Published:Updated:

Doctor Vikatan: கோவிட் தொற்றில் இருந்து மீண்ட பிறகு அசிடிட்டி பிரச்னை... தீர்வுகள் உண்டா?

அசிடிட்டி
News
அசிடிட்டி

கொரோனா தொற்றிலிருந்து குணமான பிறகும் தொடரும் உடல்நலக் கோளாறுகளை `லாங் கோவிட்' என்று குறிப்பிடுகிறோம். இந்த பாதிப்பு பலருக்கும் இருப்பதைப் பல ஆராய்ச்சிகள் உறுதிசெய்திருக்கின்றன.

Published:Updated:

Doctor Vikatan: கோவிட் தொற்றில் இருந்து மீண்ட பிறகு அசிடிட்டி பிரச்னை... தீர்வுகள் உண்டா?

கொரோனா தொற்றிலிருந்து குணமான பிறகும் தொடரும் உடல்நலக் கோளாறுகளை `லாங் கோவிட்' என்று குறிப்பிடுகிறோம். இந்த பாதிப்பு பலருக்கும் இருப்பதைப் பல ஆராய்ச்சிகள் உறுதிசெய்திருக்கின்றன.

அசிடிட்டி
News
அசிடிட்டி

Doctor Vikatan: கோவிட் இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸும் போட்ட பிறகு, 2022 மார்ச் மாதம், எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல், ஒருநாள் காய்ச்சல் மற்றும் நான்கைந்து நாள்கள் தொண்டைச் சளி மற்றும் இருமல் இருந்ததால், மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டேன். அதன் பிறகு, உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் ஏழெட்டு வருடங்களாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அசிடிட்டி உடனடியாக ஆரம்பித்துவிட்டது.

முக்கியமாக நெஞ்சுப்பகுதியில், வயிற்றில் இருந்து ஓர் அழுத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. மேலும் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் எனப்படும் அமிலம் எதுக்களிக்கும் பிரச்னை காரணமாகத் தொண்டைப் பகுதியில் கரகரப்பும் வறட்சியும் இருக்கின்றன. தவிர்க்க முடியாத சமயங்களில் குளூட்டன் உணவு எடுத்தால் ஆறு மணிநேரத்துக்கு மேல், இதய படபடப்பு மற்றும் நெஞ்சு கரிப்பும் உள்ளது. மருத்துவரிடம் கேட்டபோது கோவிட் தொற்றுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். என் உடல் மறுபடியும் பழைய நிலையை அடைய தீர்வுகள் உண்டா?

- Siva, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி

Doctor Vikatan: கோவிட் தொற்றில் இருந்து மீண்ட பிறகு அசிடிட்டி பிரச்னை... தீர்வுகள் உண்டா?

தடுப்பூசிகள் என்பவை கோவிட் தொற்று தீவிரமடைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. கொரோனா தொற்றிலிருந்து குணமான பிறகும் தொடரும் உடல்நலக் கோளாறுகளை `லாங் கோவிட்' என்று குறிப்பிடுகிறோம். இந்த பாதிப்பு பலருக்கும் இருப்பதைப் பல ஆராய்ச்சிகள் உறுதி செய்திருக்கின்றன.

கோவிட் பாதித்து, அது பெரிய பாதிப்புகளைக் கொடுக்காமல் குணமானவர்களுக்கும் சரி, நுரையீரல் பாதிப்பு உட்பட தீவிர பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் சரி, இந்த லாங் கோவிட் பாதிப்புகள் ஏற்படுவது உறுதியாகியிருக்கிறது.

இதனால்தான் கோவிட் தொற்று வந்தவர்களுக்கு இணை நோய்கள் ஏதும் இல்லாவிட்டால்கூட, தொற்று பாதித்ததில் இருந்து சில வருடங்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது. ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பது, ரத்த அழுத்த அளவு அதிகரிப்பது எனச் சில பிரச்னைகள் கோவிட் தொற்று பாதிப்புக்குப் பிறகு தீவிரமாகலாம்.

அசிடிட்டி
அசிடிட்டி

சாதாரண முடி உதிர்வில் தொடங்கி, இதயம், மூளை, சிறுநீரகம் என உறுப்புகளை பாதிக்கும் பெரிய பிரச்னைகள்வரை லாங் கோவிட் பலவிதமான இன்னல்களை ஏற்படுத்தலாம். உங்களுக்கு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் பிரச்னைகளும் லாங் கோவிட் பாதிப்பின் தொடர்ச்சியாகவே தெரிகின்றன.

எனவே, இப்போது உங்களுக்கு என்ன பிரச்னைகள் இருக்கின்றன, அந்தப் பிரச்னைகளுக்கு என்ன காரணம் என்பதை அந்தத் துறைசார் மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கேற்ற சிகிச்சைகள் எடுத்தாலே குணமாகலாம். கவலை வேண்டாம்.