மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உணவு 360 டிகிரி - ஒரு பொருள்... பல பயன்கள்... 3 - புளி...

புளி
பிரீமியம் ஸ்டோரி
News
புளி

இது... குடம்புளி, தமரத்தம் புளி, சரக்கொன்றை புளி, கொடுக்காப்புளி, பொந்தம்புளி, ஆனை புளி... சொல்கிறார் சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு

* தற்போது புழக்கத்தில் இருக்கிற புளி (Tamarind) 10-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அரேபிய வணிகர்கள் வழியாக இந்தியாவுக்குள் வந்தது. அதற்கு முன் புளிப்புச் சுவைக்காக நாம் பயன்படுத்தியது ‘குடம்புளி’யைத்தான்.

* மருத்துவ நூல்கள் புளி, பழம்புளி என்று இரண்டு வகைகளை பற்றி பேசுகின்றன. இதில் பழம்புளி என்பதை பழைய புளி என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், அந்நூல்கள் பழம்புளி என்று குறிப்பிடுவது குடம்புளியைத்தான்.

 மைக்கேல் செயராசு
மைக்கேல் செயராசு

* சங்க இலக்கியங்களில் பசும்புளி என்று குறிப்பிடப்படுவதும் குடம்புளியைத்தான்.

* புளியில் குடம்புளி, புளிச்சக்காய், தமரத்தம் புளி (ஸ்டார் ஃப்ரூட்), புளிமா, சரக்கொன்றை புளி, கொடுக்காப்புளி, பொந்தம் புளி, ஆனை புளி எனப் பல வகைகள் இருக்கின்றன.

* நாம் தற்போது பயன்படுத்தும் புளியைவிட, குடம்புளிதான் உடலுக்கு நல்லது. இது ரத்தத்தில் கொழுப்பு சேர விடாது; ரத்தக்குழாய்களிலும் கொழுப்பு படிய விடாது என்பதால் ஹார்ட் அட்டாக் வருவது பெருமளவு தடுக்கப்படும்.

* உணவில் குடம்புளியை, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடத்தில் ஐந்து கிலோ வரை உடல் எடை குறையும்.

* புளி அமிலத்தன்மை கொண்டது. குடம்புளியோ பழங்களைப்போல ஆல்கலைன் தன்மை கொண்டது. குடம்புளியைப் பயன்படுத்தினால் காய்ச்சல், வாந்தி, கண் நோய்கள், கை கால் வலி குணமாகும். பித்தம் கட்டுப்படும். மூச்சிரைப்பு வராது. பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெருக்காது.

* சித்த மருத்துவ நூல்கள் குடம்புளியை ‘தீதில்லாத புளி’ என்கின்றன.

* குடம்புளி காடுகளில்தான் அதிகம் காய்க்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் குடம்புளி அதிகளவில் விளைகிறது.

உணவு 360 டிகிரி - ஒரு பொருள்... பல பயன்கள்... 3 - புளி...

* ஆப்பிரிக்காவில் பொந்தம் புளி மரத்தின் தண்டுகளைக் குடைந்து தண்ணீர் சேமித்து வைக்கப் பயன்படுத்துகிறார்கள்.

* தமரத்தம் புளி (ஸ்டார் ஃப்ரூட்) மற்றும் புளிமா இரண்டும் ஊறுகாய் போடப் பயன் படுகின்றன.

* கோடைக்கால திருவிழாக்களில் கலந்துகொள்பவர்களுக்கு நீரிழப்பு ஏற்படாமல் தடுக்க கொடுக்கப்படும் பானகத்தில் புளி சேர்க்கப்படுகிறது.

* புளியம்பூவை நெய்விட்டு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நாவின் ருசியின்மை சரியாகும். இலையைத் தண்ணீருடன் கொதிக்கவைத்து ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி, வீக்கம் குறையும்.

* குடம்புளியை உடனடியாகக் கரைத்து சாறு எடுக்க முடியாது. வெந்நீரில் ஊறவைத்து, 12 மணி நேரம் கழித்து, கரைத்து, தண்ணீரை மட்டும் பயன்படுத்த வேண்டும். அதே நீரை மீண்டும் அடுத்த நாளும் பயன்படுத்தலாம். இப்படி ஒரு குடம்புளிப் பழத்தை மூன்று முறை பயன்படுத்தலாம்.