைச்சொல். வெந்தயம் என்றால் `சமைக்கப்பட்ட இரும்பு' என்பது பொருள். அந்தளவுக்கு இதில் இரும்புச்சத்து அதிக மாக இருக்கிறது.

* ரத்தசோகை இருப்பவர்கள், ‘ஹீமோகுளோபின் அதி கரிக்கவில்லையே’ என்று வருத்தப்படுபவர்கள், 10 கிராம் வெந்தயத்தையும், 200 கிராம் பச்சரிசியையும் உப்பு போட்டு வேகவைத்துச் சாப்பிட்டு வரலாம்.

* இதே அளவு வெந்தயம், பச்சரிசியை மாவாக்கி, கருப்பட்டி சேர்த்து களிபோல கிண்டியும் சாப்பிடலாம்.

* இட்லி, தோசை மாவிலும் ஒரு கிலோ அரிசிக்கு 50 கிராம் வெந்தயம் சேர்த்து அரைக்கலாம்.

வெந்தயம்
வெந்தயம்

*வெந்தயம், கோதுமை இரண்டையும் சம அளவு எடுத்து தனித்தனியாக வறுத்து, பொடித்து, இரண்டிலும் அரைக்கரண்டி வீதம் எடுத்து, கருப்பட்டி சேர்த்து, கடுங்காப்பி போல தயாரித்து அருந்தினால் உடல் உஷ்ணம் குறையும்.

* `அமீபியாசிஸ்' பிரச்னையால் அவதிப்படுபவர்கள், 5 கிராம் வெந்தயப்பொடியை ஆறிய வெந்நீரில் போட்டு ஊறவைத்து, அருந்தி வந்தால் பிரச்னை குறையும்.

* டைபாய்டு, மலேரியா வந்தவர்களுக்கு குடல் புண் ணாகியிருக்கும். வெந்தயத்தை நெய்விட்டு வறுத்து, பொடித்து, சூடான சாதத்தில் போட்டுச் சாப்பிட்டு வந்தால், குடல் புண் விரைவில் ஆறும். கல்லீரல் மற்றும் மண்ணீரலில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் குறையும்.

 மைக்கேல் செயராசு
மைக்கேல் செயராசு

* மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, கறி வேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை ருசிக்கேற்ப எடுத்து, நெய்விட்டு வறுத்து, பொடித்து, அதனுடன் புளிக்கரைசலும் உப்பும் சேர்த்து, குழம்பு அரைப்பங்காக வற்றும் வரை கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு வராது. இதுதான் முறை யான வெந்தயக்குழம்பு செய்முறை.

* பாலூட்டும் தாய்மார்கள் 5 கிராம் வெந் தயத்தை வேக வைத்து, கடைந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பால் சுரப்பு அதிகமாகும்.

* குடம் புளி, சீமை அத்திப்பழம் இரண் டையும் நீர் விட்டு அரைத்து, சாறெடுத்து, அந்தச் சாற்றில் 5 கிராம் வெந்தயத்தை வேக வைத்து, கடைந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி, பித்த மயக்கம் சரியாகும்.

* வெந்நீர், சூடான எண்ணெய் போன்றவை உடல் மேல் தெறித்துவிட்டால், வெந்தயத்தை அரைத்துப் பூசினால் தழும்பில்லாமல் ஆறும்.

* வெந்தயம், சீமை அத்திப்பழம் இரண்டையும் நீர் விட்டு அரைத்து கட்டிகள் மேல் வைத்துக்கட்ட, அவை சீக்கிரம் பழுத்து உடையும்.