Published:Updated:

ஹெச்ஐவியை விரட்ட தொடர்ந்து போராடி வரும் மருத்துவத்துறை! | #WorldAIDS VaccineDay

எய்ட்ஸ் ( Pixabay )

எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்துவதற்கான தடுப்பூசி, இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

Published:Updated:

ஹெச்ஐவியை விரட்ட தொடர்ந்து போராடி வரும் மருத்துவத்துறை! | #WorldAIDS VaccineDay

எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்துவதற்கான தடுப்பூசி, இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

எய்ட்ஸ் ( Pixabay )

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் இன்று (மே 18) கடைப்பிடிக்கப்படும் நிலையில், பாதுகாப்பான முறைகளைக் கையாண்டு ஹெச்.ஐ.வி தொற்றில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1-ம் தேதி, உலக எய்ட்ஸ் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முகாம் நடத்துதல், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

எய்ட்ஸ்
எய்ட்ஸ்

அதேபோல், ஆண்டுதோறும் மே 18-ம் தேதி உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டியதன் தேவையையும், அவசியத்தையும் எடுத்துச் சொல்லும் வகையிலும், உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் அனுசரிக்கப் படுகிறது. இதற்காகத் தொடர்ந்து உழைத்து வரும் மருத்துவர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள, சென்னையைச் சேர்ந்த மருத்துவரும், ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானவர்களுக்காக இயங்குபவருமான மனோரமாவிடம் பேசினோம்... அவர் கூறுகையில், ``எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்துவதற்கான தடுப்பூசி, இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்புக்காகத் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு நன்றி சொல்லும்விதமாக, மே 18-ம் தேதியை உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினமாகக் கடைப்பிடிக்கிறோம்.

மருத்துவர் மனோரமா
மருத்துவர் மனோரமா

தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், நோய் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பவர்களுக்கு, முன்னெச்சரிக்கையாக, அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக‌ அறிவுறுத்தப்படுகிறது. இதுதவிர, மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.

மேலும், தாயிலிருந்து சேய்க்குப் பரவுதல், கர்ப்ப காலத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிதல், தொற்று உறுதி செய்யப்பட்டால் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு பாசிட்டிவ் எனத் தெரியவந்தால் அதற்கேற்ப தடுப்பு மருந்து வழங்கும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.

முன்பெல்லாம் நிறைய குழந்தைகள் ஹெச்.ஐ.வி தொற்றுடன் பிறந்தனர். ஆனால், இப்போது அதன் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது நிறைய பேர் ரத்தப் பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதில் ஹெச்ஐவி பாசிட்டிவ் என்று தெரிந்தால், அந்த ரத்த மாதிரியைத் தனியாக எடுத்து வைத்து கண்காணிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோயைத் தவிர்க்க, பாதுகாப்பான உடலுறவு குறித்தும், ஓரினச் சேர்க்கை பற்றியும் நிறைய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.

ஒருவர் எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகும்பட்சத்தில், அவருக்கு அதைத் தொடர்ந்து வேறுபல நோய்கள் வரலாம். அதில் புற்றுநோயும் ஒன்று. அதிக முறை அதிக நபர்களோடு உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு, கர்ப்பப்பையின் வாயிலில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

எய்ட்ஸ்
எய்ட்ஸ்
pixabay

எனவே, கவனமுடன் இருப்பது நல்லது. முன்னெச்சரிக்கையாக, தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுப்பது மற்றும் நோய் வந்த பின்னும் வாழ்நாளை எப்படி நீட்டிப்பது என்பது பற்றிய விழிப்புணர்வும் அதற்கேற்ற மருந்துகளும் வாழ்வியல் மாற்ற முறைகளையும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் மருந்துகளையும், முறையான உணவுப் பழக்கத்தையும் மேற்கொண்டால் எல்லோரையும் போல நீண்டநாள் வாழ முடியும். புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது” என்றார் மருத்துவர் மனோரமா.