மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உணவு 360 டிகிரி - ஒரு பொருள்... பல பயன்கள்... 4 - எண்ணெய்... எது, யாருக்கு, ஏன்?

எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
News
எண்ணெய்

சொல்கிறார் சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு

* நல்லெண்ணெய், சிற்றாமணக்கு எண்ணெய் என இரண்டு எண்ணெய்கள் மட்டுமே ஒருகாலத்தில் புழக்கத்தில் இருந்தன.

* வசதி படைத்தவர்கள் மட்டுமே நல் லெண்ணெயைப் பயன்படுத்தினார்கள். விவசாய மக்கள் பயன்படுத்தியது விளக்கெண்ணெய் என்று அழைக்கப் பட்ட சிற்றாமணக்கு எண்ணெய்.

* இரவு நேரத்தில் விளக்கெரிக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்தியதால், ஆமணக்கெண்ணெய், ‘விளக்கெண் ணெய்’ என ஆனது.

 மைக்கேல் செயராசு
மைக்கேல் செயராசு

* சிற்றாமணக்கு நம்முடைய பூர்வீக வித்து. தற்போது இருக்கிற ஆமணக்கு வேளாண்துறையினர் 1950, 60-களில் அறிமுகப்படுத்தியது. இன்றைக்கும் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் சிற்றாமணக்கு பயிர் செய்யப்பட்டு வருகிறது.

* வேர்க்கடலை, மணிலாவில் இருந்து நம் ஊருக்கு வந்த தாவரம். அதிலிருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெயில் கெட்ட கொழுப்புகள் சில உள்ளன.

* 2011-ல் நடந்த ஆய்வு ஒன்று, பாமாயிலில் இருக்கிற கொழுப்பு ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் என்றது. நல்லெண்ணெய், சிற்றாமணக்கு எண்ணெய் இரண்டிலும் கெட்ட கொழுப்பு கிடையாது.

* சிற்றாமணக்கு எண்ணெயை ‘செக்கில் ஆட்டுதல்’, ‘காய்ச்சுதல்’ என இரண்டு முறை யில் தயாரிப்பார்கள். இதில், செக்கில் ஆட்டிய விளக்கெண்ணெயில் ‘ரிசின்’ (Ricin) என்கிற வேதியியல் நச்சுப்பொருள் இருக்கும் என்ப தால் அதை உணவில் சேர்க்கக்கூடாது.

* கடைகளில் விற்கப்படும் விளக்கெண்ணெ யும், இந்த சிற்றாமணக்கு எண்ணெயும் ஒன்றுதான். ஆனால், கடைகளில் விற்கப் படுவது செக்கில் ஆட்டியது என்பதால், மேல் பூச்சாக மட்டுமே பயன்படுத்த முடியும். ‘காய்ச்சுதல்’ முறையில் தயாரிக்கப்படும் விளக்கெண்ணெய்தான் உள்ளுக்கு சாப்பிட முடியும்; சமையலிலும் சேர்க்க முடியும். இது நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் சில கிராமங்களில் மட்டும்தான் புழக்கத்தில் இருக்கிறது.

* சிற்றாமணக்குச் செடிகள் வரப்பு ஓரங்களில் இருக்கும். 5 வருடங்கள் வரை பட்டுப் போகாது. வாரம் ஒருமுறை அதன் கொட்டை முத்துகளைச் சேகரித்து, தண்ணீரில் அவித்து, காயவைத்து, ஒன்றிரண்டாக இடித்து, தண்ணீரில் போட் டுக் கொதிக்க வைப்பார்கள். 2 மணி நேரத்தில் எண்ணெய் மேலே மிதக்கும். இதை அகப்பையால் சேகரித்து, மறுபடியும் காய்ச்சினால் நீரெல்லாம் வற்றி சிற்றா மணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) கிடைக்கும். இதை தாராளமாக உள்ளுக்கு சாப்பிடலாம்.

உணவு 360 டிகிரி - ஒரு பொருள்... பல பயன்கள்... 4 - எண்ணெய்... எது, யாருக்கு, ஏன்?

* சிற்றாமணக்கு எண்ணெய் சிறந்த மலமிளக்கி. வாயுத்தொல்லையும் மலச்சிக்கலும் வராமல் காக்கக்கூடியதும்கூட. நம் முன்னோர்கள் கொள்ளை நோய்களால் இறந்தார்களே ஒழிய, வாழ்வியல் நோய்களால் பெரும்பாலும் இறக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம் சிற்றாமணக்கு எண்ணெய் பயன்பாடுதான்.

* உட்கார்ந்தே வேலைபார்ப்பவர்களுக்குக் குடல் அசைவை ஏற்படுத்தி மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது விளக்கெண்ணெய்.

* துவரம் பருப்பு வேகவைக்கும்போது அதில், இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் விட்டால், பருப்பில் உள்ள வாயு நீங்கிவிடும்.

* உடல் சூட்டினால் வருகிற வயிற்றுக்கடுப்பு தீர, தொப்புளில் விளக்கெண்ணெய் விடலாம். தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும்.

* ஆசனவாயில் சிற்றாமணக்கு எண்ணெய் தடவ, கடுப்பு, புண், புழுக்கடி போன்றவை குணமாகும்.

* வலியுள்ள இடத்தில் சிற்றாமணக்கு எண்ணெயைத் தடவினால், வலி சரியாகும். துளசி, மிளகு சேர்த்த சிற்றாமணக்கு எண்ணெய்க்கு இன்று மிகப்பெரிய அளவில் பிசினஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.