Published:Updated:

How to: உணவுகள் மூலம் எலும்புகளை வலுவாக்குவது எப்படி?| How To Increase Bone Strength By Food?

எலும்பு

நமது உடலின் கட்டமைப்பு எலும்புகளால் ஆனது. உடல் இயக்கத்துக்கே ஆதாரமாக விளங்கும் எலும்புகள் வலுவாக இல்லையென்றால், பல பிரச்னைகளைச் சந்திக்க நேரும். அன்றாட உணவுப்பழக்கத்தின் வழியே எலும்புகளை வலுவாக்குவது எப்படி?

Published:Updated:

How to: உணவுகள் மூலம் எலும்புகளை வலுவாக்குவது எப்படி?| How To Increase Bone Strength By Food?

நமது உடலின் கட்டமைப்பு எலும்புகளால் ஆனது. உடல் இயக்கத்துக்கே ஆதாரமாக விளங்கும் எலும்புகள் வலுவாக இல்லையென்றால், பல பிரச்னைகளைச் சந்திக்க நேரும். அன்றாட உணவுப்பழக்கத்தின் வழியே எலும்புகளை வலுவாக்குவது எப்படி?

எலும்பு

நமது உடலின் கட்டமைப்பு எலும்புகளால் ஆனது. உடல் இயக்கத்துக்கே ஆதாரமாக விளங்கும் எலும்புகள் வலுவாக இல்லையென்றால், நாம் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரும். நமது அன்றாட உணவுப்பழக்கத்தின் வழியே எலும்புகளை வலுவாக்குவது எப்படி என, ஊட்டச்சத்து நிபுணர் பிச்சையா காசிநாதன் விளக்குகிறார்.

``ஒவ்வோர் உணவிலும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்து மிகுந்திருக்கும். ஒரு உணவில் புரதம் மிகுந்திருக்கிறதெனில் இன்னொரு உணவில் கால்சியம் மிகுந்திருக்கும். இதனால் பொதுவாகவே அனைத்து ஊட்டச்சத்துகளும் நமக்கு வந்து சேர வேண்டும் என்பதற்காக, சரிவிகித உணவுப் பழக்கத்தையே பின்பற்றச் சொல்வோம்.

ஊட்டச்சத்து நிபுணர் பிச்சையா காசிநாதன்
ஊட்டச்சத்து நிபுணர் பிச்சையா காசிநாதன்

எலும்பை வலுவாக்குவதற்கு கால்சியம் மிகவும் அத்தியாவசியமானது. சூரிய ஒளி மூலம் நமக்குக் கிடைக்கும் வைட்டமின்-டி மற்றும் இரும்புச் சத்து ஆகியவையும் நமக்குத் தேவை. அதிகாலை மற்றும் மாலை நேர வெயிலை 20 நிமிடங்கள் வரை உள்வாங்கும்போது, அதன் புற ஊதாக்கதிர்கள் வழியாக விட்டமின்-டி நமக்குக் கிடைக்கப்பெறும்.

கால்சியம் மற்றும் இரும்புச்சத்தை நாம் உணவிலிருந்துதான் பெற முடியும். பால் பொருள்களில் கால்சியம் மிகுந்திருக்கிறது. பால், தயிர், வெண்ணெய் எனப் பால் பொருள்களை எடுத்துக் கொள்வதன் மூலம் கால்சியம் சத்தினைப் பெறலாம். மேலும், முருங்கைக் கீரை, அகத்திக்கீரை போன்ற கீரை வகைகளிலும், இறைச்சி வகைகளிலும் கால்சியம் சத்து அடங்கியிருக்கிறது.

கால்சியம்
கால்சியம்

கால்சியம் உடலுக்கு இன்றியமையாத சத்து. அதனை இளம் வயதிலேயே அதிகளவில் எடுத்துக்கொண்டால்தான் எலும்புகள் வலுவுற்று வளர்ச்சி நன்றாக இருக்கும். பருவமெய்திய பெண்களுக்கு உளுந்தங்களி கொடுக்கும் பழக்கம் முன்பு இருந்தது. உளுந்தை அரைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த களியைச் செய்வார்கள். உளுந்திலும், நல்லெண்ணெயின் மூலப்பொருளான எள்ளிலும் கால்சியம் அடங்கியிருக்கிறது. மேற்சொன்ன உணவுகளில் இரும்புச் சத்தும் அடக்கம். எள் உருண்டை, பிரண்டைத் துவையல் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

பேக் செய்து விற்கப்படும் யோகர்ட், சோயா மில்க், பாதாம் பால் ஆகியவற்றில் கூட கால்சியம் சேர்க்கப்பட்டிருக்கும். அவற்றை எடுத்துக் கொள்ளலாம். ராகியானது மகத்துவம் வாய்ந்தது. ராகி மாவில் களி, தோசை, அடை, கூழ் என எதையாவது செய்து வாரத்துக்கு ஒருமுறை சாப்பிடுவது நல்லது.

ராகி தோசை
ராகி தோசை

பதின் பருவமான 13 - 19 வயதிலேயே உடல் எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். எலும்பு வலுவில்லாமல் இருந்தால் வயதாகும்போது ‘ஆஸ்டியோ போரோசிஸ்’ என்று சொல்லப்படக்கூடிய எளிதில் எலும்பு உடையும் பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கவனம் தேவை.

எலும்பை வலுவாக்க உணவுப் பழக்கம் மட்டும் போதாது. போதுமான அளவுக்கு உடற்பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். ஜிம், நடைபயிற்சி, யோகா என ஏதாவது ஒன்றில் ஈடுபடுவது மிக அவசியம்” என்கிறார் பிச்சையா காசிநாதன்.