Published:Updated:

Doctor Vikatan: பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் தேவையா?

Vaccination
News
Vaccination

தடுப்பூசி என்பதே குழந்தைகளுக்கானது மட்டும்தான் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் தேவை என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.

Published:Updated:

Doctor Vikatan: பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் தேவையா?

தடுப்பூசி என்பதே குழந்தைகளுக்கானது மட்டும்தான் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் தேவை என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.

Vaccination
News
Vaccination

Doctor Vikatan: தடுப்பூசிகள் என்றாலே அவை குழந்தைகளுக் கானவைதானே... இந்நிலையில் இப்போது பேசப்படும் ஃப்ளு தடுப்பூசி பெரியவர்களுக்கும் அவசியமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்...

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

தடுப்பூசி என்பதே குழந்தைகளுக்கானது மட்டும்தான் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் தேவை என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. கோவிட் பரவல் அதிகரித்து, தடுப்பூசி பற்றி பேச ஆரம்பித்த பிறகுதான் பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என்ற உண்மையைப் பலரும் ஏற்றுக்கொண்டனர்.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதயநோய்கள் , புற்றுநோய் போன்ற இணைநோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் இந்தத் தடுப்பூசி அவசியம்.

பணியிடங்களில் நெருக்கமான சூழல்களில் வேலை பார்ப்பவர்களும், அடிக்கடி மீட்டிங் அட்டென்ட் செய்கிறவர்களும், நிறைய பயணம் செய்பவர்களும் முன்னெச்சரிக்கையாக வருடம் ஒருமுறை ஃப்ளு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

அதே போல நிமோனியா வராமல் தடுக்கும் Pneumococcal தடுப்பூசியும் மிக முக்கியமானது. 60 வயதுக்கு மேலான அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம். 40 வயதுக்கு மேலுள்ளவர்கள் இணை நோய்கள் இருந்தால் இதைப் போட்டுக்கொள்ளலாம்.

தடுப்பூசி
தடுப்பூசி
மாதிரிப்படம்

கோவிட் பெருந்தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலருக்கும் நிமோனியா பாதித்த செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். அதாவது, இந்த பாதிப்பில் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படும். அது, தீவிரமானால் உயிருக்கே ஆபத்தாகலாம்.

குழந்தைகளையும் நிமோனியா பாதிக்கும் என்றாலும் 60 வயதுக்கு மேலானவர்களும் இணை நோய்கள் உள்ளவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது இன்றைய தொற்றுச்சூழலில் மிகவும் பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.