Published:Updated:

How to: வால்நட்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது எப்படி? | How to eat walnut?

Walnut ( Pixabay )

இவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் எடை குறைப்பில் ஆரம்பித்து, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவும். மிகவும் பயனுள்ள இந்த வால்நட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.

Published:Updated:

How to: வால்நட்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது எப்படி? | How to eat walnut?

இவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் எடை குறைப்பில் ஆரம்பித்து, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவும். மிகவும் பயனுள்ள இந்த வால்நட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.

Walnut ( Pixabay )

உடலுக்கு நன்மை பயக்கும் உணவுகளில் வால்நட் முதன்மையானது. மூளையின் வடிவத்தில் இருக்கும் வால்நட் நினைவாற்றலுக்கும், மூளையின் செயல்பாடுகளுக்குமான ஆரோக்கிய பலன்களைக் கொடுக்கக்கூடியது. நார்ச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின், புரொட்டீன், இரும்புச்சத்து என வால்நட்டில் பல சத்துகள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் எடை குறைப்பில் ஆரம்பித்து, பல்வேறு செயல்பாடுகளுக்கும் உதவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பிச் சாப்பிடச் செய்யவும், தினசரி உணவில் இது சேரும் வகையிலும் வால்நட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.

Walnut
Walnut
Pixabay

1. ஊறவைத்த வால்நட்:
முந்தைய நாள் இரவு, இரண்டிலிருந்து மூன்று வால்நட்களை ஒரு கப் நீரில் ஊறவைத்து காலையில் அதைச் சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைவது சுலபமாக இருக்கும். சாதாரண வால்நட்டுடன் ஒப்பிடும்போது ஊறவைத்தவை செரிமானத்துக்கு எளிதாக இருக்கும்.

2. வால்நட் சட்னி:
தேவையான அளவு வால்நட்ஸை எடுத்து சிறிது வறுத்துக் கொள்ளவும். வறுத்த வால்நட்ஸுடன் பூண்டு, எலுமிச்சை பழச்சாறு, எண்ணெய், மிளகு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து வால்நட் சட்னி செய்யலாம். இதைத் தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடலாம். வாடிக்கையாகச் செய்யும்போது தொடர்ந்து வால்நட் உடலுக்குக் கிடைக்கப்பெறும்.

3. சாலட், சாண்ட்விச்:
வால்நட்ஸை நன்றாக வறுத்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்துவிடவும். இதைத் தேவையானபோது பொடித்தோ, அப்படியேவோ சாண்ட்விச் அல்லது சாலட்டுக்குள் சேர்த்துச் சாப்பிடலாம்.

4. ஸ்மூத்தி:
காலையில் அல்லது மாலை நேரத்தில் எடுத்துக்கொள்ளும் ஸ்மூத்திகளில், இரண்டிலிருந்து நான்கு வால்நட்ஸ்களைச் சேர்த்து அரைத்து ஸ்மூத்தி செய்யலாம்.

Walnut
Walnut
Pixabay

5. வால்நட் டாஃபிஸ் (Toffees):
வால்நட், தேன் மற்றும் கோகோ பவுடர் போன்றவற்றைச் சேர்த்து நல்ல பேஸ்ட் போன்று அரைத்து காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்து வைத்து விடவும். இதை பிரெட்டுடன் அல்லது தனியாக உணவு இடைவேளைகளில் எடுத்துக் கொள்ளலாம். சுவையான, ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும்.

வால்நட் நன்மைகள்:
- வால்நட் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக் குறையும்.
- மன அழுத்தம் குறைய உதவும்.
- டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வால்நட் சிறந்தது.
- எடைக் குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
- நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
- எலும்பு, பல் ஆரோக்கியம் மற்றும் கேச வளர்ச்சிக்கு உதவும்.