Published:Updated:

Doctor Vikatan: எப்போதும் தொடரும் மூச்சு வாங்கும் பிரச்னை... காரணம் என்னவாக இருக்கும்?

மூச்சுப் பயிற்சி
News
மூச்சுப் பயிற்சி ( representational image )

மூச்சு வாங்குவது, மூச்சு விடுவதில் சிரமம் என்பது பல காரணங்களால் வரலாம். மூக்கடைப்பு, நாசித்துவாரத்தில் சதை, மூக்குத் தண்டு வளைந்திருப்பது, நுரையீரல் பிரச்னை, சைனஸ் பாதிப்பு, ஆஸ்துமா, இதயம் தொடர்பான பிரச்னைகள், சிறுநீரகங்களில் பிரச்னை போன்றவற்றால்கூட மூச்சு வாங்கலாம்.

Doctor Vikatan: என் வயது 67. எனக்கு சாதாரணமாகவே மூச்சு வாங்குகிறது. தினமும் பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி செய்கிறேன். அப்படியும் மூச்சு வாங்க காரணம் என்ன? இதற்கு ஏதேனும் சிகிச்சைகள் உண்டா?

- Manickavelu Sadhanandham, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

பூங்குழலி
பூங்குழலி

மூச்சு வாங்குவதாக நீங்கள் குறிப்பிடுவது பொதுப்படையானதாக இருக்கிறது. மூச்சு வாங்குதலில் பல வகைகள் உள்ளன. உங்கள் வயது 67 என்று குறிப்பிட்டிருப்பதால் வயதை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்றவை உள்ளனவா என்று தெரிய வேண்டும்.

அப்படி எந்தப் பிரச்னைகளும் இல்லை என்றாலும் உங்களுக்கு இதயம் தொடர்பான ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா, நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா, ரத்தச் சோகை இருக்கிறதா என்றெல்லாம் உங்கள் மருத்துவரை அணுகி உறுதி செய்துகொள்வது அவசியம்.

பொதுவாகவே மூச்சு வாங்குவது, மூச்சு விடுவதில் சிரமம் என்பது பல காரணங்களால் வரலாம். மூக்கடைப்பு, நாசித்துவாரத்தில் சதை வளர்ச்சி, மூக்குத்தண்டு வளைந்திருப்பது, நுரையீரல் பிரச்னை, சைனஸ் பாதிப்பு, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள், இதயம் தொடர்பான பிரச்னைகள், சிறுநீரகங்களில் பிரச்னை போன்றவற்றால்கூட மூச்சு வாங்கலாம்.

Lungs
Lungs

இந்தப் பிரச்னை உங்களுக்குத் தொடரும் பட்சத்தில் மருத்துவரை அணுகி, சரியான காரணம் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்வதுதான் சரியானது. இதுவாகத்தான் இருக்கும் என நீங்களாக ஓர் அனுமானத்தில் சுய வைத்தியம் செய்யாதீர்கள்.

எனவே, இதன் தீவிரம் அறியாமல் அலட்சியப்படுத்தாதீர்கள். ஒரு தளத்தில் கேள்வி கேட்டு, பதில் பெற்று தீர்வு காணக்கூடிய பிரச்னையல்ல இது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.